"நிர்வாகத்தோட நான் இணக்கமாக இருப்பது சிலருக்கு பிடிக்கலை. அதனால் இப்ப சிக்கிக்கிட்டேன். முழுவதும் என்னுடைய தவறே. நீங்க எது கேட்டாலும் தட்டாமல் பதில் சொல்றேன்'' என வாண்ட்டடாக போலீஸ் வண்டியில் ஏறி ஒப்புவித்துள்ளான் பாலியல் புகாரில் சிக்கிய பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன்.

pssb

பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியரும், பன்னிரெண்டாம் வகுப்பின் ஏ2 வகுப்பாசிரியருமான ராஜகோபாலன் இன்னாள், முன்னாள் மாணவிகளிடம் செய்த பாலியல் சேட்டைகளை, துப்பறிந்து பொறி வைத்து ஆதாரங்களை சேகரித்து காவல்துறையிடம் புகார் செய்தார் முன்னாள் மாணவி ஒருவர். அவரின் புகாரின் பேரில் கடந்த மாதம் 24-ந் தேதி வடபழனி காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில், வழக்கு அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டவுடனே, தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், போக்சோ பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பிணையில் வெளிவரமுடியாத நிலையில் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜகோபாலனை ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 3 நாட்கள் போலீஸ் விசா ரணையை எதிர்கொண்டார் ராஜகோபாலன்.

Advertisment

pssb

"கைதிற்கு முன் துணை ஆணையர் ஜெயலெட்சுமி, ஹரிகிரண் ஆகியோர் மேற்பார்வையில் வடபழனி காவல் நிலை யத்திலேயே வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில்... துவக்கத்தில் ராஜகோபாலன் முரண்டு பிடித்ததற்கு, என்ன காரணம் என்று தெரியாமல் போலீசார் திணறியபோது, பள்ளி நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஒருவருடனான நெருக்கத்தால் அவருடைய மேல்மட்டத் தொடர்பு மூலம், லாபி மூலம் எப்படியும், தான் காப்பாற்றப் படலாம் என முழுமையாக நம்பியிருந்தது தெரிந்தது. இருப்பினும், தொடர்ச்சியாக அவனை விசாரித்துக் கொண்டிருந்தோம். விவகாரம் பெரிதான நிலையிலும், ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையிலுள்ள லேப்டாப், மொபைல்களில் உள்ளவற்றை கைப்பற்ற நாட்கள் தேவைப்பட்ட நிலையிலும், வேறு வழியில்லாமல் உடனடியாக எப்.ஐ.ஆரை போட்டு சிறைக்கு கொண்டு சென்றோம்.

சைபர் க்ரைம் உதவியுடன் ஆதாரங்கள் மீட்டெடுக்கப்பட்ட நிலையில், அதன் அடிப்படையிலும், சேகரித்த தகவலின் அடிப்படையிலும் 50 முதன்மை கேள்விகளுடன், 250 துணைக் கேள்விகளையும் தயாரித்து காவல்துறை கஸ்டடிக்கு எடுக்கக் காத்திருந்தோம். ஐந்து நாட்கள் கேட்டு, மூன்று நாட்கள் நீதித்துறை அனுமதி வழங்கிய நிலையில் விசாரணையை துவங்கினோம். ராஜகோபாலன் கூறியது அத்தனையும் அருவருக்கத்தக்கதே'' என்றார் தொடக்கத்திலிருந்தே உடனிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர்.

Advertisment

dd

குறிப்பிட்ட 4 அதிகாரிகள், 2 காவலர்கள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில், வீடியோவாகவும், எழுத்துப்பூர்வ மாகவும் பதிவு செய்யப்பட்ட அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில், "என்னுடைய பெயர் ராஜகோபாலன். 1994-ம் ஆண்டு முதல் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். இயல்பாகவே நகைச்சுவை உணர்வோடு பேசும் நான், தொடக்கக் காலத்தில் மாணவிகள் மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியைகளுடன் இப்படித்தான் பேசுவேன். இரட்டை அர்த்தத்தில் இருந்தாலும், ஆபாசமாக இருந்தாலும் யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

அதுபோக, பள்ளி நிர்வாகக் கமிட்டியில் இருக்கும் ஒருவரின் வாரிசிற்கு நான் ஆசிரியராக இருந்ததால், அந்த வாரிசை வைத்து அவருடைய அப்பா நெருக்கமானார். இது பள்ளியில் எனக்கென புதிய அதிகாரத்தொனியைக் கொடுத்தது. அது இன்னும் என்னைத் தூண்டிவிட மாணவிகளை எதேச்சையாக தொடுவதுபோல் தொட ஆரம்பித் தேன். அதனையும் நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்க அத்தனைக்கும் ஆசைப்பட்டேன். தொடக்கத்தில் எதிலும் மாட்டிக் கொள்ளாத நான் இப்பொழுது சமூக வலைத்தளத்தாலேயே சிக்கிக்கொண்டேன். அதற்குக் கொரோனாவும் ஒரு காரணம். கொரோனா இல்லாமல் இருந்தால், லாக்டவுன் இல்லாமல் இருந்தால் நான் மாட்டியிருக்க மாட்டேனே..?'' நான் சிக்கிக்கொண்டதில் சில ஆசிரியர்களும் உடந்தை. அவர்கள் யோக்கியர்கள்போல் என்னை சிக்க வைத்துவிட்டார்கள்'' என்றிருக்கின்றார்.

தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது நாளாக நடைபெற்ற விசாரணையின்போது அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்திலோ, "மார்க்கும் பெரிசா இல்ல... எதுவும் பெருசா இல்ல. இன்னைக்கு மூல"தனத்தை' பற்றி பேசலாமா..? அதாவது கேப்பிட்டல்.... அவளைப் பாரு இருப்பதை விட பெரிசா இருக்கு. அப்படின்னால் அவளுக்கு மார்க்கும் பெரிசா கொடுக்கணுமில்ல'' என்பதும் என்னுடைய வழக்கமான இரட்டை அர்த்த வசனங்கள். அது போல, "உங்களுக்கான சட்டையில் முன்பக்க பாக்கெட் வைப்பதில்லையே ஏன்..?' என கேள்வி கேட்டு, "ஏனென்றால் மேடான மலைப்பாங்கான இடங்களில் சிக்னல் எடுக்காது அல்லவா..?' என என் கேள்விக்கு நானே பதில் கூறுவதும் வழக்கம்.

pssb

உடற்கல்வி நேரத்தின்பொழுது, மாணவிகள் யூனிபார்ம் மாற்றிக்கொள்ளும் போதும் எதேச்சையாக அந்தப் பக்கம் போய் வருவதுபோல் ரசிப்பதும் என்னுடைய வழக்கம். என்னுடைய செய்கையை பார்த்து பயத்தில் அமைதியாக இருந்துவிடுவது அல்லது அசட்டையாக சிரிக்கும் மாணவிகளே என்னுடைய இலக்கு. அவர்களை குறிவைத்துத்தான் அடுத்த வேலையே நான் செய்வது. அவர்களைத் தனியாக பிரித்து அவர்களுக்கென மார்க்கை வாரி வழங்குவேன். கண்டிக்க மாட்டேன். ஒத்துழைக்கும் மாணவிகளை, நங்கநல்லூரிலுள்ள என்னுடைய வீட்டிற்கும், மாணவிகளின் வீட்டிற்கும் சென்று அத்து மீறியிருக்கின்றேன்.

இந்த லாக்டவுன் காலத்தில் ஆன்லைனில் நடைபெற்ற வகுப்புகளையும் எனக்கு சாதகமாக்கி மாணவிகளின் செல்போனை டேபிள் அல்லது உயரமான இடத்தில் வைத்து வகுப்பை கவனிக்க வைப்பேன். இதில் பல தடவை கீழே என்ன இருக்கு..? எனக் கேள்விக் கேட்டு, மாணவிகள் கீழே குனிந்து பொருளை தேடும் பொழுது, ஜூம் செய்து ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டு ரசிப்பேன். பின்னாளில் அதனையே அந்த மாணவிக்கு அனுப்பி வைப்பேன். இதுபோல் நான் அரைகுறை ஆடையுடன் ஆன்லைனிற்கு வந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருப்பேன். என்னை கவனிக்கும் மாணவிகளைக் கவனித்து, அவர்களிடம் இரவில் சாட் செய்து என்னுடைய ஆசைக்கு இணங்க வைப்பது என்னுடைய வேலை.

இதனை பல ஆசிரியர்களிடமும் காட்டியிருக் கின்றேன். அவர்களும் ரசித்து என்னைப்போல் தான் மாணவிகளிடம் நடந்துகொள்கின்றனர். இப்பொழுது சூழ்ச்சி செய்து மாட்டிவிட்டுள்ளனர் எனக்கூறி ஏனைய ஆசிரியர்களின் பெயர்களையும் கொடுத்திருக்கின்றான் ராஜகோபால்'' என்கின்றனர் அதிகாரிகள்.

இதேவேளையில், "ஆன்லைனில் பாலியல் புகார் அளித்த மாணவிகள் யார் என்றே தெரியாது' என பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜனும், தாளாளர் ஷீலா ராஜேந்திரனும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதுபோல் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரியோ, "இவன் பாலியல் சேட்டை செய்தது மாணவிகளிடம் மட்டுமல்ல... மாணவிகளின் அம்மாக்களான ஒரு சில ஆசிரியைகளிடமும்தான். ஏனெனில் இங்கு பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் குழந்தைகள் இங்கு கல்வி பயில்வதற்கு எவ்வித நன்கொடையோ, பள்ளிக்கட்டணமோ வாங்குவதில்லை பள்ளி நிர்வாகம். ஆதலால் இங்கு பணியாற்றும் ஆசிரியைகள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் ராஜகோபாலனின் மாணவி ஒருவரின் ஆசிரியை அம்மா இங்கு பணியாற்றி வந்திருக்கின்றார். அவரை ராஜகோபாலன் நெருங்கிய நிலையில், இந்த விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிந்த நிலையில், ஸ்கூலிலேயே வைத்து ராஜகோபாலனை துவைத்தெடுத்திருக்கின்றார் அவர்.

இது பள்ளியின் நிர்வாகத்திற்குச் சென்ற நிலையில்... ஆசிரியை கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளார். ராஜகோபாலன் வழக்கம் போல் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகின்றார். 5 மாணவிகளின் ஆன்லைன் புகாரின் பேரிலேயே விசாரித்துள்ளோம். இன்னும் புகார் வருமென காத்திருக் கின்றோம். எனினும் ராஜகோபாலன் கூறிய எண்ணிக்கை 30-க்கு மேல் என்பதுதான் கொடூரமான செய்தி. விரைவில் ராஜகோபாலன் வாக்குமூலத்தின்படி ஆசிரியர்கள் சிலரும், குறிப்பிட்ட அந்த நிர்வாகக்குழு உறுப்பினரும் விசாரணை வளையத்தில் வரவுள்ளார்கள்'' என் கின்றார் அவர்.