Skip to main content

சிக்னல்-25!

Published on 22/04/2018 | Edited on 23/04/2018
தி.மு.க.வை சேர்த்துக்கொண்ட தினகரன் கட்சி! ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது டி.டி.வி. தினகரன் கட்சி என்று இன்றுவரை மேடைகளில் அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். "தி.மு.க.வுடன் உறவு எந்தக் காலத்திலும் இல்லை' என்று தினகரன் கட்சியினர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிநவீன சிக்னல்களின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்த காவல் ஆணையர்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

trichy city police commissioner sathyapriya new technology signal open ceremony

 

திருச்சியில் போக்குவரத்து வாகனங்கள் இடையூறின்றி செல்ல ANPR கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டது.

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, இ.கா.ப., திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

 

திருச்சி மாநகரில் அடிக்கடி விபத்து நடக்கக் கூடியதாகக் கண்டறியப்பட்ட 31 இடங்களில் (Hotspots) 10 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகரும் 31 இடங்களில் அடங்கும். இது தவிர சஞ்சீவி நகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் என்பதைக் கண்டறிந்து இதைச் சீர் செய்யும் பொருட்டும், விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும் வாகன எண்களைக் கண்டறியும் உயர் ரக தானியங்கி ANPR கேமராக்கள் - 2, கண்காணிப்பு  கேமராக்கள் - 6 மற்றும் ஒலிபெருக்கிகளுடன் கூடிய பொது விளம்புகை அமைப்பு (PA System) ஆகிய அம்சங்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியபிரியா, இ.கா.ப., நேற்று  (24.05.2023) காலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். இதுபோன்று திருச்சி மாநகரத்தில் குற்றம் நடக்காமல் தடுக்க அதிக அளவில் கேமராக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

trichy city police commissioner sathyapriya new technology signal open ceremony

இந்த விழாவில் காவல் துணை ஆணையர்(வடக்கு), மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர், ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து காவல் உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டார்கள். இவ்விழா முடிந்த பின்னர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் நீர் மோர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள். மேலும் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் நீர் மோர் வழங்கினார்.

 

trichy city police commissioner sathyapriya new technology signal open ceremony

திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சீராக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல் ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த சென்னை காவல் ஆணையர் (படங்கள்)  

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (15.03.2023) அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பில் சென்னை பெருநகர போக்குவரத்து  காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட வேகக் காட்சி பலகைகள், தானியங்கி சிக்னல், எல்.இ.டி போக்குவரத்து சுழற்சி செய்தி நிழற்குடை மற்றும் பல்நோக்கு செய்தி பலகைகள் ஆகியவற்றின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.