"திருவள்ளூர் மாவட்டம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளாவின் மரணத்தில், கிட்டத்தட்ட காரணத்தை எட்டிப் பிடித்துவிட்டனர் போலீசார். ஜூலை 25-ஆம் தேதி போன் செய்த பள்ளி நிர்வாகத்தினர், மாணவி சரளாவை பூச்சி கடித்துவிட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாகவும் முதலில் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாணவி சரளாவின் அண்ணன் சரவணன், அம்மா முருகம்மாள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது, "சரளா மாடியிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளனர். மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி. சந்திரலேகா இருவரும்தான் மாணவி சரளா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

studentss

Advertisment

சரளாவின் அண்ணன் சரவணன் மப்பேடு காவல்நிலையத்தில், தங்கை சரளா கீழ்ச்சேரியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்துவந்ததாகவும், ஜூலை 25ம் தேதி காலை 7:50 மணியளவில் பள்ளி நிர்வாகத்திலிருந்து போன் வந்ததாகவும், அதில் பேசியவர் சரளாவை பூச்சி கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்தார். பள்ளி விடுதியில் விசாரித்த போது, சரளா மாடியிலிருந்து வழுக்கி விழுந்ததாக வும், பாத்ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்து வருகின்றனர். சரளாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது” எனப் புகாரளிக்க, காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.

ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கெல்லாம் சரளாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் பரவியது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், அப்பகுதியில் தேவையற்ற போராட்டம் நடக்காமல் கவனித்துக்கொண்டனர். மாணவி சரளா உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

நாம் விசாரித்தபோது சில தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்தன. சரளாவின் மரணம் நடந்த பள்ளி விடுதிக்கு முறையான அங்கீகாரம் இல்லை அது விடுதியே கிடையாது. அது இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் ஜெ.ஜெ. ஆக்டில் பதிவுசெய்யப்பட்ட ஹோம். பதிவு செய்யப்பட்ட இத்தகைய இல்லத்தில், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், செங்கல் சூளை போன்றவற்றில் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பர். இந்த இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் முதல் குழந்தைகளின் உணவு வரை அனைத்துச் செலவையும் அரசே வழங்கும். இதைத் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இங்கு தங்கியிருக்கும் 84 குழந்தைகளில் 50 குழந்தைகளுக்குத் தான் முறையான ஆவணங்கள் உள்ளன. பள்ளி வார்டன் ஷரீன், மாணவிகளை மிகவும் கொடுமைப்படுத்தி வேலை வாங்குவார் என் பதை நம்மிடம் சில மாணவிகளின் பெற்றோரே தெரிவித்துள்ளனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணையிலும் இது தெரியவந்துள்ளது. இந்த விடுதியை ஒருமுறைகூட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

st

Advertisment

பிரேதப் பரிசோதனையில் மாணவிக்கு பூச்சி கடித்ததாக எந்த அறிகுறியுமில்லை. மாணவிக்கு கடந்த மூன்று மாதங்களாக முறைதவறிய மாதவிடாய் இருந்துள்ளது. பி.சி.ஓ.டி. எனப்படும் ஹார்மோன் சுரப்பு பிரச்சனையே அதற்குக் காரணமாம். பிரேதப் பரிசோதனையில் பாலியல் அத்துமீறல் எதுவும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. மாணவியின் உடலில் கழுத்தைத் தவிர வேறெங்குமே காயம் ஏற்படவில்லை.

மாணவி சரளா, சம்பவம் நடந்த அன்று காலை 6:30 மணியளவில் சக மாணவிகளிடம் துணி காயவைக்கப் போவதாக அறைக்குச் சென்றுள்ளார். பின்னர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள, அதைக் காண நேர்ந்த மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டே விடுதி நிர்வாகிகளுக்குத் தெரியவந்துள் ளது. உதவிக் காவல் ஆய்வாளர் இளங்கோவன், டி.எஸ்.பி. சந்திரலேகா வந்த பின்தான் சரளாவின் உடலை தூக்கி லிருந்து இறக்கி மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர்.

மாணவியின் மரணத்திற்கு என்ன காரணம்?

மாணவியின் நோட்டில் காணப்பட்ட அம்பு துளைக்கும் இதயமும், அதிலிருந்த எம்.எஸ். இனிஷியல் குறித்தும் விசாரித்த போது ஓர் உண்மை தெரிய வந்தது. சரளாவின் அண்ணன் சரவணன் 2017-ல் வெள்ளாம் பள்ளியைச் சேர்ந்த வேறு சமூகப் பெண் மீனாவை திருமணம் செய்துகொள்கிறார். மீனாவின் தம்பியான மனோ ஜின் இனிஷியல் எம். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனாலேயே சரளாவை கீழ்ச்சேரி விடுதியில் தங்கிப் படிக்க சரளா வீட்டார் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஜூன் 15 முதல் சரளா அங்கு தங்கிப் படித்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுதியிலிருந்து வீட்டுக்கு போன் பேச அனுமதி உண்டு.

சம்பவம் நடந்த அன்று சரளாவும் மீனாவும் இந்த விவகாரத்தைப் பற்றிப் பேச இரவெல்லாம் சரளா அழுது கொண்டிருந்ததை சக மாணவி கள் பார்த்துள்ளனர். இந்த மன அழுத்தத்தினாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டிருக் கலாம் என போலீஸ் விசா ரணையில் தெரியவந்துள்ளது.