சாதாரண மனிதர்களை எல்லா நேரத்திலும் பார்க்கலாம். இக்கட்டான நேரங்களில்தான் மாமனிதர்களைச் சந்திக்கலாம். அப்படியொரு மாமனிதர்களில் ஒருவர்தான் ஆஷிஷ் தாக்கூர். இவர், அப்படியென்ன மகத்தான செயல் செய்தார் என்கிறீர்களா...?

vv

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த ஆஷிஷ், கோவிட் இரண்டாம் அலையில் வந்து குவிந்த பிணங்களுக்கான இறுதிக் காரியங்கள் செய்வதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேரமாக பிணங்களை எரிக்கும் வேலையைச் செய்துவருகிறார்.

ஆனாலும் பிணங்களுக்கு இறுதிக் காரியம் செய்யும் இவரது ஆர்வம், சமீபத்தில் வந்த ஒன்றல்ல. இருபது வருடங்களுக்கும் முந்தையது. 19 வயதில் கல்லூரி மாணவனாக இருந்தபோதே தொடங்கியது. தனது கல்லூரிப் படிப்புச் செலவுக்காக அரசு மருத்துமனையொன்றில் பாது காப்பு மேற்பார்வை யாளராக பணி யாற்றிக் கொண் டிருந்தார்.

Advertisment

அப்போது மருத்துவமனைக்கு எதிரில் சில தெருநாய்கள் துணிகளைக் கிழித்து விளையாடுவதுபோலத் தெரியவே, என்ன வென்று பார்க்க அருகில் நெருங்கி யிருக்கிறார். பிறகுதான் தெரிந்திருக்கிறது, அது துணியல்ல… அநாதரவாக வீசப்பட்ட பிணம் என. மருத்துவமனையில் தெரிந் தவர்களிடம் காசு வசூலித்து அந்தப் பிணத்துக்கு இறுதிக் காரியம் செய்தது தான் ஆஷிஷின் தொடக்கம். பின்பு படித்து முடித்து வங்கி வேலைக்கு வந்த பின்பும், நேரம் வாய்க்கும்போதெல்லாம், அநாதைப் பிணங்களை மரியாதையாக இறுதிச் சடங்கு செய்து அனுப்பி வைக்கும் பழக்கத்தை ஆஷிஷ் கைவிடவில்லை. கடந்த வருடம் கோவிட் தொற்றின்போது, ஆஷிஷின் தயவு அரசு மருத்துவமனைகளுக்கும், கைவிடப்பட்ட பிணங்களுக்கும் நிறையவே வேண்டியிருந்திருக்கிறது.

vv

என்றபோதும் கடந்த சில மாதங் களில்தான், வேலையையே விட்டுவிட்டு முழுநேரமாக பிணங்களுக்கு இறுதிக்காரியம் செய்யும் பணிக்கு ஆஷிஷ் வந்தது. கிட்டத்தட்ட 45 தன்னார்வலர்களுடன் இந்த இறுதிக் காரிய பணி களை ஆற்றிவரும் இவர், நாளொன்றுக்கு 15 உடல் களைக்கூட எரிக்கவேண்டியதிருக்கிறதாம். இரண்டு டொயோட்டா வண்டிகளை இறுதி ஊர்வல வண்டியாக மாற்றிப் பயன்படுத்தும் இவருக்கு, வேறு சிலரும் தங்களது கார்களைக் கொடுத்து கோவிட் பிரச் சினை முடியும்வரை இதை பிணங்களை எடுத்துச்செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என உதவ முன்வந்திருக் கிறார்கள்.

Advertisment

இவர்களது பணி இந்த மாவட்டம் முழுவதும் அறியப்பட்டிருப்பதால், அரசுத் தரப்பிலிருந்து பாதுகாப்புக் கவச உடை, விறகு போன்றவை கேட்கும்போதெல்லாம் வழங்கப்படுகின்றன. இறந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ அந்த வழக்கப்படி இறுதிக்காரியத்தைச் செய்துமுடிக்கிறார்கள். “"இந்தக் காரியங்களைச் செய்வ தற்கு கொஞ்சம் பணம் தேவை. பல சமயங்களில் இத்த கைய குடும்பங்களால் அதைத்தான் கொடுக்க முடிவ தில்லை. எனது வங்கிப் பணியில் கிடைத்த பணத்தை வைத்து ஓரளவுக்கு சமாளித்தேன். இன்றைக்கு என் கையில் எந்தச் சேமிப்பும் கிடையாது. இதை முறை யீடாகச் சொல்லவில்லை. யதார்த்த நிலவரமாகச் சொல்கிறேன்''’என்கிறார்.