ழல் குற்றச்சாட்டுகள் எரிமலை போன்றவை. அமைதியானதுபோல் தெரியும், சில குற்றச்சாட்டுகள் எதிர்பாராமல் தீக்குழம்புடன் சீறியடிக்கும். சில ஆண்டுகளுக்குமுன் பொங்கிச் சீறிய ரஃபேல் விவகாரம் மீண்டும் புகை கிளப்ப ஆரம்பித்துள்ளது. டஸ் ஸால்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகருக்கு ரூ 8.60 கோடி லஞ்சமாக அளித்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இம்முறை பிரான்ஸைச் சேர்ந்த மீடியா பார்ட் என்ற புலனாய்வுப் பத்திரிகை சரவெடியைக் கொளுத்தியுள்ளது.

rfile

ரஃபேல் விமானம் குறித்த சுருக்கமான ப்ளாஷ்பேக்கைப் பார்ப்பது, இவ்விஷயம் குறித்த கூடுதல் தெளிவை அளிக்கும். 2007-ல் மன்மோகன்சிங் ஆட்சியில் 126 விமானங்கள் வாங்க முடிவுசெய்து 2012-ல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் 2014-ல் ஆட்சி மாற்றம் நடந்தபின், இந்திய விமானப் படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையிலேயே ஏப்ரல் 10-ஆம் தேதி ஒப்பந்தத்தில் தன்னிச்சையாகக் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி.

Advertisment

விமானங்கள் எண்ணிக்கை 126-லிருந்து 36 ஆகக் குறைக்கப்பட்டது. விமானங்களின் கொள்முதல் விலை, கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனம் 36 விமானங்களுடன் 50% பணியை தொழில்நுட்பப் பகிர்வுமுறையில் இந்தியாவிலுள்ள ஒரு நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. இதன்படி தன்னுடன் இணைந்து செயல்படும் நிறுவனமாக டஸ்ஸால்ட் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தைப் புறந்தள்ளி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வுசெய்தது.

செய்துகொண்ட ஒப்பந்தப்படி இதுவரை 14 ரஃபேல் விமானங்களே இந்தியாவை வந்தடைந்துள்ளன. தொழில்நுட்பப் பகிர்வு குறித்து எந்தத் தெளிவும் இல்லை. இதற்கிடையில்தான் இடைத் தரகர் விவகாரம் வெடித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஆண்டிகரப்ஷன் ஏஜென்சி ரஃபேல் நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்தபோது, வாடிக்கையாளர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கியதற்காக செலவிட்ட தொகை 5,08,925 யூரோக்கள் (கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்) என கண்டுபிடித்தது. இந்தியாவைச் சேர்ந்த சுஷேன் மோகன்குப்தாவின் டெப்சிஸ் சொல்யூஷன் நிறுவனத்துக்கு இந்தத் தொகை அளிக்கப்பட்டதாக (2017, மார்ச் 30 தேதியிட்ட) இன்வாய்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இவர்மீது முக்கியப் பிரமுகர் களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியக் குற்றச்சாட்டும் உண்டு. அதற்காக இந்தியாவின் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையால் விசாரணை செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் இருப்பவர்.

டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், டம்மி ரஃபேல் (மாடல்) உருவாக்கத்துக்காக இந்தத் தொகை பெறப்பட்டதாக விளக்கமளிக்கிறது. கிட்டத்தட்ட 50 மாடல்களை அது உருவாக்கிய தாகவும் ஒரு டம்மி 20000 யூரோ விலையில் உரு வாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. அதுபோன்று டம்மி தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லையென மீடியா பார்ட் நிறுவனம் மறுப்பதோடு, வாடிக்கையாளருக்கான நன்கொடையாக இந்தத் தொகையை டஸ்ஸால்ட் நிறுவனம் பதிவுசெய்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

rr

பிரான்ஸ் லஞ்சஒழிப்புத் துறை, டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் ரஃபேலின் டம்மியை உருவாக்கும் வேலையை ஏன் ஒரு இந்திய நிறுவனத்திடம் விட்டீர்கள், அதுவும் ஒரு டம்மி 20000 யூரோ விலையில்... டம்மி உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் என்ன என்றெல்லாம் விசாரித்துள்ளது. அதற்கு புகைப்பட, ஆவண ஆதாரங்கள் எதையும் டஸ்ஸால்ட் நிறுவனத்தால் அளிக்கமுடியவில்லை.

மேலும் டெப்சிஸ் நிறுவனம் உருவாக்கி யளித்த அதே மாடல் விமா னங்களைத் தான், டஸ்ஸால்ட் உருவாக்கி இந்தியாவுக்கு அளித்ததா என்பதற்கும் அந்நிறுவனத் தால் முறையான பதிலளிக்க முடிய வில்லை. எனவே டம்மி விவகாரம் லஞ்ச விவகாரத்தை மூடிமறைப்ப தற்காக மட்டுமே என அந்த புல னாய்வுப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

2019 பாராளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ரஃபேல் விவகாரம் கிளப்பப்பட்டது. அனில் அம்பானிக் காக பிரதமர் தரகராகச் செயல் பட்டதாகக் குற்றம்சாட்டியதுடன் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.rr உச்சநீதிமன்றம் வரை போன அந்த விவகாரத்தில் மோடியும் அவரது அரசும் தப்பியதுடன் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா தற்போதைய ரஃபேல் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ""பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் விதிகளின்படி, தளவாடங்களைக் கொள்முதல் செய்கையில் எந்த ஒரு இடைத்தரகரையும் பயன்படுத்தக்கூடாது. கமிஷனாக எந்தத் தொகையும் வழங்கக்கூடாது. அந்த விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும்.

இந்திய அரசுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் இடையே கையெழுத்தான ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இடைத்தரகர் எவ்வாறு இருக்க முடியும். மத்திய அரசு விதிகளை மீறியுள்ளது'' என்று சவுக்கைச் சுழற்றியுள்ளார்.

ரஃபேல் போர் விமான விவகாரம் இரண்டாவது முறையாக பா.ஜ.க. அரசுக்கு இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது. போர் விமானத்தை காட்சிக்குக் கொண் டுவருவது மட்டும் முக்கியமில்லை. இலக்கைக் குறி பார்த்து குண்டுவீசு வது மிக முக்கியம். காங்கிரஸால் அது முடியுமா?