புயல் போல வேகமெடுத்த சசிகலா ஏன் அமைதியானார்? எடப்பாடியை எதிர்கொள்ள முடியவில்லையா? அரசியல் கணக்கு சரியாக இல்லையா என்றால், அவரது கணக்கு வேற லெவலில் இருக்கிறது என்கிறார்கள் சசிகலா தரப்பினர்.

சசிகலாவின் முகாம் அலுவலகத்தோடு தொடர்புடையவர் களிடம் நாம் பேசியபோது, ‘"அ.தி.மு.க.வையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சசிகலாவை எதிர்த்து வந்தனர். ஆனால், எடப்பாடியும் சரிக்கட்டப்பட்டுவிட்டார். அதனால் சமீபகாலமாக, அ.தி.மு.க.வின் சீனியர்கள் தொடங்கி மா.செ.க்கள் பலரும் சசிகலாவோடு தொடர்பில்தான் இருக்கிறார்கள். அதனை ரகசியமாக வைத்தபடி, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு யோசனைகளை சொல்லிவருகிறார் சசிகலா.

sasi

Advertisment

அ.தி.மு.க.வில் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பேசுபவர் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா. அ.தி.மு.க.விலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டதும் அடுத்தநாளே அவரது மகன் சென்னைக்கு வந்து சசிகலாவை சந்தித்துவிட்டுச் சென்றார். அதேபோல, ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் குடும்ப வாரிசு ஒருவரோடு சென்று சசிகலாவை சந்தித்தார் அன்வர்ராஜா. அப்போது, "நீங்கள் அனுமதித்தால் உங்களோடு சேர்ந்து அரசியல் பணிகளை செய்ய தயாராக இருக்கிறேன் அம்மா'' என அன்வர்ராஜா சொல்ல, "நீங்கள் எதற்கு இங்கு வரவேண்டும்? நான் அங்கு (அ.தி.மு.க.) வந்துவிடுவேன். அதற்கான விசயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஒருவரைத் தவிர எல்லோரும் சம்மதித்துவிட்டனர். அந்த ஒருவரும் விரைவில் சரியாகிவிடுவார். பொங்கல் முடிந்ததும் ஒரு முடிவுக்கு வரும். அதனால் நீங்கள் அ.தி.மு.க.வில் சேர்வதற்கான வழியைப் பாருங்கள்'' என அட்வைஸ் செய்தார்.

இது மட்டுமல்ல, ரஜினியுடனான சந்திப்பில் பல விசயங்கள் பேசப்பட்டபோது, "எடப்பாடியின் துரோகத்தைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை' என்று சசிகலா சொன்னதை ரஜினி ஆமோதித்திருக்கிறார். சசிகலாவுக்கு பிறகு ரஜினியை சந்தித்த முக்கிய பிரமுகர்கள், சசிகலாவின் அரசியல் குறித்து கேட்டிருக்கிறார்கள். அப்போது, எடப்பாடி பற்றிய சசியின் வருத்தத்தை அவர்களிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

இந்த நிலையில், சசிகலாவுக்காக அமித்ஷாவிடம் பேசியுள்ள ரஜினியின் குடும்பம், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் சசிகலாவுக்கு செய்தது துரோகம் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. இதனையறிந்து மிக ஹேப்பியாக இருக்கிறார் சசிகலா. அதனால், "விரைவில் சசிகலாவின் அமைதி கலையும்''‘என்று ரகசியமாக நடந்துள்ள பல சங்கதிகளை விவரித்தனர்.

சசிகலாவை சந்தித்தது, "குறித்து அன்வர்ராஜாவிடம் நாம் கேட்ட போது, ‘’"அவரை நான் சந்திக்க வில்லை. சந்திப்பதாக இருந்தால் வெளிப் படையாகவே சந்திப் பேன். ஆனால், காலம் எப்போதும் ஒரு கணக் கைப் போட்டுக் கொண்டுதான் இருக் கிறது. அது சரியான நேரத்தில் சரியானவர் களை அடையாளப் படுத்தும். ராஜீவ் காந்திதான் பிரதமர் ஆவார் என இந்தியாவே எதிர்பார்த்த நிலையில், தேர்தலிலேயே போட்டி யிடாத நரசிம்மராவ் பிரதமரானார். அதே போல சோனியாதான் பிரதமர் என முடிவான நிலையில் திடீரென்று மன்மோகன்சிங் பிரதமராகிறார். அதுவரை மன்மோகன்சிங் யாரென்றே தேசத்துக்குத் தெரியாது. ஏன், யாருமே எதிர்பார்க்காத ஓ.பி.எஸ். முதலமைச்சர் ஆகலையா? அத னால் காலம் கணக்கு போட்டு வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வுக்குள் சசிகலா வருவாரா என்பதை நிச்சயம் காலம் தீர்மா னிக்கும்''‘ என்கிறார் அன்வர்ராஜா.

sasi

Advertisment

"ஒருவரைத் தவிர எல்லோரும் சம்மதித்துவிட்டார்கள்' என சசிகலா சொல்லும் அந்த ஒருவர் யார் என்று விசாரித்தபோது, சசிகலாவின் எதிர்ப் பில் எடப்பாடிதான் உறுதியாக இருப்பது போல எல்லோருக்கும் தோன்றும். வெளித் தோற்றத்துக்கு மட் டும்தான் அப்படி. நிஜம் அதுவல்ல. சசிகலாவுக்காக எடப்பாடியை டெல்லி சரிகட்டிவிட்டது. ஆனால், சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் ஓ.பி.எஸ்.தான் சசிகலாவுக்கு எதிராக இருப்பதாக சசிகலாவுக்கு டெல்லி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அந்த வகையில் சசிகலாவுக்கு செக் வைப்பது ஓ.பி.எஸ்.தான். இதுபற்றி ஓ.பி.எஸ். ஸிடம் சசிகலா குடும்ப உறவுகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சசிகலாவை முழுமையாக ஆதரிக்க ஓ.பி.எஸ். தனது எதிர்பார்ப்பினை அப்போது சொல்லியிருக்கிறார். அதனையறிந்து அதிர்ச்சியடைந்தார் சசிகலா. காரணம், ஓ.பி.எஸ்.சின் எதிர்பார்ப்பு பிரமாண்டமாக இருந்ததுதான். இருப்பினும் "ஓ.பி. எஸ்.ஸும் விரைவில் சரிக்கட்டப் படுவார்'‘என்று சுட்டிக்காட்டு கிறார்கள் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

சசிகலாவின் இத்தகைய அரசியலைச் சொல்லித்தான் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சசிகலாவின் ஆதரவாளர்களாக வளைக்கும் திட்டமும் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் "தி.மு.க. அரசு போட்ட வழக்குகளில் ஜாமீன் பெற்றிருக்கும் மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி யும் ஓ.பி.எஸ்.ஸும் தன்னை கைவிட்டுவிட்டதாக கோபத்தில் இருக்கிறார். விரைவில் அவர் சசிகலாவை சந்தித்து ஆசி பெறுவார்' என்கிறார்கள் ராஜேந்திரபாலாஜியின் நண்பர்கள். காரணம், ராஜேந்திர பாலாஜிக்காக சுப்ரீம்கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானதற்கு பின்னணியில் சசிகலா இருப்பதாக சொல்லப் படுகிறது.