ராட்சச கிரேன் விபத்தாலும் கொரோனாவாலும் நிறுத்தப்பட்ட "இந்தியன்-2'’ ஷூட்டிங்கை தேர்தலுக்குப் பிறகுதான் ஆரம்பிக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா முடிவு செய்தது. இதனால் கடுப்பான டைரக்டர் ஷங்கர், மூணு மொழிகளின் ஹீரோவை வைத்து வேற படத்தை எடுக்கப்போவதாக லைக்காவிற்கு ஜெர்க் கொடுக்கப் பார்த்தார். ஆனாலும் அசராத லைக்கா, தேர்தல் பிஸியில் ஹீரோ கமல் இருக்கார், இப்போதைக்கு ஃபாரினிலும் ஷூட் பண்ண முடியாது என்பதால், எலெக்ஷனுக்குப் பிறகுதான் என்பதில் ஸ்ட்ராங்காக இருந்தது.
இந்த மேட்டரையெல்லாம் கடந்த ஜன.06-08 தேதியிட்ட நக்கீரனில் ‘"லைக்கா டேக்கா! கடுகடு ஷங்கர்!' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். நாம் எழுதியது போலவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணை வைத்து ஆந்திர சினிமா தயாரிப்பாளரானதில் ராஜுவின் தயாரிப்பில் படம் டைரக்ட்பண்ணப் போவதாக கடந்தவாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் ஷங்கர்.
"தேர்தல் முடிந்த பின்தான் கமலின் கால்ஷீட் கிடைக்கும்' என்பதை ஒத்துக்கொண்ட ஷங்கர், இந்தப் படத்தை குறுகிய காலத்திற்குள் முடிக்கப்போவதாகவும் சொல்லிருக்கார்.
ஏன்னா ஆந்திர சினிமா தயாரிப்பாளர்களிலேயே சூப்பர் தில்லாக இருக்கும் தடாலடி பார்ட்டி தான் தில் ராஜு. ஐம்பது படத்துக்கு மேல் தயாரித்திருக்கும் தில் ராஜுவிடம் தெலுங்கு சினிமாவின் பெரிய பெரிய ஹீரோ-ஹீரோயின்கள், டைரக்டர்களெல்லாம் பவ்யமாகவும் மரியாதையுடனும் வேலை செய்வார்கள். சொன்ன தேதிக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் தில்லாக இருப்பார் ராஜு.
இங்கே வருடக்கணக்கில் ஷூட்டிங் நடத்தி ஆஸ்கார் ரவிச்சந்திரனையோ, லைக்கா சுபாஷ்கரனையோ பாடாய்படுத்திய ஷங்கரின் டெட் ஸ்லோ ஃபார்முலா தில் ராஜுவிடம் பலிக்காது. அதனால்தான் ராம்சரண் படத்தை குறுகிய காலத்திற்குள் முடித்துவிடுவேன் என முன்கூட்டியே சொல்லி பம்மியிருக்கிறார் ஷங்கர்.
ஏதாவது ஒரு ஹீரோயினுக்கு எப்ப வாவதுதான் இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தாலும் கிடைக்கும். ஆனா, இப்ப கோலிவுட்டில் புதுசா என்ட்ரியாகியிருக்கும் பிரியங்கா மோகனின் செமஸ்பீடைப் பார்த்து, ஏற்கனவே என்ட்ரியாகியிருக்கும் இளம் ஹீரோயின்கள் "அடேங்கப்பா' என வாய் பிளக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "டாக்டர்'’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சென்னைப்பெண்ணான பிரியங்கா மோகன். அந்தப் படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே சுபாஷ்கரனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘"டான்'’ படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் பிரியங்கா மோகன்.
"டான்'’’ ஷூட்டிங் ஆரம்பமாகியிருக்கும் நிலையில்... இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் டைரக்ட்பண்ணும் சூர்யா படத்திலும் ஹீரோயினாகிவிட்டார் பிரியங்கா. இந்த மூணு படங்களின் டைட் ஷெட் யூலுக்கிடையே ‘"டிக்டாக்'’ என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
"காமெடி கலந்த ஹாரர், ஹாரர் கலந்த காமெடி, அடல்ட் ஹாரர் காமெடி, ஒன்லி ஹாரர்...' என டிசைன் டிசைனாக படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அந்த டிசைன்களில் ஒன்றான காமெடி கலந்த ஹாரர் படம்தான் ‘"டிக்டாக்'.
பெரிய மால் ஒன்றில் ஆடியன்சை ஈர்ப்பதற்காக பேய் வீடு செட்போட்டு திகில் காண்பிக்கிறது ஒரு டீம். அந்த செட் வீட்டுக்குள் நிஜமாகவே பேய் ஒன்று என்ட்ரியான பின் நடக்கும் சம்பவங்களைத்தான் "டிக்டாக்'’ படமாக எடுத்து முடிச்சு, வருகிற மார்ச்சில் ரிலீஸ்பண்ணப் போறார்களாம். படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணியிருக்கார் மதன். ‘"மூடர்கூடம்'’ படத்தின் ஹீரோவான ராஜாஜி டபுள் ஆக்ட் ஹீரோ வாகவும், சுஷ்மா ராஜ் ஹீரோயினாகவும், பிரியங்கா மோகன் வெயிட்டான ரோலிலும் நடித்துள்ளனர். கன்னடத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துள்ளவர் சுஷ்மா ராஜ்.