த்தரப்பிரதேசத்திலுள்ள சித்தார்த் யுனிவர்சிட்டியில், 22 புரபஸர்கள், 21 அசோசியேட் புரபஸர்கள், 40 அசிஸ்டென்ட் புரபஸர்கள் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் சைக்காலஜி பாடத்துக்கு 2 அசிஸ்டன்ட் புரபஸர்கள் பணி யிடத்தில் ஒன்று, ஓ.பி.சி. கோட்டா மூலமும், இன்னொன்று, பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான கோட்டா மூலமும் நிரப்பப்படுவதாக இருந்தது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான கோட்டாவில், உ.பி. அடிப்படைக் கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவிவேதியின் சகோதரர் அருண்குமார் திவிவேதி, அசிஸ்டென்ட் புரபஸராக கடந்த மே 21-ம் தேதி பணியில் சேர்ந்தார். தற்போது இந்த பணி நியமனம்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisment

ஒரு அமைச்சரின் தம்பி எப்படி பொரு ளாதாரத்தில் பின்தங்கியவராக இருக்க முடியும் என்று விமர்சனமும், புகார்களும் எழுந்தன. சமூக ஆர்வலர் நுடன் தாக்கூர் என்பவர், முறைகேடாகப் பணியில் சேர்ந்த அமைச்சரின் தம்பியை நீக்கும்படியும், விசா ரணை நடத்தி தண்டனை அளிக்கும் படியும் கவர்னருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பினார். இதுகுறித்து விசாரிக்கும்படி சித்தார்த் யுனிவர்சிட்டியின் துணைவேந்தருக்கு கவர்னர் உத்தரவிட்டார். விவகாரம் பெரிதானதால் அமைச்சரின் தம்பி, தனது புரபஸர் பதவியை மே 26-ம் தேதி ராஜினாமா செய்தார்.

Advertisment

dd

"நான் ஒரு அமைச்சரின் தம்பியாக இருப்பது பெரிய குற்றமா? பிராமணனாகப் பிறந்தது எனக்கான சாபமா?'' என்றெல்லாம் ஓவர் சென்டிமென்ட்டாக வசனங்களை அள்ளிவிட்டார். அதுமட்டுமல்லாமல், "தான் மிகவும் நன்றாகப் படித்து பட்டம்பெற்று, மெரிட் மூலமாகவே இந்த பதவிக்கு வந்துள்ளேன், கோட்டா மூலம் வரவில்லை' என்று பொய்யை அவிழ்த்துவிட்டவர், "தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதால் இப்பணியிலிருந்து விலகுகிறேன்'' என்று தெரிவித்தார்.

தனக்கு வருமானம் குறைவுதான் என்று சதீஷ் திவிவேதி குறிப்பிட்டிருப்பது பொய்யென்றும், அவர் ஏற்கனவே ராஜஸ் தானிலுள்ள பனஸ்தலி வித்யாபீத் என்ற கல்லூரியில் அசிஸ்டென்ட் புரொபசராகப் பணி யாற்றியவர்தான். இவருக்கு கடந்த டிசம்பர் 2020-ம் ஆண்டில் திருமணமானது. அவரது மனைவியும் பீகாரிலுள்ள கல்லூரி ஒன்றில் புரொபஸராகத்தான் பணியாற்றிவருகிறார். ஆக, இவர்கள் பொருளாதாரத்தில் குறைந்தவர்களாக இருக்க வாய்ப்பேயில்லை.

Advertisment

அதேபோல, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இவரது சான்றிதழும் 2020-ம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது. அதைக்கொண்டு பணியைப் பெற்றிருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் ராஜினாமா செய்வதே சரியென்று எதிர்தரப்பினர் கூறுகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்காகாந்தியும், இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கான பணிகளைச் செய்யாமல், தங்களுக்கு வேண்டியவர் களுக்கு குறுக்கு வழியில் பணிவாய்ப்பு பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கும் உ.பி. அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

-தெ.சு.கவுதமன்