சிகலாவின் அக்கா மகனான பாஸ்கரனை வைத்து 2014-ல் "தலைவன்'’என்ற படத்தைத் தயாரித்தவர் சித்திரைச் செல்வன். டைரக்ட் பண்ணியவர் எஸ்.டி.ரமேஷ் செல்வன். ’தயாரிப்பு சித்திரைச் செல்வன்’ என டைட்டில் கார்டில் வந்தாலும் பணம் மொத்தமும் பாஸ்கரனுடையது தான். சிம்மாசனத்தில் கையில் சாட்டையுடன் பாஸ்கரன் உட்கார்ந்திருக்கும் போஸ்டர்களைப் பார்த்து பயங்கர கடுப்பானார் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா.

அவரின் அக்கினிப் பார்வை சித்திரைச் செல்வன் மீதும் ரமேஷ் செல்வன் மீதும் பாய ஆரம்பித்ததும் பார்ட்டிகள் இரண்டு பேரும் எஸ்கேப் பானார்கள். தனது சித்தி மூலம் ஜெ.வை லேசாக அமைதிப்படுத்தி ஒருவழியாக "தலைவன்'’ படத்தை ரிலீஸ் பண்ணினார் பாஸ்கரன். படத்தை சசிகலா வகையறாக்கள் பார்த்திருந்தாலே நாலு நாள் ஓடியிருக்கும். என்ன பண்றது, அதுக்கும் வழியில்லாம போனதால, மிகப்பெரிய நடிகரை கோலிவுட் இழந்துருச்சு.

அந்த தலைவனை எடுத்த வகையில் 6 கோடி ரூபாய் கணக்குக் காட்டினார் சித்திரைச் செல்வன். ஆறு கோடிக்கு நம்ம படம் ஒர்த் இல்லையே என நிஜமாகவே யோசித்த பாஸ்கரனின் செமத்தியான கவனிப்பால் தலைதப்புனது தம்பிரான் புண்ணியம் என ஓடியேவிட்டார் சித்திரைச் செல்வன்.

cinema

Advertisment

அந்த சித்திரைச் செல்வனும் "கள்ளத் துப்பாக்கி'’’ என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவனும் கூட்டணி போட்டு, இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெயர் சொன்னாலே போதும் கோலிவுட்டே அலறும் கிளாமர்பாம் ஸ்ரீரெட்டியை வைத்து, அவரின் வாழ்க்கை வரலாறு(??!!) கதையை சினிமாவாக எடுக்கப் போவதாக ஸ்ரீரெட்டியை வைத்துக்கொண்டு சென்னை பிரசாத் லேப் ஸ்டுடியோவில் அறிவித்தார்கள்.

அதுவரை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, அதிரடியைக் கிளப்பிவிட்டுக் கிளம்பிவிடும் ஸ்ரீரெட்டி, சென்னை வளசரவாக்கத்தில் பெரிய பங்களாவை வாடகைக்குப் பிடித்து நிரந்தரமாக இங்கேயே தங்க ஆரம்பித்தார். அப்ப தான் சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணி என்ற சினிமா ஃபைனான்சியர், ரெட்டியின் வலையில் வீழ்ந்தார், 40 லட்சத்துக்கும் மேல் இழந்தார். ஒரு ஆடி காரை ஸ்ரீரெட்டி ஆட்டையப் போட்ட பஞ்சாயத்தில், ஹைதரபாத் போலீசில் இருக்கும் தனது செல்வாக்கால் எஸ்.எஸ்.மணியை அரெஸ்ட் பண்ணி ஹைதரபாத்துக்கே தூக்கிக்கொண்டு போய்லாடம் கட்டி அனுப்பியது போலீஸ்.

இதனால் ரொம்பவே ஹேப்பியானார் ஸ்ரீரெட்டி. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடந்து முடிந்த நேரத்தில்தான் சித்திரைச் செல்வனைக் கழட்டிவிட்டு விட்டு, மதியழகன் என்பரை அமுக்கி, இணைத் தயாரிப் பாளராக்கினார் ரவிதேவன். இந்த காம்பினேஷனின் முக்கிய அஜெண்டாவே, "சினிமா சான்ஸ் தருவதாக என்னுடன் ’பெட் ஷேரிங்’ பண்ணிவிட்டு ஏமாற்றிவிட்டார்கள்' என நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது அதிரடி புகார்களை கிளப்பினார் ஸ்ரீரெட்டி. அந்த நால்வருமே ஒரு தொகையைக் கொடுத்து ஸ்ரீரெட்டியை அப்போதைக்கு ஆஃப் பண்ணினார்கள்.

இந்த நேரத்தில்தான் தொழில் ரீதியாக ஸ்ரீரெட்டியின் வெல்விஷர் மற்றும் எஸ்கார்டாக உள்ளே வந்தார் தென்மாவட்டத்தில் கோலோச்சும் சாதிக்கட்சி ஒன்றின் தலைவர். "ரெட்டி டைரி'ங்கிற படம் ஸ்டார்ட் ஆகி பத்து நாள்கூட ஷூட்டிங் நடந்திருக்காது. அந்த சாதிக்கட்சி பெரும்புள்ளியோ, ரெட்டியின் பெட்ஷேரிங் சினிமா புள்ளிகளான முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், விஷால் ஆகியோரை அப்ரோச் பண்ணினார்.

""படத்துல ஒங்க சம்பந்தப்பட்ட போர்ஷன் வந்தா பொழப்பு நாறிரும். அதெல்லாம் வராம ஸ்ரீரெட்டியை நான் கரெக்ட் பண்ணிக்குறேன், நீங்க என்னை கவனிங்க'' என அன்பாக மிரட்டி, கிட்டத்தட்ட 3 கோடியை வசூல் பண்ணிவிட்டாராம் அந்த பெரும்புள்ளி. இப்போதும் கோலி வுட்டில் பல தடாலடி கட்டப் பஞ்சா யத்துகளை நடத்தி கலெக்ஷன் கிங்காக இருக்காராம் அவர்.

இப்ப மேட்டர் என்னன்னா "ரெட்டி டைரி'’படத்தை எடுக்குற மாதிரி எடுத்து கலெக்ஷனும் ஓ.கே. ஆகிவிட்டதால், தமிழ், தெலுங்கில் சில்க் ஸ்மிதா பயோபிக்கை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப் போவதாகவும் மது என்பவர் டைரக்ட்பண்ணப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு அறிவித்து கிறுகிறுக்க வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

அதே சில்க் கதையை படமெடுக்கப்போவதாக நான்கைந்து மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமண னும் எச்.முரளியும் அறிவித்து ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனெல்லாம் நடத்தினார்கள்.

அது என்னாச்சுன்னு தெரியல, இப்ப ஸ்ரீரெட்டி சில்க் அவதாரம் எடுக்கப்போறார்.