மூகத்தின் அடித்தட்டில் இருக்கும் ஆதி திராவிடர்களின் நலத்துக்காகத் தொடங்கப்பட்டது ஆதிதிராவிடர் நலத்துறை. அத்துறையில் நடக்கும் ஊழல்கள், ஆதிதிராவிடர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் செய்துவிடும்போல என்ற முணு முணுப்புகள் சமீபகாலமாக எழத் தொடங்கியுள்ளன.

விடுதியே இல்லாத இடத்திற்கு பணியாளர் நியமனம், சமையலர் பணி நியமனத்தில் முறைகேடு, விடுதி உணவுக் கட்டணம், விடுதி மறுசீரமைப்பு, வாசிங்மிஷன் கொடுத்தல், மாணவர்களுக்கான ஊக்கத் தொகை, ஆசிரியர் பணியிட மாற்றம், கொரோனா காலத்தில் இறந்தவர்களுக்கான நிவாரணத்தொகை என அனைத்திலும் ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள்.

g

இவையனைத்துக்கும் அடிநாதமாக இருந்து வருபவர் முன்னாள் அமைச்சரின் சிறப்பு உதவியாளராக இருந்த ரவி. அமைச்சர் கோப்புகளின் கடிதத்திலும் கையொப்பங்கள் பெற்று எழிலகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஹேமலதா, ஆணையர் முனிநாதன் ஆகியோரிடம் ரகசிய ஆலோசனை செய்து பணிகள் நடை பெற்றுள்ளன.

Advertisment

"அனைத்து மாவட்டத்திலுமுள்ள சமைய லர்கள் பணி நியமனங்கள், ஆசிரியர்கள் பணி மாறுதல், பதவி உயர்வுகள் கருணை அடிப்படை யிலான வாரிசுப் பணி நியமனங்கள், விடுதிக் கட்டண பராமரிப்புப் பணிகள், புதிதாகக் கட்டப்பட்டுகின்ற டெண்டர்களை இறுதி செய்து வேண்டப்பட்ட வர்களுக்கு ஒதுக்கீடு செய்வது, விடுதிகளுக்கு வாசிங் மெஷின், பாய், தட்டு மின்விசிறிகள், விளக்குகள், மேஜைகள், பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை சரி செய்வதற்கான டெண்டர்கள், புதிதாக மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தளவாடச் சாமான்கள், புதிய கட்டடம் கட்டுவதற்கு... இவை அனைத் திற்கும் 30 சதவீதத்திற்கு கமிஷன் வராமல் எந்த காரியமும் நடக்காது'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

t

இப்படி ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக கட்டப்படும் அனைத்து கட்டடங் களுக்கும் கமிஷன், மாவட்ட இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக சென்னை உதவி செயற்பொறியாளர் கலைமோகன், அவரிடமிருந்து ஆணையரின் நேர்முக உதவியாளர் ஹேமலதா, ஆணையர் முனிநாதன், அமைச்சரின் பி.ஏ.வான ரவி மூலமாக முந்தைய அமைச்சருக்கு கொண்டுசெல்லப்படும்.

Advertisment

அதேபோல விடுதி உணவுக் கட் டணத்திற்கும் மாவட்ட விடுதிக்காப்பாளர் தலைவர் அல்லது செயலாளர் மூலமாக ஹேமலதா, ஆணையர் முனிநாதன் அமைச்சர் பி.ஏ. ரவி அமைச்சர் என கச்சிதமாக களம்கண்ட அனைத்து உயர்அதிகாரி கள் இன்னும் பழைய அமைச்சருக்கு தன் விசுவாசத்தைக் காட்டி வருகிறார்களாம்.

h

தமிழகம் முழுவதும் 1,325 அரசு விடுதிகள் இயங்கிவருகின்றன. இதில் சென்னையில் மட்டும் 24 விடுதிகள் இயங் குகின்றன. ஒவ்வொரு மாவட்ட ஆதிதிராவிடர் விடுதி மாணவர் களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாணவர்களின் உணவிற்காக அரசு குறைந்தபட்சமாக ரூ 2.5 கோடி வழங்குகிறது. மாவட்டங்களுக்கான உணவுக் கட்டணங்களை பிரித்துக் கொடுப்பது "டி' பிரிவைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அன்பழகன் தான். இந்த நிலையில் மாவட்டங்களில் இருந்து உணவுக் கட்டணத்திற்கான காசோலை ஆணையைப் பெற வருபவர்களிடம் 30 சதவீத கட்டணத்தை கழித்துக் கொண்டுதான் மீதித்தொகையை வழங்கு வார். ஆனால் முழுத்தொகையைப் பெற்றது போல கையொப்பம் வாங்கிக்கொள்வார்.

கொரோனா இரண்டு அலைகளின் போதும் விடுதிகளே இயங்காத சூழ்நிலையில் உணவுக் கட்டணங்களை பிரித்துக் கொடுத்து விடுதிகள் நடத்தப்பட்டதாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் உணவுக் கட்டணத்தில் மட்டுமே ரூ.100 கோடி வரை கொள்ளை யடித்துள்ளனர். இதனை மாவட்ட கருவூலங்களில் ஆய்வு செய்தாலே அம்பலமாகும்..

முன்னாள் அமைச்சருக்கும் ஆணையருக்கும் 100 கோடி வசூல் செய்துகொடுத்ததின் பலனாக ஆணையர் முனிநாதன், அன்பழகனுக்கு பதவி உயர்வு கொடுத்து திருச்சியில் பணியமர்த்திய பிறகும் மேலும் அதே பணியைத் தொடர்ந்து வந்துள்ளார்.

hostel

இந்த நிலையில் விடுதிச் சமையலர் பணிக்கு நியமனம் செய்யவேண்டும் என்றால் அரசு விதியின்படி அந்ததந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்தவேண்டும். அந்த விதியைமீறி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை போலி முகவரியின் துணையு டன் நபருக்கு 10 லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்துள்ளார்.

சென்னை, திருவள்ளூரைச் சேர்ந்த வர்களை திருச்சி மாவட்டத்திற்கு பணி நியமனம் செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் திருச்சி மாவட் டத்திலுள்ள துறையூர் பள்ளி மாணவர் விடுதியிலும், தேனி மாவட்டம் குன்னூ ரைச் சேர்ந்த செல்லப்பாண்டிஸ்வரி திருச்சி மாவட்டம் எரகுடி பள்ளி மாண வர் விடுதிக்கும் பணி நியமனம் செய்யப் பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வி செல்லாயபுரம் கிராமத்திலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்கப் பள்ளியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் மட்டும் 150 பேர் பணி நியமனத்திற்கு 15 கோடி ஊழல் நடந்துள்ளது.

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான பி.டி.சுந்தரம், சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிட அலுவலர் பணியில் இருந்தபோது சமைய லர் பணியிடங்களுக்கு அரசாணை இல்லாமலே 80 சமையலர்களை பணிக்கு நியமனம் செய்து அவர்கள் பணியிலும் சேராமல் பணத்தைப் பெற முடியாமலும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் பி.டி.சுந்தரை பணியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஆர்டர் கொடுத்த பிறகும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

hostel

எடப்பாடியின் ஆதரவில் இன்றும் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அந்த வழக்கு எண்: (வி.ஆர். எண்: 10148/2018/விஆர்/ஏடிடபுள்யூ/எஸ்.எல் 24.4.2018) இப்படி பெரம்பலூர் கிறிஸ்டி, தர்மபுரி கீதா, கிருஷ்ணகிரி சேதுராமன், அரியலூர் மெரினா, விழுப்புரம் சண்முகசுந்தரம், திருவண்ணாமலை கதிர்சங்கர் போன்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் அனைத்து மாவட்டத்திலும் இதேபோன்று வேட்டையாடி விளையாடியுள்ளனர்.

அப்படி 25 மாவட்டங்களுக்கு ஆணையரின் நேர்முக உதவியாளர்களை ஹேமலதா தேர்வுக் குழு சேர்மனாக நியமித்த நிலையில், மாவட்டம் முழுவதுமுள்ள சமையலர் 1000 பேர்களை நியமனம் செய்து அதிலும் ஒரு படிமேலே சென்று விடுதியே இல்லாத இடத்திற்கு விடுதிப் பணிக்கு ஆட்களை நியமித்துள்ளார். சமையலர் பணிக்கு 39 நபர்களுக்கு ஒரே ஆணையாக வழங்கப்பட்டதில் வரிசை எண் 5, 38, 39-ல் கூறப்பட்டுள்ள கடையம் மாணவியர் விடுதி ரா.சண்முகசுந்தரி, செங்கோட்டை கல்லூரி மாணவர் விடுதி ரா.அருணா, வள்ளியூர் கல்லூரி மாணவர் விடுதி சின்னப்பொண்ணு ஆகியோரை பணி நியமனம் செய்துள்ளனர்.

ஆண்கள் விடுதிகளுக்கு பெண்களையும் பெண்கள் விடுதிகளுக்கு ஆண்களையும் பணி நியமனம் செய்யக்கூடாது என்பது விதி. அந்த விதியை மீறி வரிசை எண் 4, 6, 10, 11, 12, 13, 16, 24, 25, 26, இடம் பெற்றுள்ள அனைவரும் பெண்கள். இவர்களை ஆண்கள் விடுதிக்கும். வரிசை எண் 5, 18, 19, 20, 22, 30-ல் உள்ள ஆண்களை, பெண்கள் விடுதிகளுக்கும் நியமனம் செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இறந்துபோனவர் களுக்கு நிவாரணத்தொகையாக வழங்கப்பட்ட 20 லட்சம் பணத்தைக் கொடுக்கமாலே, பணத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தது போன்று ஆதிதிராவிட நலத்துறையினர் ஏமாற்றி, அந்தப் பணத்தை பங்கு போட்டுக்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் சென்னை மாவட்ட ஆதி திராவிடர் ஆணையகத்தில் அமைச்சரின் தம்பி மகன் முப்பிடாதியை பணி நியமனம் செய்துள்ளனர். கொரோனா காலத்தில் மிக அத்யாவசியத்துறைகள் மட்டும் இயங்கினால் போதும் என்று முதல்வரே அறிவித்திருந்த நிலையில், கட்டாயமாக பணிக்கு வரவேண்டும் என மிரட்டி அவர்களின் மாதச் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

hostel

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் நேர்முக உதவியாளர் ஹேமலதாவிடம் கேட்டபோது, “"அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விடுதியில்லாத ஊருக்கு ஆட்களை பணிநியமனம் செய்ததற்கு நான் பொறுப்பாக முடியாது''’என்றார்.

ஆதிதிராவிடர் ஆணையர் முனிநாதன் இதுதொடர்பாக பேச மறுத்துவிட்டார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் அவர்களிடம் கேட்டபோது, “"இப்போது மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியின் திட்டங்களை மக்களுக்குச் கொண்டு சேர்க்கவேண்டியது அதிகாரிகளின் கடமை. அந்த கடமையைச் செய்யத் தவறியவர்களும், அதற்கு துணை போனவர்களும் தண்டிக்கப்படுவார்கள். உண்மை என்ன வென்பதை விசாரித்து அவர்களின் மீது நடவ டிக்கை எடுக்கப்படும்''’ என்றார்.