""ஹலோ தலைவரே, தமிழக ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்கெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுதுன்னு எடப்பாடி அரசின் நிர்வாக லட்சணத்தைப் பத்தி உயர் நீதிமன்றம் விமர்சனம் செஞ்சதை கவனிச்சீங்களா?''

""ஆமாம்பா, மேலூரில் பள்ளிக் கூடத்துக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றுவது சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையா கண்டனம் தெரிவிச்சதோடு, படிப்படியா கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியிருக்கே!''

""போன வாரம் டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வந்த தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோராவும், உடன் வந்தவங்களும் இங்குள்ள அதிகாரிகளோடு நடத்திய ஆலோசனையின்போது டாஸ்மாக் எம்.டி.யான மோகன் ஐ.ஏ.எஸ்.சிடம், தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இப்பவே பலரும் மதுபானங்களை ஏகத்துக்கும் வாங்கி ஸ்டாக் வச்சிருப்பதாக புகார்கள் வருது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் நீங்க எடுக்கலையேன்னு குடைந்தெடுத்துவிட்டார். இதுக்கு மோகனால் பதில் சொல்லமுடியலை. அப்ப மதுவிலக்கு சிறப்புப் பிரிவு டி.ஜி.பி.யான ஷகீல் அக்தர், இதெல்லாம் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கும் தெரியும். அவர் உத்தரவில்லாத நிலையில், நாங்க என்ன பண்ணமுடியும்னு கோடிட்டுக் காட்டியிருக்கார். இதனால் எரிச்சலான தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா சமாதானம் அடையாமலே டெல்லிக்குத் திரும்பிவிட்டார்.''

rr

Advertisment

""இப்ப, மோகன் ஐ.ஏ.ஏஸ்.சிடமிருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை தொடர்பான பொறுப்பு பறிக்கப்பட்டதுக்கும் இந்த விவகாரம்தான் காரணமா?''

""ஆமாங்க தலைவரே, அவரைப் பரிந்துரை செய்தது அமைச்சர் வேலுமணியும், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும் இப்போதைய வணிக வரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷும்தான். தேர்தல் பணிகளுக்காக சிறப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கும் பீலாவின் கணவரான ராஜேஷ்தாஸ், ஆளும்கட்சியினரின் மதுபானப் பதுக்கலுக்கு ஆதரவா இருப்பதாக பல தரப்பிலும் முணு முணுப்பு கேட்குது. தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குப் போன இந்த விவகாரத்தின் மீதான விசாரணை தீவிரமாக லாம்ங்கிறதால மோகன் ஐ.ஏ.எஸ்.சிடமிருந்து மதுவிலக்கு ஆயத்தீர்வைப் பொறுப்பு பறிக்கப்பட்டு, குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் கிர்லோஷ்கர் ஐ.ஏ.எஸ்.சிடம் கொடுக்கப்பட்டிருக்கு. மதுபானப் பதுக்கலில் காட்டும் கவனத்தை, தொகுதிகளுக்குக் காவல்துறையின் துணை யோடு கொண்டு செல்லப்படும் கரன்சி விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் செலுத்தனும்ன்னு நேர்மையான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சொல்றாங்க. ஏன்னா, இப்பவே தொகுதிக்கு தலா 50-சி வரை ஆளும்கட்சியினரின் பணம் போய் சேர்ந்துடுச்சாம்.''

""தேர்தல் ஆணையர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் எச்சரிச்சதை எடப்பாடி அரசு எப்படி எடுத்துக்குச்சு?''

Advertisment

""இது எடப்பாடியை ரொம்பவே அதிரவச்சிடுச்சிங்க தலைவரே... அதனால், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இட மாற்றப் பட்டியலைத் தயார் செய்து, டெல்லியின் கோபத்தைத் தணிக்க அவர் முடிவெடுத்ததுடன், முதற்கட்டமாக 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். அடுத்த லிஸ்டும் ரெடியாகிறதாம். அந்த வரிசையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனும் லிஸ்டில் இருக்கிறாராம். காரணம் அவர், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி ரியல் எஸ்டேட் விவகாரங்களில் ஆடும் ஆட்டம் பற்றிய புகார்கள் சம்பந்தமா ஐ.ஜி உத்தரவிட்டும் எஸ்.பி. கண்டுக்கிற தில்லையாம். அதனால் இடமாற்றப் பட்டியலில் இருக்காருன்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. மாவட்டத்தில் உள்ள போலீசாரும் அதிகாரிகளும், எங்க எஸ்.பி, நல்ல எஸ்.பினு சொல்றாங்க.''

""ம்...''

three ministers

""அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சென்னை வீட்டில் அன்றாடம் மாலை வேளையில் கூடுகிற அமைச்சர்கள் கே.பி.கருப்பண்ணனும் கடம்பூர் ராஜுவும் அவரோடு நள்ளிரவு தாண்டியும் தீவிர கலந்துரையாடல் நடத்துறாங்களாம். எடப்பாடிக்கு எதிரான கருத்துக்களை ஆளுங் கட்சியினர் மத்தியில் பரப்பும் இவங்களைத் தான் அ.ம.மு.க. தினகரன் தங்களின் ’ஸ்லீப்பர் செல்கள்னு சொல்றாராம். ஸ்லீப்பர் செல் டீமுக்கு தேவையானதை செய்யும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் பி.ஏ.வுக்கு செல்வாக்கு அதிகம். அவர் ஒரு பெண்ணிடம், மேலிடத்தில் காரியம் செய்து தருவதாகச் சொல்லி, வாங்க வேண் டியதை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால், அந்தப் பெண் தரப்பு அவரை கடத்திச் சென்று செமையாக கவனித்த விஷயம் இப்பவும் பரபரப்பா பேசப்படுது. ஷாக் கான அமைச்சர், தன் பி.ஏ.வை ரகசியமா மீட்டதோடு, கடத்தல்-தாக்குதல் சம்பந்தமா எந்தப் புகாரும் கொடுக்க வேணாம்னு தடுத்துட்டாராம். உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் இதையறிந்த எடப்பாடி, அந்த மூவர் டீமைக் கோட்டையில் வைத்து ஏகத்துக்கும் அர்ச்சனை பண்ணிட்டாராம்.''

""சென்னை வந்த மோடியை பங்காரு அடிகளார் சந்திச்சிருக்காரே?''

ee

""வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பங்காரு அடிகளாருக்கும் பா.ம.க நிறுவனரான டாக்டர் ராமதாசுக்கும் ஏழாம் பொருத்தம். அவர் மோடியை சந்திக்க விரும்பறதை அவருக்குத் தெரிவித்த போதே, அவரைப் பற்றிய முழு விபரம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கு. அந்த சந்திப்பின் போது, வட தமிழகத்தில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளைக் குறைக்கும் எண்ணத் தோடு, பா.ஜ.க கணிசமான இடங்களில் போட்டியிடனும்னு அடிகளார் சொல்லியிருக்கிறார். வட தமிழகத்தில் பா.ம.க.வை மட்டுமே நம்பியிருக்காமல் tamdossஅவர்களுக்கு செக் வைக்கும் விதமாக, அடிகளாரைக் கையில் எடுத்திருக்கார் மோடிங்கிற டாக் இப்ப அந்த சமுதாயத்தினர் மத்தியிலேயே அடிபடுது.''

""பங்காரு அடிகளாரை மோடி சந்திச்சதை பா.ம.க. ராமதாஸ் எப்படி பார்க்கிறார்?''

""சென்னை விழாவில் தேவேந்திர குல வேளாளர்கள் குறித்து மோடி பேசிய நிலையில், டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியிருக்கேன் என்றும், வடக்கே வன்னியர்கள்; தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 89-லேயே மதுரையில், ஒரு தாய் மக்கள் மாநாட்டை நடத்தியதாகவும் அதில் சொல்லியிருக்கார். இதில் எவரும் பேசுவதற்கு முன்பேன்னு அவர் குறிப்பிடுறது மோடியைத்தான்னு அவங்க தரப்பினரே சொல்றாங்க. இந்தக் கோபத்துக்குக் காரணம் பங்காரு அடி களாரை அவர் சந்திச்சதால்தானாம்.''

""தமிழக காங்கிரஸ் நிலவரம் என்ன?''

""தி.மு.க. கூட்டணியில் கவுரவமான சீட்டுகளைப் பெறணும்ங்கிறதோடு, ஒதுக்கப்படும் தொகுதிகளில் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த கட்சிக்காரர்களுக்கே இந்த முறை சீட் வழங்க வேண்டும் என்றும், மாவட்டம் மாறி, தொகுதி மாறி சீட்டுகள் வழங்கக் கூடாது என்றும், கட்சியின் தலைவராக இருந்தாலும் இந்த நடைமுறையைக் கடை பிடிக்கவேண்டும் என்றும் சோனியா- ராகுல் உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் வரை அவர்கள் தங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.''

eps-son

"முதல்வர் எடப்பாடியின் மகனான மிதுன், நேரடி அரசியலில் பங்கேற்காமல், அ.தி.மு.க வேட்பாளர் லிஸ்ட் தயாரிப்பு வரை மறைமுகமாக உதவி வருகிறார். அப்படிப்பட்ட வரை, வரும் தேர்தலில் நிற்கவைத்து, சட்டமன்றத்துக்கு அனுப்பனும்னு, அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடி பிடிக்கிறாங்களாம். அதோடு ஓ.பி.எஸ். மகன்களுக்கு நம்ம மகன் எதுல குறைஞ்சிட்டார்ன்னும் கேட்கறாங்களாம். ஆனால் எடப்பாடியோ, குடும்ப அரசியலுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் நிலையில், மிதுனும் தன்னை மாதிரி அரசியலுக்கு வந்து எதற்கு வசவு வாங்கணும்னு நினைக்கிறாராம். ஆனாலும், அடுக்களையின் வலியுறுத்தல் தொடர்கிறதாம்.''

""+2 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் தேதி பற்றிய எதிர்பார்ப்பு சம்பந்தமா நான் சொல்றேன். மே 3ந் தேதி தொடங்கி 21ந் தேதி வரை +2 தேர்வு நடக்கும்னு பள்ளிக்கல்வித்துறை அறிவிச்சிருக்குது. அதனால, அதற்கு முன்னாடியே சட்டமன்றத் தேர்தல், அதாவது ஏப்ரல் நடுவில் அல்லது இறுதி வாரத்தில் நடக்கும்னு எதிர்பார்ப்பு இருக்குது. வழக்கத்திற்கு முன்பாக தேர்தல் நடந்தால், பிரச்சாரம் இத்யாதிகளுக்கு கால அவகாசம் குறைவு என்பதால் எல்லாக் கட்சிகளும் அவசர வியூகங்களுக்கு ரெடியாகின்றன. மே மாத உச்சி வெயிலில் தேர்தல் வேண்டாம்னு அரசியல் கட்சிகள் சொன்னதால, எங்க தலையிலா வெயில் அடிக்கணும்னு கேட்கிறார்கள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்.''