டெல்லியின் சங்க விஹார் பகுதியைச் சேர்ந்த 21 வயதே நிரம்பிய சபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், டெல்லி காவல் துறையின் எஸ்.டி.எம். அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார். வழக்கம்போல் ஆகஸ்ட் 26-ம் தேதி பணிக்குச் சென்ற சபியா, மாலையில் வீடு திரும்பவேயில்லை. அவரைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். காவல் துறையினர் தேடியதில், காணாமல் போன சபியா, முகம், கழுத்து, தலை என 50 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, மிகவும் கோரமான நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

nn

காவல்துறையைச் சேர்ந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆன பின்னும், கொலையாளியை டெல்லி காவல்துறை அடையாளம் காணாதது நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவல் துறையைச் சேர்ந்த பெண்ணுக்கே தலைநகர் டெல்லியில் இந்த நிலையா என்று கொந்தளித்த சமூக வலைத்தளவாசிகள், த்ன்ள்ற்ண்ஸ்ரீங் ச்ர்ழ் ள்ஹக்ஷண்ஹ்ஹ என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி நீதி கேட்டனர்.

இந்நிலையில் நிஜாமுதீன் என்ற நபரை கொலை யாளியாக அடையாளப்படுத்தியது டெல்லி காவல்துறை. அவர் சபியாவின் கணவர் என்றும், சமீபத்தில்தான் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர் என்றும், சபியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் நிஜாமுதீன்தான் சபியாவைக் கொலை செய்தான் என் றும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட் டது. நிஜாமுதீன் கைது செய்யப்பட்டதாகவும், இந்த குற்றத்தை அவன் ஒப்புக்கொண்ட தாகவும் கூறியது.

Advertisment

சபியாவின் பெற்றோர் இதை ஏற்கவில்லை. அந்த நிஜாமுதீன் தங்கள் மகளைத் திருமணம் செய்ததற்கு எந்த வொரு ஆதாரத்தையும் டெல்லி காவல்துறை காட்டவில்லை. இந்த கொடூரக் கொலையைச் செய்தது ஒரே ஒருவன்தான் என்பதை ஏற்க முடியாது. வேறு சிலரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதை செய்துதான் எங்கள் பெண்ணைக் கொலை செய்திருக்கிறார்கள். அனைத்துக் குற்றவாளிகளையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைமீது புகார் தெரிவிக்கிறார்கள். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழலை மறைப்பதற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த படுகொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஓவைஸி, மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குரலெழுப்பியுள்ளனர்.

nn

டெல்லி காவல்துறை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி காவல்துறை புகுந்து தடியடி நடத்தியபோது, அதில் காவல்துறைக்குச் சம்பந்தமில்லாதவர்களும் இணைந்து தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக டெல்லியில் பல நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு எதிராக டெல்லி பா.ஜ.க. எம்.பிக்களான பர்வேஷ் வர்மா, அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேச, அதையடுத்து, சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் என்ற பெயரில் கூலிப்படை ரவுடிகள் கலவரத்தில் இறங்கினர். டெல்லி வடகிழக்குப் பகுதியான மஜ்பூர், கர்தாம்பூரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கல்வீச்சு, தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வீடுகள், மசூதிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களில் 53 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தில், டெல்லி போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியிருந்தது. அந்த கலவரக்காரர்களைக் கைது செய்யாமல், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தைத் தூண்டக் காரணமான பா.ஜ.க. எம்.பிக்கள்மீது வழக்குப்பதிவு செய்யும்படி டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டபின்பும் கூட அவர்கள்மீது வழக்கு பதியவில்லை. இதையெல்லாம் அம்னெஸ்டி குறிப்பிட்டு, டெல்லி காவல்துறை யைக் குற்றம் சாட்டியிருந்தது. அதேபோல டெல்லி ஜெ.என்.யூ வளாகத்தில் நள்ளிரவில் நடைபெற்ற தாக்குதலில், பாதிக்கப்பட்ட மாணவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் போட்ட காவல்துறை, கலவரம் செய்தவர்களைக் கண்டுகொள்ள வில்லை.

இப்படி டெல்லி காவல்துறை ஒருதலைபட்சமாகச் செயல்படு வது தொடர்கதையாக இருப்பதால் தான் தற்போது காவல்துறையைச் சேர்ந்த பெண்ணின் படுகொலை யிலும் இவர்களின் விசாரணை அறிக்கைமீது சந்தேகம் எழுந்துள் ளது. தொடர்ச்சியாக இந்தியத் தலைநகரில் இரத்தம் தெறிக்கப் பலியாகிறார்கள் நிர்பயாக்கள்.

Advertisment