Skip to main content

சிறைக்குள் பிணமான வீரப்பன் கூட்டாளி!

Published on 22/04/2018 | Edited on 23/04/2018
சந்தன வீரப்பன் தனது சகாக்கள் நூற்றுக்கணக்கானோருடன் காட்டுக்குள் மிக ஆளுமையாக இருந்த காலகட்டம். அப்போது அதிரடிப்படை அமைக்கப்படவில்லை. வீரப்பனை பிடித்தே தீருவேன் என சபதமிட்டு காட்டுக்குள் முகாமிட்டு மலைமக்கள் பலரை தன் சித்ரவதை படலத்தில் வைத்திருந்தார் எஸ்.பி.கோபாலகிருஷ்ணன். வீரப்பன் எஸ்.ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Two of Veerappan's accomplices were acquitted

 

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் இரண்டு பேர், தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்டியப்பன் மற்றும் பெருமாளை விடுவிக்குமாறு அரசு விடுத்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்டார். 

 

சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 1987ம் ஆண்டு ரேஞ்சர் சிதம்பரம் மற்றும் அவருடன் சென்றவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கை ஈரோடு பங்காளப்புதூர் காவல்துறையினர் விசாரித்தனர். இந்தக் கொலை வழக்கில் வீரப்பன் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு நீதிமன்றத்தில் மூவருக்குமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கோவை மத்திய சிறையில் இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டு இருந்தனர். 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் அண்ணன் மாதையன் என்பவர் பாதுகாப்பு காரணங்களுக்காகச் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு மாதையன் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன்(53), பெருமாள்(59) ஆகியோர் நன்னடத்தைக் காரணமாகவும் கருணை அடிப்படையிலும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு விடுத்த பரிந்துரையினை ஏற்று ஆளுநர் கையெழுத்திட இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.