பூ, புஷ்பம், மலர்... இந்த மூன்று வார்த்தையும் ஒரே பொருளைக் குறிப்பதுதான். அதே போல் உண்மையும் நிஜமும் ஒரே அர்த்தம்தான். சினிமா மேட்டருக்கு ஏங்க இவ்வளவு இலக்கண விளக்கம்னு நீங்க யோசிக்கிறதுக்குள்ள சினிமாவான உண்மைச் சம்பவங்களைப் பற்றியும் சினிமா உலகில் சந்தித்த நிஜ அனுபவங்களையும் பற்றி எழுத ஆரம்பிச்சுட்டோம்.

மாறிவிட்ட மனித வாழ்க்கை!

தமிழக கிராமத்து மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது கால் நடை வளர்ப்பு. ஆடு, மாடு, கோழி, நாய் என அனைத்து ஜீவராசிகளும் அம்மக்களின் குடும்பத்து உறுப்பினர்கள் போலவே வளரும், உழைக்கும், மடியும். இப்போது சூழ்ந்துவிட்ட நாகரிக வளர்ச்சியாலும் உலகமயமாக்கலால் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியாலும் செயற்கையான தண்ணீர்ப் பஞ்சத்தாலும் ஒருவர் கால்நடைகளை வளர்த்தால், அவரையும் கால்நடையாகவே பார்க்கும் காலமாகிவிட்டது.

இந்த உண்மைகளை யும் குழந்தை தொழிலாளர்களின் வேதனையையும் கருவாகக் கொண்டு தயாராகிறது "என்றாவது ஒருநாள்'’படம். வெற்றி துரைசாமி என்னும் புதியவர் டைரக்ஷனில் விதார்த்-ரம்யா நம்பீசன் ஜோடி கொங்கு மண்டல மொழி பேசி நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டைரக்டர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவினரை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளார்.

Advertisment

சிதைக்கப்படும் சிறுமிகள்!

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை பதை பதைப்பில் ஆழ்த்துகிறது. அதிலும் சிறுமிகளை சிதைக்கும் கொடூரன்களை நினைத்தால் ஈரக்குலையே நடுங்குகிறது. மிக சமீபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் பச்சிளம் பெண் குழந்தை சிதைக்கப் பட்டு, மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற கொடிய மிருகத் திற்கு தண்டனை வழங்க வேண்டும் தமிழ்நாடே கொந்தளித்தது.

இதையும் இதுபோன்ற இன்னும் சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து, கொடைக் கானலில் கதை நடப்பதுபோல் எடுக்கப் பட்ட படம்தான் ‘"அகடு'. தி.மு.க. ராஜ்ய சபா எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனின் மருமகன் ஜான்விஜய் லீட் ரோலில் நடிக்க, ஸ்ரீராம் கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக டைரக்டர் எஸ்.சுரேஷ்குமார் டைரக்ட்பண்ணி, சென்னை அ.தி.மு.க. புள்ளியான விடியல் ராஜு தயாரித்துள்ள இப்படம் டிசம்பரில் ரிலீசாகிறது.

Advertisment

cinema

வீடியோகால் வில்லன்கள்!

ஆம்பளயா இருந்தாலும் பொம்பளயா இருந்தாலும் சரி ஃபேஸ்புக்ல இருந்தமா, பார்த்தமான்னு போயிரணும். அதவிட்டுட்டு லைக் போடுறேன், கமெண்ட் போடுறேன், ஸ்நாக் வீடியோ போடுறேன்னு போனா தொலஞ்சுது வாழ்க்கை.

கன்னியாகுமரி காசி என்ற காவாலிப்பயகிட்ட அப்படி மாட்டிக்கிட்டு இப்ப ஐயோ போச்சே, அம்புட்டும் போச்சேன்னு பெரிய இடத்துப் பெண்கள் ஒப்பாரி வைப்பது ஃபேஸ்புக் காமுகர்களின் இன்னொரு ஃபேஸை காட்டிக்கொண்டிருக்கிறது. இதே ஆபத்துதான் வீடியோ காலில் பேசும் போது இருக்கிறது.

இந்த வீடியோகால் வில்லன்களையும் விபரீதங்களையும் பற்றிச் சொல்லும் படம் தான் ‘"அல்டி'. நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மனிஷா ஜித். ஷேக் முகமது, ரஹ்மதுல்லா இருவர் கூட்டணி தயாரிக்க, எ.ஜே.உசேன் டைரக்ட் பண்ணுகிறார்.

வருகிறார் சசிகலா!

டான் படங்களுக்கும் சர்ச்சையைக் கிளப்பும் ஏடாகூட படங்களுக்கும் பேர் போன டைரக்டர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றை, என்.டி.ஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதியின் வாழ்கையுடன் மையப்படுத்தி ஓரளவு சுமாரான பட்ஜெட்டில் எடுத்து ரிலீஸ் பண்ணி ஹிட் கொடுத்தார் ராம்கோபால் வர்மா. அந்த ராம்கோபால் வர்மாதான் இப்போது ‘சசிகலாவின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ""தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு படத்தை ரிலீஸ் பண்ணுவேன் , எல்லா ரகசியத்தையும் சொல்வேன்'' என்கிறார் வர்மா.

கைகொடுத்த அபிராமி ராமநாதன்!

போக்குவரத்து விதி முறைகள், விதிமீறல்கள் குறித்து சமூக விழிப்புணர்வுப் படமான ‘"பச்சை விளக்கு' 2020 பொங்க லுக்கு முதல்வாரம் ரீலீசானது. பொங்கலுக்கு மிகப்பெரிய படங்கள் ரிலீசானதால், தியேட் டர்காரர்களின் நெருக்கடியால் படத்தை தூக்க வேண்டிய நிலை. இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய மொரிஷீயஸ் நாட்டின் பிரதமர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, டைரக்டர் பாரதிராஜா ஆகியோரின் பாராட்டால் நெகிழ்ந்த படத் தின் டைரக்டர் மாறன், பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பி விருதுகளை வென்றார்.

சமீபத்தில் கூட ஓ.டி.டி.யில் ரிலீஸ் பண்ணும் முயற்சியில் இறங்கி, நெட்ஃபிளிக்ஸால் நொம்பலப்பட்டுவிட்டார். படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் புரொடியூசர் ஆனந்தனும் மாறனும் சமீபத்தில் அபிராமி ராமநாதனைச் சந்தித்து முறை யிட்டுள்ளனர். 2021 பொங்கலுக் குப் பிறகு தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ்பண்ண உதவுவ தாக உறுதியளித்துள்ளாராம் அபிராமி ராமநாதன்.

-ஈ.பா.பரமேஷ்வரன்