திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் விருவீடு காவல்நிலைய சோதனைச் சாவடி முன் சில இளைஞர்கள் காக்கிகளைத் தாக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது சம்பந்தமாக நாம் விசாரணையில் இறங்கியபோது, "இளைஞர்களது தரப்பைச் சேர்ந்தவர்கள், “உசிலம்பட்டி அருகே நல்லுதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர் கள் மூன்று டூவீலர்களில் பழைய வத்தலக்குண்டு அருகேயுள்ள குரும்பப்பட்டியில் நடந்த திருமணத்திற்கு போய்விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே வைக்கப் பட்டிருந்த பேரிகார்டு மீது மோதி கீழே விழுந்தனர். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீசார் லோகநாதன் ஆகியோர் அந்த இளைஞர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் கீழே விழுந்த இளைஞர்களை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.

police

இதனால் அந்த இளைஞர்களுக்கும் போலீசாருக் கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. அதில் டென்ஷனான இளைஞர் கள் சிலர் சப் இன்ஸ்பெக்டரையும் போலீசாரையும் தென்னைமட்டை மற்றும் கட்டையால் தாக்கியிருக் கிறார்கள்'' என்கிறார்கள்.

நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனும், "டூவீலரில் வந்து பேரிகேட் தடுப்பில் மோதி கீழே விழுந்தவர்களை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக் கிறார்கள். இப்படி ஒரு சம்பவம் சோதனைச்சாவடியில் நடைபெறுவது தெரிந்து விருவீடு காவல்நிலைய போலீசாரும் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்து அந்த இளைஞர்களைத் தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒரு இளைஞருக்கு மண்டை உடைந்துவிட்டது. இதையெல்லாம் உடன்வந்த இளைஞர், தனது செல் மூலம் வீடியோ எடுத்திருக்கிறார். போலீசார் அதைக் கைப்பற்றி தாங்கள் தாக்கியதை அழித்து விட்டு, இளைஞர்கள் தாக்கியதை மட்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக் கிறார்கள். அதுபோல் புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் மூடி மறைத்துவிட்டனர். உண்மை வெளியே தெரியவேண்டும்'' என்றார்.

நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகனோ, "போலீசார்மேல் தவறில்லை. முழுக்க முழுக்க அந்த இளைஞர்கள் செய்த அராஜகம். மற்றபடி சம்பந்தப்பட்ட வீடியோவை அந்த இளைஞர்களிடமிருந்து வாங்கவுமில்லை;…அதை அழிக்கவுமில்லை. அப்பகுதியிலுள்ள தோட்டத்துக்காரர்கள் மூலமாக எங்களுக்கு அந்த வீடியோ கிடைத்தது''’என்கிறார்.

சேலம் அருகே போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி முருகேசன் வீடியோ வெளியாகி வைரலான நிலையில்... போலீஸ் மீதான இந்த தாக்குதல் வீடியோ வெளி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment