முல்லைப் பெரியாறு அணையில் ஜெயலலிதா அரசு நிலைநாட்டிய உரிமையை மு.க.ஸ்டாலின் அரசு, கேரளாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டதாகவும், இரு மாநில அரசுகளும் சேர்ந்து விவசாயிகளை வஞ்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, கொட்டும் மழையில், தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி. திடலில் நவம்பர் 9-ந் தேதி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடைகளுடன் திரண்டி ருந்தனர் தென்மாவட்ட அ.தி.மு.க.வினர்.

dam

"142 அடி வரை தண்ணீர் தேக்குவதற்கு உரிமை இருந்தும், அணையின் கொள்ளளவு ஏன் குறைக்கப்பட்டது' என்கிற ஓ.பி.எஸ்.ஸின் கேள்விக்கு, சென்னையில் பதில் அளித்தார் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். "அணையில் எந்தெந்த நாட்களில் எவ்வளவு தண்ணீர் தேக்கலாம் என்கிற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, மத்திய நீர்வள ஆணையம் நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. எனவே, சட்டப்படிதான் நாங்கள் தண்ணீரைத் திறந்துவிட்டோம்'' என்ற அமைச்சர், அணைப்பகுதியில் மரங்களை வெட்டு வது தொடர்பான அனுமதியை, கேரள அரசு ரத்து செய்தது தொடர்பான சர்ச்சைக்கும் பதிலளித்தார்.

"பேபி அணையில் 15 மரங்களை வெட்டு வதற்கு கேரள வனத்துறையின் முதன்மை வன பாதுகாவலர் பெஞ்சமின் தாமஸ் 5-ந் தேதி அனுமதி வழங்கினார். இப்போது கேரள வனத்துறையினர், "அனுமதி இல்லை' என்கிறார்கள். இது அந்த மாநில அமைச்சருக்கும் அலுவலர்களுக்குமான பிரச்சினை. அதில் நாங்கள் தலையிட விரும்ப வில்லை'' என்றார் அமைச்சர் துரைமுருகன்.

Advertisment

அதேநாளில், முல்லைப்பெரியாறு தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "126 ஆண்டு கள் பழமை வாய்ந்த முல்லைப்பெரியாறு அணைக் குப் பதில் புதிய அணை கட்டுவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்' எனத் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒன்றிய அரசின் சார்பில், கேரள அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், "பெரிய அணையை ஒட்டி யுள்ள பேபி அணையைப் பலப்படுத்தும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

dd

கேரளாவில் எதிர்க்கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமி ழகத்திற்கு எதிரான நிலையை மேற்கொண்டிருப்ப தால், ஆளும் மார்க்சிஸ்ட் அரசு, புதிய அணை தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள் ளது. கேரள சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி பேசும்போது, "புதிய அணை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அடுத்த மாதம் முதல்வர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை நடைபெறும்'' என்றார்.

Advertisment

"தமிழ்நாட்டின் 5 மாவட்ட விளைநிலங்களின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணையில் நமக்குள்ள உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது' என்பதையே விவ சாயிகள் வலியுறுத்துகின்றனர்.