டந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் இ.பி.எஸ். சார்பில் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற ஒரே குரலை எழுப்பினர். ஓ.பி.எஸ். தரப்பிலோ பொதுக்குழுவே சட்ட விரோதமென்று வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார். இரட்டைத் தலைமைதான் வேண்டுமென்ற கருத்தையும் முன்வைத்தார். இந்த தலைமைகளுக்கு இடையேயான மோதலில் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் பலர் அவர்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

admk

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் கடந்த 27-ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்களிடம் தங்களுடைய இ.பி.எஸ். ஆதரவை அறிவித்திருந்தனர். ஆனால் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓ.பி.எஸ்.ஸின் விசுவாசியாகவும், வைத்திலிங்கத்தின் ஆதர வாளராகவும், இரட்டைத் தலைமை நிலைப் பாட்டிலும் உறுதியாக உள்ளார். எனவே அவரது திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி எழுந்துள்ளது. அந்த இடத்திற்கு இ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான ஆவின் கார்த்திகேயன், ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான கேபிள் ஜெ.சீனிவாசன் ஆகியோர் போட்டிபோட்டு வருகிறார்கள்.

அதில் கேபிள் ஜெ.சீனிவாசன், முன்பு அ.ம.மு.க. கழகத்திலிருந்து பிரிந்துவந்து, வெல்லமண்டி நடராஜன் ஆதரவில் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக வலம்வருகிறார். எனவே, திருச்சி மாநகர் மாவட்டப் பதவிப் அவருக்குக் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியாக உள்ளது. எடப்பாடிக்கு சீனிவாசன் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லாததால், இந்தப் போட்டியில் அவரைக் காண வாய்ப்பு மறுக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் ஆவின் கார்த்திகேயன், பதவியில் இருந்த காலத்திலும் சரி, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, தொண்டர்களைத் தொடர்ந்து அரவணைத்து வருவதோடு, கட்சி உறுப் பினர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து நன்மதிப்பைச் சம்பாதித்தபடி இருக்கிறார்.

Advertisment

admk

எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தி லிருந்தே ஆவின் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளராக இருந்து வருவதோடு இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். திருச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி வரும்போதெல் லாம் பிரமாண்டமான வரவேற் பினைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார். சமீபத்தில்கூட சென் னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு திருச்சியிலிருந்து மாநகர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் அவருடைய தலைமையில் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisment

admk

மேலும், தற்போது ஆவின் கார்த்திகேயன் தனிப்பட்ட முறையில் ஒரு அலுவலகத்தைத் திறந்து, ஒவ்வொரு தொண்ட ரையும் நேரில் சந்தித்துப் பேசி அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்து அவர்களைத் தட்டிக் கொடுத்து வலம்வருகிறார்.

தற்போதைய நிலைமையில் திருச்சி அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஆவின் கார்த்திகேயனே இந்தமுறை திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சித் தலைமைகளுக்குள் ஏற்பட்ட மோதல், பல்வேறு அ.தி.மு.க. நிர்வாகிகளின் எதிர் காலத்தையும் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது