சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், பத்திரிகையாளர்களை 'டழ்ங்ள்ள்ற்ண்ற்ன்ற்ங்ள்' என்றும் "நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் குறித்தும், "திராவிட இயக்க தமிழர் பேரவை'யின் சுப. வீரபாண்டியன் குறித்தும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்து களுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

raja

மனுஷ்யபுத்திரன்:

Advertisment

mm

தமிழகத்தில் ஹெச்.ராஜா முக்கியமான அரசியல் தலைவரா? இல்லை, பா.ஜ.க.வில் முக்கியமான தலைவராக இருக்கிறாரா? அவர் பத்திரிகையாளர்களை சந்திக் கிறார் என்றால் அவர் முன்பு ஏன் 50 மைக்குகள் வைக்கப்படு கிறது. பத்திரிகையாளர்களை அவர் இப்படி பேசும்போது ஏன் அவரை எதிர்த்து ஒரு பத்திரிகையாளர்கள் கூட கேள்வி எழுப்பவில்லை. கேட்கலாமே, தவறு கிடையாதே? சுப.வீ.யை பற்றி மோச மாக பேசியிருக்கிறார். என்னைப் பற்றியும் சமீபத்தில் பல அவதூறுகளை தொடர்ந்து பேசிவந்தார். தி.மு.க. சார்பு எடுத்தோம் என்பதற்காக கொலை மிரட்டல், உடல்ரீதி யான தாக்குதல்கள் என நானும், சுப.வீ. எல்லாம் தொடர்ந்து பல அவமானங்களை சந்தித்துவருகிறோம். அறிவாலய பிச்சைக் காரன் என்று என்னை சொல்லியிருக்கிறார் கள். இப்போது சுப.வீயையும் சொல்லி யிருக்கிறார்கள். நான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவன் அல்ல. இதுவெல்லாம் கருத்தா? பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு நாங்களும்தான் பதில் சொல்கிறோம். இப்படியா? வெறிநாய்கள் யார் போனாலும் குரைத்துக்கொண்டு ஓடும். அதனுடைய நோக்கம் குரைப்பது மட்டும்தான். ஹெச்.ராஜா போன்ற பொறுக்கிகள் வளர்வதற்கு ஊடகங்கள் முக்கிய காரணம். இதுபோன்ற நபர்களை ஊடகங்கள் புறக்கணிக்கவேண்டும்.

ந.செல்லத்துரை (வி.சி.க.):

Advertisment

cc

தமிழகம் பெரியார் மண். இங்கு பா.ஜ.க.வின் விஷவிதை முளைக்காது. இதனை தெரிந்துகொண்டு தான் ஹெச்.ராஜா போன்றோரை பா.ஜ.க.வினர் பேசவிடுகிறார்கள். பெரியார் குறித்து தரக்குறை வாக பேசியிருக்கிறார். கி.வீரமணி, திருமாவளவன், வைரமுத்து, சுப.வீரபாண்டியன், சீமான் உள்பட பலரை இப்படி பேசிவருகிறார். இப்போது பத்திரிகையாளர்கள் குறித்து பேசியிருக்கிறார். பா.ஜ.க.வின் நோக்கமே தமிழகத்தில் ஏதாவது ஒரு வகையில் பிரிவினைவாதத்தை தூண்டுவது, வெறுப்பு பிரச்சாரம் செய்வது. ஆட்சியாளர்கள் தான் இவரைத் தண்டிக்க வேண்டும். நாலாந்தர தெருப்பொறுக்கி போல் பேசி வரும் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால் தான் அந்த பொறுப்புக்கு அழகு. அப்படி நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால் ஹெச்.ராஜா பேச்சுக்கு அண்ணாமலையும் ஆதரவு என்றுதான் அர்த்தம்.

வழக்கறிஞர் பாலு:

balu

பொதுவாகவே அடுத்தவர்களை பற்றி பேசும்போது மிகவும் கேவலமான சொற்றொடர் களைப் பயன்படுத்தும் ஹெச்.ராஜா ஒரு இழிபிறவி. பா.ஜ.க. அவரை கழட்டிவிட்டு பலநாட்கள் ஆகிறது. பா.ஜ.க. என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு சக மனிதர்களை கேவலப்படுத்துவதை ஒரு மனநோயாளியைவிட கீழே இறங்கி பேசி வருவதைப் பார்க்கிறோம். 24 மணி நேரமும் பிராண்டுவதுதான் தன்னுடைய தொழில். யார் மேலே வேண்டுமானாலும் பிராண்டுவேன். ஆனால் ஒரு சிக்கல் வந்தது என்றால் நான் பேசல. என் அட்மின் பேசுனாங்க என்பதை ஒரு குல வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு தனிப்பட்ட நபரின் செயலால் சமூக நல்லிணக்கம், அமைதி என்பது மட்டுமல்லாமல் அரசியல் தரம் என்பது மிகவும் கீழாகவே போய்க்கொண்டி ருக்கிறது. இதற்கு முடிவு கட்ட நேரம் வந்து விட்டது என்று நான் நினைக்கிறேன். எந்த பத்திரிகைகள் மூலமாக செய்தி போக வேண்டுமோ அந்த பத்திரிகைகளை கொச்சைப் படுத்தி பேச வேண்டிய தேவை என்ன? அதற்கு விளக்கம் இல்லை. இது ஏன் தொடர்ந்து நடக்கிறது என்றால், இதை நாம் அனுமதித்துக் கொண்டி ருக்கிறோம். இப்படி அனுமதிப்பதால் இந்த மௌனத்தை அவர்கள் சம்மதம் என நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது களையப்பட வேண்டிய ஒரு அழுக்கு. கழுவி விடப்பட்ட மலம்.

ஊடகத்துறைக்கு பல சங்கங்கள் இருக்கின் றன. இப்படி கொச்சைப்படுத்துவதை நாங்கள் விடமாட்டோம் என சொல்லுவதற்கு ஏன் மனோபாவம் வரவில்லை என்று தெரியவில்லை. இந்நேரம் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். கண்டனம் தெரிவிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. சமூகத்தின் அமைதியை கெடுப்பது போன்றவற்றை 24 மணி நேரமும் வைத்திருப்பதுதான் உண்மை யான குண்டர்கள். இவர்கள் மீது எப்போது சட்டம் திரும்பப்போகிறது? அதற்கு ஏன் ஊடகத்துறை முன்னெடுக்கக்கூடாது?

அரசியல் விமர்சகர் சூர்யா சேவியர்:

dd

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்னவென்று அறிக்கை ஒன்றை தயார் செய்கிறார்கள். அந்த அறிக்கையில் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டிவிட்டு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் தோல்விக்கு முக்கியக் காரணம் ஊடகத்துறையில் இருக்கிறவர்களின் செயல்பாடு என குறிப்பிட்டு டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஊடகத்துறையை காலி பண்ணணும் என்று முடிவு எடுத்துதான் இது போன்ற தாக்குதல் களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆட்சி யினரால் சைபர் சைக்கோ என்று அழைக்கப் பட்டவர் எச்.ராஜா. நீதிமன்றத்தால், மனநோயாளியா என பரிசோதியுங்கள், மனநோயை சரிபண்ணிட்டீங்களா என்று சொல்லப்பட்ட நபர். நல்ல விளைவுகளை உருவாக்காத வார்த்தை கள் பலனற்றவை என்பார்கள். இவர் வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் அனைத்துமே சமூகத்தில் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அப்படிப்பட்ட நபருக்கு ஊடகத்தினர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவரது கட்சிக்குள்ளேயே அவரைப் பற்றி ஏராளமான பிரச் சினைகள் இருக்கிறது. அவர் சிட்பண்ட் ஆரம்பித்த காலத்திலேயே திருச்சியைச் சேர்ந்தவர்கள் 10 லட்சம் கொடுத்து ஏமாந்து, அவர் எம்.எல்.ஏ. வாக இருந்தநேரத்தில் அவரது வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்தார்கள். பின்னர் அந்த சிட்பண்டை மூடிவிட்டு ஓடியவர். செங்கல்பட்டு அருகில் ஒரகடத்தில் அவரது கட்சிக்காரரிடமே நிலத்தை ஆட்டையப் போட்டார். டி.வி. தொடங்குவதாகக் கூறி 20 லட்சம் பங்குகள் வாங்குவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது கட்சிக்குள் ளேயே இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கடைசியாக, சட்டமன் றத் தேர்தலில் செலவுக்கு 13 கோடி ரூபாய் கொடுத்தார்கள் என்று எஸ்.வீ.சேகரே பேசினார். அந்த பணத்தில் 4 கோடி ரூபாயை எடுத்து எச்.ராஜா வீடு கட்டிக்கொண்டார் என்று பா.ஜ.க. நிர்வாகியே புகார் கூறினார். ஒட்டுமொத்தத்தில் கட்சிக்குள்ளும் மதிக்கப் படாதவர். பிற கட்சியினராலும் மதிக்கப்படாதவர்.

விமர்சனம் என்பது வேறு. தரக்குறைவான வார்த்தை களை பயன்படுத்துவது என்பது வேறு. இப்படித்தான் இவர் பேசுகிறார். கடந்த ஆட்சியில் இதுபோன்று இவர் பேசிய போது, அமைச்சராக இருந்த ஜெயக்குமார், சைபர் சைக்கோ 2 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அதில் ஒன்று எஸ்.வீ. சேகர், இன்னொருவர் ஹெச்.ராஜா. இவர்கள் மீது எப்.ஐ. ஆர். பதிவு செய்யப்படும் என்றார். எப்.ஐ.ஆர். பதியப்பட் டது. ஆனால் இருவரும் நூலிழையில் தப்பித்துக் கொண்டி ருக்கிறார்கள். இன்றைய முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக தொடர்ந்து செயல்பட வேண்டுமானால் இதுபோன்ற சர்ச்சையான கருத்துக்களை கூறி சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கக் கூடிய ஹெச்.ராஜா, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டும். குறைந்தபட்சம் மனநல பாதிப்புக்கான சட்டம் ஏதாவது இருக்கிறதா என முயற்சி செய்து கைது செய்ய வேண்டும். இதுதான் தமிழ் சமூகத்திற்கு தி.மு.க. அரசு செய்யக்கூடிய கடமையாக நான் பார்க்கிறேன். எப்படி சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தாரோ, அப்படி யாராக இருந்தாலும் குற்றத்தில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இல்லாமல் கைது செய்ய தி.மு.க. அரசு தயாராக வேண்டும்.

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ்:

bb

இந்து மதத்தை வைத்து ஆட்சி அதிகாரத்தை சில மாநிலங்களில் பா.ஜ.க. பிடித்துவிட்டது. தமிழ்நாட்டில் அது எடுபடாது என்று டெல்லிக்கு செய்தி போகிறது. காரணம் ஸ்டாலின் அரசின் செயல்பாடு. இந்து அறநிலையத்துறை யில் சேகர்பாபுவின் செயல்பாடு, அமைச்சர் பி.டி.ஆரின் செயல்பாடு, பதிலடிகள் இந்து மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பயத்தில்தான் "கலைஞரைவிட டேஞ்சரஸ் ஸ்டாலின்' என ஹெச்.ராஜா சொல்கிறார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் என்று சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஹெச்.ராஜா மிகவும் கீழ்த்தரமானவர். பத்திரிகையாளர்களை திட்டியிருக்கிறார். பெண்களை மையப்படுத்தி திட்டியிருக்கிறார். நான் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறேன். ஆனால் அவர்கள் எதிர்த்து கருத்து தெரிவிப்பார்கள். விமர்சனம் செய்வார்கள். பா.ஜ.க. கட்சியில்தான், வீட்டுப் பெண்களை வைத்து பேசுவார்கள். சோஷியல் மீடியாவில் பதிவிடுவார்கள். பொது சிந்தனைக்கு, பொது அறிவுக்கு எதிராக இருப்பவர் ஹெச்.ராஜா. ஒரு குழந்தைகூட இவரை பார்த்து மதிக்காது. மீடியாக்கள் வெளிச்சத்தில்தான் ஹெச்.ராஜா வெளியே தெரிந்தார். அந்த மீடியாக்கள்தான் ஏன் அவரை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.