ரஸ்வதி குடும்பம் என்றால் அருப்புக்கோட்டையில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சரஸ்வதி வித்யாலயா, சரஸ்வதி என்ற பெயரில் இயங்கும் லாரி சர்வீஸ், மணல் மற்றும் செங்கல் சப்ளை நிறுவனம், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையம், டிராவல்ஸ், கிரஷர் தொழில் என உள்ளூரில் நாங்கள் பிசியாக இருப்பவர்கள்’ என்று தன்னுடைய பின்புலத்தை விவரித்துவிட்டு ‘ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, பன்மடங்கு லாபம் சம்பாதிக்கலாம்..’ என்று ஆசைகாட்டி நம்பவைத்து, பலரிடமும் லட்சங்களைக் கறந்து, கோடிகளைச் சுருட்டிவிட்டாராம் லட்சுமிபிரியா.

moneyfraud

பாதிக்கப்பட்டோர் தரப்பில் ""ஒரு லட்சம் தந்தால், நாளொன்றுக்கு (வட்டிக்கு நிகரான தொகை) ரூ.2000 தருவார். சிலரிடம், ஒரு லட்சத்துக்கு ஒரே வாரத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருப்பி தந்திருக்கிறார். தன்னைத் தேடிவரும் முதலீட்டாளர்களிடம் அம்மா... அப்பா... அண்ணன்... தம்பி...’ என்று உறவுமுறை சொல்லி பாசத்துடன் அழைப்பார். பெண்ணாக இருப்பதால், அவருடைய வார்த்தைக்கு மதிப்பளித்தோம்.

முதலீடு செய்யும் பணம் பல மடங்காகத் திரும்பக் கிடைக்கிறது என்பதால், தினத்தவணை, மாதத் தவணை, வட்டிக்கெல்லாம் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், முதலீடு என்ற பெயரில் பெருமளவு பணம் கொடுத்தோம். வீட்டு நகைகளைக்கூட வாங்கிக் கொண்டார்.

Advertisment

லட்சுமிபிரியாவும் அவருடைய கணவர் பாலகுமாரும் குற்றச்சாட்டுக் குள்ளாகியுள்ள நிலையில், லட்சுமிபிரியா மீது காசோலை மோசடி வழக்கு இருக்கிறது. விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு இருக்கிறது. லேப்டாப் moneyfraudவாங்கித் தருவதாக பலரிடமும் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார். திருட்டு வழக்கில் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். பணம் கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டிவந்த லட்சுமிபிரியாவும் அவருடைய கணவர் பாலகுமாரும் தற்போது தலைமறைவாகிவிட்டார்கள். சரஸ்வதி குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பொறுப்பேற்கவில்லை.

பணத்தை இழந்தவர்களில் ஒருவர் கடும் மனஉளைச்சலால், மாரடைப்பில் இறந்துவிட்டார். ஒருவருடைய திருமணம் நின்றுவிட்டது. தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பலர் உள்ளனர்''’என்று சோகத்தைப் பிழிந்தனர் ராம்குமார், ராமசாமி, சங்கீதா உள்ளிட்ட முதலீட்டாளர்கள்.

லட்சுமிபிரியா உள்ளிட்ட 5 பேர் மீதான ரூ.2.37 கோடி மோசடி புகாரை, விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தன்னால் 40 முதலீட்டாளர்கள் பணத்தை இழந்த நிலையில், தொடர் முயற்சிக்குப் பிறகே, ராம்குமார் அளித்த புகார் மீது, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம், செக்ஷன் 406 மற்றும் 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனாலும், சுயநலத்தோடு லட்சுமிபிரியா வையும், பாலகுமாரையும் தப்பவிட்டுள்ளது. லட்சுமிபிரியாவை தேடிப்பிடிப்பதற்கு, ‘பெரிய தொகை’ கேட்டுள்ளனர். லட்சுமிபிரியா செய்த மோசடியால் வீடு வாசலை இழந்து, உள்ளூரில் தலைகாட்ட முடியாமல், வேறு ஊருக்கு இடம்பெயர்ந்த ராம்குமாரால் அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியவில்லை. அதனால், வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Advertisment

நாம் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜனை தொடர்புகொண்டோம். ""விருதுநகர் மாவட்டத்துல லட்சுமிபிரியா மேல வழக்கு எதுவும் பதிவான மாதிரி தெரியல. மதுரை மாவட்டம் - திருமங்கலத்துல பணம்moneyfraud கொடுத்து ஏமாந்தவங்க தந்த புகாரில்தான், இங்கே வழக்கு போட்டிருக்கோம். அந்த ராம்குமார் ஒரு பிராடு. எப்.ஐ.ஆர். போட்ட தும் ஓடிட்டான். டாகுமெண்ட் விவரம் எதுவும் தரல. அவன் புரோக்கர்தான். இப்போதைக்கு வெறும் 40 லட்சம்தான் லட்சுமிபிரியா தர வேண்டியிருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னால குழந்தை பெத்திருக்கா. இதுக்கு மேல போனா சூசைட் பண்ணிக்கலாம்.. புருஷனையும் பொண்டாட்டி யையும் தேடிக்கிட்டிருக்கோம்''’என்றார்.

லட்சுமிபிரியா தரப்பில், அவருடைய வழக்கறிஞர் திருப்பதி நம்மிடம் பேசினார். “""லட்சுமிபிரியா இப்ப எங்கே இருக்காங்கன்னு நான் சொல்லமுடியாது. அது தொழில் தர்மம். ராம்குமார் கொடுத்த புகார் மட்டும்தான். வேற எந்த வழக்கும் அவங்க மேல இல்ல. ராம்குமாரும் இதுல ஒரு குற்றவாளிதான். முந்திக் கிட்டு புகார் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே பாதிக்கப் பட்டவங்கன்னு யாரும் கிடையாது. கொடுத்ததைக் காட்டிலும் நிறையவே வாங்கிருக்காங்க. எல்லாத்துக்கும் ஆதாரமா பேங்க் ஸ்டேட்மெண்ட் இருக்கு. நான் பேசுறதுக்கோ, வாதம் பண்ணு றதுக்கோ, அவசியமே இல்ல''’என்று ஒரே போடாகப் போட்டார்.

‘நான்கு மடங்கு பணம் தர லட்சுமிபிரியாவால் எப்படி முடிந்தது? தன்னால் யாருக்கும் பாதிப்பு இல்லையென்றால், எதற்காக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, அவர் தலைமறைவாக இருக்கவேண்டும்?’ என்று ராம்குமார் தரப்பினர் எழுப்பும் கேள்விகளுக்கு, யாரிடமும் எந்த பதிலும் இல்லை.