அ.தி.மு.க. பொதுக்குழு உறுப் பினர்களின் பெரும்பான்மையான ஆதரவோடு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, அதே வேகத்தில் ஓ.பி.எஸ். ஸின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். ஹைவோல்டேஜ் தாக்குதலாக ஓ.பி.எஸ்.ஸையே கட்சியின் ஒருங்கிணைப் பாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து தூக்கியடித்தார். எடப்பாடியின் இந்த வேகத்தில் ஓ.பி.எஸ். தொடக்கத்தில் பெரிய ஜெர்க்காகிப் போனார். அதோடு, ஓ.பி.எஸ். ஆதரவு மா.செ.க்களையும், எம்.எல்.ஏ.க் களையும் கூடுதல் போனஸ் திட்டத்துடன் இழுக்கத்தொடங்கினார் எடப்பாடி.

dd

ஓ.பி.எஸ்.ஸால் அர சியலில் அடையாளங் காட்டப்பட்ட எக்ஸ் அமைச்சரும், தலைமை செயற்குழு உறுப்பினரு மான ராஜலட்சுமி, கடையநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும். தென்காசி வடக்கு மாவட்ட மா.செ.வுமான கிருஷ்ணமுரளி ஆகி யோரும் திடீரென எடப்பாடிக்கு ஆதரவாக வானுயர போஸ்டரை ஒட்டியது ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. மாஜி அமைச்சரான செந்தூர்பாண்டியனின் மகனான கிருஷ்ணமுரளியை தென்காசி வடக்கு மா.செ.வாகவும், கடையநல்லூர் எம்.எல்.ஏ.வாகவும் உருவாக்கியவர் ஓ.பி.எஸ். தான் என்கிறார்கள் கடையநல்லூர் ர.ர.க்கள். இந்தச் சூழலில், டெல்லி தரப்பிலிருந்து ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக சிக்னல் வர அந்த ஜோரில் பாய்ச்சலைத் தொடங்கியிருக்கிறது ஓ.பி.எஸ். அணி. வைத்திலிங்கம் கட்சியின் இணை ஒருங் கிணைப்பாளர், கு.ப.கிருஷ்ணன் துணை ஒருங்கிணைப்பாளர், மனோஜ்பாண்டியன் கட்சியின் அமைப்புச் செயலாளர் என அறிவித்து, 14 புதிய மா.செ.க்களையும் நியமித்தார்.

அமைப்புச் செயலாளர் பதவியில் அமர்ந்ததும், ஆலங்குளம், தென்காசி, வாசுதேநல்லூர் தொகுதிகளில், ஜூலை 21, 22, 23 தேதிகளில் நடத்திய உள்ளரங்கக் கூட்டத்தில், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள, டெல்லியின் ஆதரவு ஓ.பி.எஸ். பக்கம்தான் அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் மனோஜ்பாண்டியன் பேசியிருக்கிறார். ஆலோசனை முடிந்து வந்த நிர்வாகி ஒருவர், எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு பேனரில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடியின் படத்தை ஆவேசத்தில் பிளேடால் கிழித்து வீசியிருக்கிறார்.

வாசுதேநல்லூர் ஆலோசனைக் கூட்டத்தில், 'எடப்பாடியால் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று செயல்பட முடியாது. அம்மாவின் உண்மைத் தொண் டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான். அ.தி.மு.க.வின் பொதுச்செய லாளரான அம்மாவையடுத்து அப்பதவிக்கு யாரையும் நியமிக்கக்கூடாது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றைக்குமே ஓ.பி.எஸ்.தான். அடுத்தவாரம் உங்களை சந்திக்க வருகிறார் ஓ.பி.எஸ். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும்'' என்ற மனோஜ்பாண்டியனின் பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட முயலைக்கூட ஆமை ஜெயித்த வரலாறு இருக்கிறது!

Advertisment