Skip to main content

ஜெயிலை விட கொடுமையா இருக்கே...!

Published on 13/04/2018 | Edited on 23/04/2018
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனிக்கு சென்னை மாநகரம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இந்த முறை காவிரிக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களால் தோனி மட்டுமல்ல ப்ராவோ, ரெய்னா உட்பட ஒட்டுமொத்த டீமே ஓட்டல் சிறைக்குள் அடைபட்டு கதறியிருக்கிறது என்கிறது கிரிக்கெட் உலக வட்டாரம். தோனியை கடந்த பத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி... அதிரடி காட்டிய தோனி!

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

dhoni

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள டாக்டர் பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் (Dr DY Patil Sports Academy) இன்று (21/04/2022) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது.

 

பின்னர், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்து வெற்றியடைந்தது. இறுதி நேரத்தில் கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் தோனி தனது அதிரடி ஆட்டத்தை காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு வெற்றி வாகை சூடிக்கொடுத்தார்.

 

 

Next Story

டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய துரைமுருகன்!!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

நடந்து முடிந்த பதினோராவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று சென்னை ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது. ஐதராபாத்துக்கு எதிரான இறுதி போட்டியில் அசால்ட்காக வெற்றி பெற்று கோப்பையுடன் நேற்று சென்னை திருப்பிய சென்னை அணிக்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து நேற்று இரவு ஐபிஎல் நிர்வாகம் சார்பில் சென்னையில் ஒரு நட்சத்திர விடுதியில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது அந்த விருந்தில் பல முக்கிய நிர்வாகிகள், பிரபலங்கள் கலந்துகொண்டு சென்னை அணியின் கேப்டன் டோனியை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

dmk

 

அந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் கலந்துகொண்டு டோனியை வாழ்த்தினார். அப்போது கேப்டன் டோனி சிஎஸ்கேவின் டோனி கையொப்பமிட்ட மஞ்சள் நிற டி-ஷர்டை துரைமுருகனுக்கு பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

 

என்னதான் தீவிரமாக அரசியல்களத்தில் துரைமுருகன் செயல்பட்டாலும் ஒரு கிரிக்கெட் மேட்சுகளை கூட அண்ணன் விடமால் பார்த்துவிடுவார் அந்த அளவிற்கு அவர் கிரிக்கெட் பிரியர் என்கின்றனர்  அவருக்கு நெருக்கமானவர்கள்.