ழல் இல்லாத துறை என்பதே தமிழகத்தில் இல்லையென்றாலும், வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளது. வருவாய்த்துறையினரின் தகிடுதத்தங்களால், அருப்புக்கோட்டை -பாலையம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, தி.சு.ராமலிங்கா நகர் நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் 16 குடும்பங்கள், தங்களின் வீடுகளுக்கு முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, தொடர்ந்து 15 வருடங்களாகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

d

1978-ல் கைத்தறி நெசவாளர்களின் கூட்டு முயற்சியினால், 103 வீடுகளைக் கொண்ட, தி.சு.ராமலிங்கா நகர் நெசவாளர் குடியிருப்பு உருவானது. இந்நகர் சர்வே எண் 132/1-ல் அமைந்துள்ள 16 வீடுகளுக்கு மேற்கிலும், மதுரை - அருப்புக்கோட்டை சாலைக்கு கிழக்கிலும் உள்ள, 12 அடி அகலமும் 390 அடி நீளமும் கொண்ட பொதுவீதியை, 1992ல் வருவாய்த் துறையினர் தனிப்பட்ட ஆதாயத்துக்காக, ண-1252 ராமலிங்காநகர் நெசவாளர் குடியிருப்பு, தலைவர், பாலையம்பட்டி’ என்ற பெயரில், இல்லாத ஒரு சங்கத்தின் தலைவருக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டனர். உடனே, அந்த 16 வீடுகளின் மேற்கு வாசலை மறைத்து, பொது வீதியை ஆக்கிரமித்து, கடைகள் முளைத்தன. அதன் பலனை, முறைகேடாக பட்டா வாங்கியவர்கள், லட்சங்களில் பெற்று அனுபவித்தனர்.

பாதிக்கப்பட்ட 16 வீட்டினர், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, மிகவும் தாமதமாகவே உணர்ந்து சுதாரித்தனர். ‘எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்’ என்று, மனுவுக்கு மேல் மனுவாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதித் தள்ளினர். 2005-ல் அன்றைய விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த முகமது அஸ்லம், ‘இது மிகவும் அவசரம்’ என்று குறிப்பிட்டு, ஆக்கிர மிப்புகளை அகற்றி ஊராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் உதவிடுங்கள்’ என்று ஆ 1252 அருப்புக்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் கடிதம் எழுதினார்.

Advertisment

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டும், அருப்புக் கோட்டை வருவாய்த்துறையினர், எட்டு வருடங்களாகக் கண்டுகொள்ளாத நிலையில், 2013-ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் கதவுகளைத் தட்டினர். 2014 ஜனவரியில் உயர்நீதிமன்றம், ‘ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.’ என ஆணை வழங்கி, வழக்கை முடித்து வைத்தது.

iiii

உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தொடங்கி அருப்புக்கோட்டை தாசில்தார் வரை, கடந்த 7 வருடங் களாக இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். ‘உயர் நீதிமன்றம் ஆணை வழங்கியிருப்பதால், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழங்கிய மின் இணைப்பை உடனே துண்டியுங்கள்.’ என்று எழுத்து மூலமாக உதவி பொறியாளரை வலியுறுத்தியும், மின்சாரத்துறையினர் இன்று வரையிலும், ஆக்கிரமிப் பாளர்களின் கவனிப்பில் மயங்கிக் கிடக்கின்றனர்.

Advertisment

"அ'’பதிவேடு என்பது, நிலத்தின் உரிமையாளர் பெயர், விஸ்தீரணம், தீர்வை, பட்டா எண் உள்ளிட்ட முக்கிய தகவல் அடங்கிய ஆவணமாகும். இது, வருவாய்த்துறை ஆவண பாதுகாப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பதிவேடானது, தவறு செய்ததைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சர்வேயர் உள்ளிட்டோர், அதில் இரண்டு பக்கங்களைக் கிழித்துவிட்ட னர். தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது அளித்த பதிலில், "நத்தம் செட்டில்மென்ட் அசல் ஆவணங்கள் இவ் வலுவகத்தில் இல்லை. மனுதாரரின் கேள்விக்கு பதிலளிக்க வாய்ப்பில்லை' என்று கூலாகச் சொல்லிவிட்டது, அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

it

""அரசுத்துறை அதிகாரிகளின் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்து உயர்நீதிமன்றம் கூட வேறொரு வழக்கில் ‘நகரமைப்பு சட்டத்தின் கீழ் பெறப் படும் விண்ணப்பங்களின் மீதான நீதிமன்ற உத்தரவுகளை அதி காரிகள் பின்பற்றுவது இல்லை. நீதிமன்ற உத்தரவை பொருட் படுத்தாமல் புறக்கணிப்பது என்பது, கீழ்படியாதது மட்டு மின்றி, நேர்மையுடன் கடமை ஆற்றாதது போலாகும். இத்த கைய அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவியைப் பறித்து, வெளியே அனுப்பவேண்டும்''’ என்று காட்டமாக கருத்து தெரிவித்துள் ளது. அந்த 16 குடும்பத்தினரில் ஒருவரான ரவிச்சந்திரன், ""15 வருடங்களாக செயல்படாமலே தட்டிக்கழித்துவரும் அரசுத்துறையினர் மீது நம்பிக்கையிழந்து, தானே முன்னின்று, புல்டோசரால் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை இடித்துத்தள்ளினார். இதற்கு மட்டும் வேகமாக செயல்பட்ட காவல்துறை, ‘"சட்டத்தை நீங்கள் கையிலெடுப்பதா?''’ என்று விசாரணையில் ஆவேசம் காட்டியது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏன் இத்தனை மெத்தனம்?’என்று அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம். ""1992-ல பட்டா கொடுத்தது நடந்திருக்கு. எல்லாத்தயும் கோர்ட்ல சொல்லிருக்கோம். சர்வேயர வச்சி அளக்க சொல்லிருக்கேன். எல்லாமே அளந்திருக்காங்க. அதாவது, அவங்க பாதை எவ்வளவு வருது? இவங்க கட்டியிருக்க இடம் எவ்வளவு வருது? ரெக்கார்ட்ல என்ன இருக்கு? இவங்க என்ன டேட்ல பட்டா வாங்குனாங்க? அதோட காப்பி எல்லாமே கேட்டிருக்கோம். அத பார்த்துட்டுதான் நாங்க முடிவு பண்ணணும்.

tt

இருபது அடி பாதைய மொத்தமா எல்லாரும் பயன் படுத்திக்கலாம்னா... அது பொதுவீதி. அவங்க பொதுவீதின்னு பஞ்சாயத்துக்கோ கவர்மெண்ட்டுக்கோ எழுதிக் கொடுக்கல. அவங்களா பொதுவீதின்னு போட்டுக்கிட் டாங்க. அந்த பொதுவீதிய காலப்போக்குல, அடுத்து வந்த குரூப் கிரையம்பண்ணி எழுதிக் கொடுத்திருக்காங்க. அத வாங்குனவங்கதான், 1992-ல வாங்கி கடை கட்டுனாங்க. அரசாங்க இடத்துல ஆக்கிரமிப்புன்னு எதுவும் கிடையாது. அதனால, இதை அரசாங்க பாதையாவோ, ஆக்கிரமிப்பாவோ எடுத்துக்க முடியாது. அவங்க, அரசாங்கத்துக்கிட்ட இது பொதுப் பாதைன்னு சொல்லிருந்தா, நாங்க தைரியமா என்னைக்கோ எடுத்திருப்போம்'' என்றார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தில்லை நடராஜனோ, ""ஆக்கிரமிப்பை அகற்றணும்னு 2005-ல் கலெக்டரே சொல் லிட்டாரு. 2014-ல், உயர்நீதிமன்றமும், ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கணும்னு ஆர்டர் போட்டிருக்கு. ஆனா... இந்த தாசில்தார் கண்ணுக்கு மட்டும் இந்தக் கடைகள் ஆக்கிரமிப்பா தெரியலைன்னா எப்படி? அவருக்கும் சேரவேண்டியது போய்ச் சேர்ந்திருச்சு போல. ஆவண எண் 1403/78-ல், சொத்து விபரப் பகுதியில், எதெல்லாம் பொதுவீதிகள், எதெல்லாம் பொதுஇடங்கள்னு தெளிவா பத்திரத்துல பதிஞ்சிருக்கு. இந்தப் பதிவின்படி, மற்ற பொதுவீதிகளிலெல்லாம் மக்கள் நடந்து புழங்குறப்ப... குறிப்பிட்ட இந்தப் பொதுவீதி மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருக்கிறது ஏன்? வருவாய்த்துறை அதிகாரிகளால் இதற்குப் பதில் சொல்லமுடியாது''’என்றார் வேதனையுடன்.

கையூட்டுக்காக வருவாய்த்துறை தெரிந்தே செய்த தவறால், 15 ஆண்டுகளாக கால விரயம், பண விரயம் ஏற்பட்டு, திக்குத் தெரியாமல் தவித்தபடியே இருக்கின்றன, அப்பாவி நெசவாளர் குடும்பங்கள்!