Skip to main content

கூத்து!

Published on 18/02/2018 | Edited on 19/02/2018
மந்திரி தரப்பு கேட்ட 4000 கிலோ கறி! செய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜு தன் மகள் திருமணத்தை 19ம் தேதி திருப்பதியிலும், ஆளும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை 21-ம் தேதியன்றும் வைத்தவர், உள்ளூர் மக்களும் தென் மாவட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மேஸ்திரி வேலை பார்த்து வாக்கு சேகரித்த கடம்பூர் ராஜு

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

 Kadampur Raju collected votes by working as a mason

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

அதிமுக, திமுக என சமரசம் இல்லாமல் இரு தரப்பினரும் பரோட்டா போடுவது, டீ போடுவது, துணிகளைத் துவைப்பது என நூதன முறைகளைப் பின்பற்றி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு ஆலமரத்துமேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அந்தப் பகுதியில் கட்டிட பணி நடைபெறும் இடத்திற்குச் சென்ற கடம்பூர் ராஜு கட்டிடத்திற்கு கற்களை எடுத்து வைத்து சிமெண்ட் பூசி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

 

 

Next Story

''கம்யூனிஸ்டுகள் மவுனம் சாதிப்பது ஏன்?''-கடம்பூர் ராஜு பேட்டி

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

"Why are communists keeping silent?" - Kadampur Raju interview

 

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் நடந்த பரப்புரைக்கு பின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சொன்ன வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இதை கூட்டணிக் கட்சிகளாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதை கண்டித்து அறிக்கை விடவில்லை. அவர்களை கண்டித்து கேட்பதற்கு திராணியில்லாமல் மவுனம் காப்பது ஏன்? உண்மையிலேயே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் இன்றைக்கு கூட்டணிக் கட்சிகள் இருக்கிறார்கள்''என்றார்.