டந்த 30 ஆண்டு களாக உயர்நீதிமன்றம் நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்கள், ஆறு கள், ஓடைகள் ஆகியவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவு களைப் பிறப்பித்துக்கொண்டே உள்ளது. ஆனால் ஆட்சியிலிருந்த அரசுகளோ ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வேகம் காட்டவில்லை என்கிறார்கள் விவசாயிகள், பொதுமக்கள்.

ff

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி புனரமைப்பு செய்வது சம்பந்தமாக கடந்த 2005-ஆம் ஆண்டு ஏரிகள், அணைக்கட்டுகளில் நீர்வரத்தை சீராக்கவும் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வள நிலவளத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது, உலக வங்கியின் 1820 கோடி ரூபாய் நிதி உதவியுடன் 6.60 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு பயனடையும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்து அதன்படி 5012 ஏரிகள், 687 அணைக்கட்டுகள், 8744 நீர்வரத்துக் கால்வாய்கள் புனரமைக்க முடிவுசெய்யப்பட்டது. இந்த திட்டத்தை 2016-ஆம் ஆண்டு மே மாதம் வரை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது அப்போதைய அரசு தற்போதைய காலகட்டத்தில் அந்த பணிகள் எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அரசு ஆய்வு செய்யவேண்டும். தமிழகத்தில் மிச்சமுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் முழுமையான அளவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்.

ff

சென்னை யைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் 767 நீர்நிலைகள், 145 கால்வாய்கள் ஆக்கிரமிக் கப்பட்டு அதில் வீடுகள் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத் துறை புள்ளிவிவரம் கூறுகிறது. அதேபோல் தமிழக அளவில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டி லுள்ள 21,609 சிறுபாசன கண்மாய்கள், 48,758 ஊரணிகளும் நீர்வளத் துறை கட்டுப் பாட்டிலுள்ள 14,138 ஏரிகளும் ஆக்கிரமிப் பாளர்களின் பிடியில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, சென் னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் மழைக்காலங் களில் சென்னை மிதக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையில் தாழ் வான பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் தத் தளித்தன. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங் களில் புலம்புவதும் அதன்பிறகு அதை மறந்து விடுவதுமாக உள்ளனர் அரசும் அதிகாரிகளும்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், “"உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது திருநாவலூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி பகுதியிலிருந்த 4 ஏரிகள், 13 குளம் குட்டைகள், ஓடை நீர் போக்கி ஆகியவற்றை அடையாளமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிடு மாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை அதிகாரிகள் மதிப்பதே இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்யச் செல்லும் அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொய்யான தகவல்களை அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை முதலில் இனம்கண்டு அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்கிறார்.

விழுப்புரம் வி. மருதூர் ஏரி மீட்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த அகிலன், "வி. மருதூர் ஏரியில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பெரிய அளவில் சுரங்கம் போன்று குழிதோண்டி அதில் தொட்டி கட்டினார்கள் நகராட்சி அதிகாரிகள். இதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் கொடுத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.மருதூர் ஏரிக்கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் என்ற முறையில் வழக்கு போட்டேன். அதன்பிறகே ஏரியில் பணிகள் நிறுத்தப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி சம்பந்தமான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தற்போது மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகமே மிகப் பெரிய ஏரியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிச்சம் மீதியிருக்கும் ஏரிகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் போராடி வருகிறோம்'' என்கிறார்.

Advertisment

ff

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார் வெங்கடேசன். இவர் தனது நண்பர்கள் உதவியுடன் கிராமங்களிலுள்ள ஏரிகளை புனரமைப்பு செய்து கரைகளைப் பலப்படுத்தி வருகிறார். அதேபோல் செந்துறை பகுதியிலுள்ள ஊடக நண்பர் சேகர், பாளையத்தார் ஏரியைத் தத்தெடுத்து புனரமைப்பு பணிகள்செய்து கடந்த மழையின்போது அதிக அளவில் நீர்ப்பிடிப்புப் பகுதியாக மாற்றியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் ஏரிகளை புனரமைப்பு செய்து மழைநீர் சேமிப்பதற்கு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புப் பகுதிகளை விரைந்து அளவீடு செய்து கொடுக்கவேண்டும். பொதுப்பணித்துறையினர் அவர்களுக்கு உறு துணையாக இருந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசின் பணிச்சுமை குறை யும். உயர்நீதிமன்ற உத்தர வின்படி ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஏரிகள் ஆக்கிரமிப்பு உள்ளாகி வருவதையும் தொடர்ந்து கண்காணித்தால் நிலைமை மாறும்.

Advertisment