பா.ஜ.க. அண்ணாமலை கொடுத்த ஒரு பதவி, தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

vv

சென்னைக்குப் பக்கத்திலுள்ள செங்குன்றம், இந்தியா முழுவதுமிருந்து சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரும் லாரிகள் சங்கமிக்கும் இடம். செங்குன்றத்திற்கு பக்கத்தில் உள்ள பாடியநல்லூரில் மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்துவந்த குடும்பத்தில் பிறந்தவர்தான் மிளகாய்ப்பொடி வெங்கடேசன். "புஷ்பா' என ஒரு திரைப்படம் வந்ததே... அதில் நடித்த அல்லு அர்ஜுனின் அதே குணாம்சத்தைக் கொண்ட வெங்கடேசன், "புஷ்பா' பட பாணியிலேயே செங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஆந்திராவில் பிரபலமான செம்மரக் கடத்தல் தொழிலில் இறங்கினார்.

செம்மரக் கட்டை ஆந்திராவில் சில்லறை விலைக்குக் கிடைக்கும். அந்தக் கடத்தலில் ஆந்திராவில் புகழ்பெற்ற வர்கள் கங்கிரெட்டி மற்றும் சாகுல் ஹமீது. இவர்களைப் போலீசாரால்கூட நெருங்க முடியாது. ஆனால் மிளகாய்ப் பொடி வெங்கடேசன் நெருங்கிவிட்டார். "புஷ்பா' படத்தில் வருவதுபோல செம்மரங் களைக் கடத்தி இருவருக்கும் அனுப்பி வைத்தார். கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. பாடியநல்லூரில் அரண்மனை போன்ற வீடு, நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் கார்கள், ஏகப்பட்ட குடோன்கள். எதையும் செய்யும் ரவுடிகள் படை... என ஏகத்துக்கும் வளர்ந்தார்.

சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக், செம்மரக்கட்டைக் கடத்தல்காரர் பாஸ்கரின் மகளை காதலித்து திருமணம் செய்தார். வெங்கடேசன் தலைமையில் ஒரு பெரிய தரகர் கும்பலே அந்த திருமணத்தில் பங்கேற்றது. (நக்கீரன் அப்போதே இதைப் பதிவு செய்து செய்தி வெளியிட்டிருந்தது) இந்த திருமணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் வெயிட்டான பதவி வெங்கடேசனுக்கு கிடைத்தது. திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகியானார். அத்துடன் மா.செ.யான மாதவரம் மூர்த்திக்கு நெருக்கமானார்.

Advertisment

vv

ஆனால் அவரது போதாத நேரம், ஆந்திர அரசு அவரை சென்னை பாஸ்போர்ட் அலு வலகத்தில் வைத்து கைது செய்தது. செம்மரக் கடத்தல் டான்களான சாகுல்ஹமீது, கங்கிரெட்டி ஆகியோரைச் சந்திக்க விதவிதமான போலி பாஸ்போர்ட்டுகளில் வெளிநாட்டுக்கு வெங்க டேசன் சென்றுவந்தார் என ஆந்திர போலீஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் அவரது குடோன் களில் இருந்து ஏகப்பட்ட செம்மரக் கட்டைகளையும் பிடித்தது. அப்பொழுது நடத்தப்பட்ட தொடர் விசாரணையில்... மும்பை, கர்நாடகா, டெல்லி போலீசாரும் பங்கேற்றனர்.

ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரக் கட்டைகளை "புஷ்பா' பட பாணியில் பலவிதமான லாரிகளில் செங்குன்றத்திற்கு வரவைப்பதில் வெங்கடேசன் கில்லாடியாம். அவற்றை கொச்சி, மும்பை, கொல்கத்தா துறைமுகங்கள் வழியாக, ஜப்பான் மற்றும் சீனா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்வார் என மிளகாய்ப்பொடி வெங்கடேசனின் காரம் நிறைந்த பின்னணி பற்றி ஒட்டுமொத்த இந்திய காவல் துறையே அதிர்ந்துபோனது.

கோடிகளில் புரளும் இந்த வியாபாரத்தில் பல நாடுகளுக்கு டீல் பேசி செல்வது வெங்கடேசனின் வழக்கமாம். ஒரே பாஸ்போர்ட்டில் சென்றால் மாட்டிக்கொள்வோம் என விதவிதமான பாஸ்போர்ட்டுகளில் பயணித்த வெங்கடேசனை அந்த பாஸ்போர்ட்டுகளை வைத்தே அமுக்கிப் பிடித்த போலீசார், அதை ஒரு பெரிய திருவிழாவாகவே பிரஸ்மீட் வைத்து வீரப்பன் ரேஞ்சுக்கு கொண்டாடினர்.

Advertisment

vv

சில வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த வெங்கடேசனுக்கு அ.தி.மு.க. புளித்துவிட்டது. அவரிடமிருந்த பணம் மற்றும் அவர் மீது இந்தியா முழுவதும் இருந்த வழக்குகள், அவரை புதிய முகவரியைத் தேட ஆரம்பிக்க வைத்தன.

ரவுடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் அவருக்கு அர்ஜுன் சம்பத் நட்பு கிடைத்தது. அர்ஜுன் சம்பத் அவரை அண்ணாமலைக்கு அறிமுகப்படுத்தினார். அண்ணாமலை மிளகாய்ப் பொடி வெங்கடேசனை கே.ஆர்.வெங்கடேசன் என பெயர் மாற்றி, பா.ஜ.க.வின் மாநில பிற்படுத் தப்பட்டோர் பிரிவு தலைவர் பதவியை அளித்தார்.

"புஷ்பா'வுக்கு பதவியா? என போலீசார் அதிர்ந்துபோனார்கள். சமூகவலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் பறந்தது. மத்திய உளவுத்துறை அமித்ஷாவிடம், சர்வதேச செம்மரக் கடத்தல் காரன் பா.ஜ.க.வில் பதவி பெற்றதைச் சொல்லி எச்சரித்தது. அமித்ஷா, அண்ணாமலையைக் கூப்பிட்டு திட்டினார். இதனால் வெங்கடேசனின் பதவியை பறித்துவிட்டார் அண்ணாமலை. ஆனால் வெங்கடேசன் "நான் மீண்டும் பதவியை வாங்கு வேன்' என சபதம் செய்ததோடு, அண்ணாமலை எங்கு பொதுக்கூட்டம் நடத்தினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறாராம். இது எங்கு போய் முடியுமோ? என போலீசாரும் பாஜ.க.வினரும் கலக்கத்திலிருக்கிறார்கள்.