Skip to main content

சிக்னல்!

Published on 07/04/2018 | Edited on 08/04/2018
தண்ணீர் தண்ணீர்! நாகை பூம்பூகார் தொகுதி சின்னங்குடியில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் மீன் இறக்குமதி தளத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அவருடன் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜும், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரும் வந்தனர். விழா முடிந்து புறப்பட்ட அவர்களை சின்னங்குடி சுனா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நியூஸ் க்ளிக் அலுவலகத்திற்கு சீல்!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

News click office seal

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்ததால் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

News reader to shed tears live!

 

கன்னட சினிமா நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு நேற்று (29.10.2021) காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியால் ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர். 

 

திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவுள்ளது.

 

News reader to shed tears live!

 

புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை நேரலையில் வாசித்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் துக்கம் தாளமுடியாமல் நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.