தாவது ஒரு ரூபத்துல ஏதாவது ஒரு பிரச்சனையுடன் ரிலீஸ் ஆனாத்தான் அது விஜய் படத்திற்கு வேல்யூ. "தலைவா'வில் ஆரம்பித்து "சர்க்கார்'-ல் நின்று இப்போது "மாஸ்டர்' படத்திற்கு கொரோனா ரூபத்தில் சிக்கல் வந்து, முதல்வர் எடப்பாடியை விஜய் சந்தித்ததன் மூலம் அந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

master

லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் விஜய்- விஜய்சேதுபதி-மாளவிகா மோகனன் காம்பினேஷனில் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்தவர், விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்றாலும் 200 கோடிக்கு விலைபேசி, படத்தின் ஒட்டுமொத்த ரிலீஸ் ரைட்சையும் வாங்கியவர், இணைத்தயாரிப்பாளரான யு.லலித்.

கொரோனா காலத்தில் "சூரரைப்போற்று' படத்தை ஓடிடியில் சூர்யா ரிலீஸ் செய்து தப்பித்ததைப் பார்த்த லலித்தும் "மாஸ்டர்' படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்தார். மேலும் 200 கோடி ரூபாய்க்கு சினிமா ஃபைனான்சியர்களின் ஒயிட் கணக்கு வட்டியான 3 சதவீதத்தை ஏழு மாதங்களுக்குப் போட்டுப் பார்த்ததும் லலித்துக்கு கிர்ரடித்தது. ஓடிடியில் ரிலீசுக்காக அமேசானிடமும் பேச்சுவார்த்தையை லலித் ஆரம்பித்த போதுதான், எடப்பாடியின் ஆசியுடன் திருச்சியில் பவர் காட்டும் ஆளும் கட்சிப்புள்ளி, பொறுமை காக்கும்படி சிக்னல் போட்டதும் ஓடிடி ப்ளான் கைவிடப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், தமிழகமெங்கும் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தது எடப்பாடி அரசு. ஆனால் தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால், 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த வாரம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் தியேட்டர் அதிபர்கள். அரசு தரப்பில் சலனமில்லை.

100% இருக்கைகளுக்கு அனுமதி இல்லையென்றால், பொங்க லுக்கு ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் பண்ணி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த தயாரிப்பாளர் லலித்தும் தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியும் முதல்வர் எடப்பாடியைச் சந்திக்குமாறு விஜய்யை வற்புறுத்தியுள்ளனர். பலகட்ட முயற்சிகளுக்குப் பின் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருணையால், கடந்த டிச.27-ஆம் தேதி இரவு, முதல்வர் எடப்பாடியின் இல்லத்திற்கு லலித்துடன் சென்றுள்ளார் விஜய். முதலில் மூவரும் 15 நிமிடங்கள் பேசிய பின், எடப்பாடி-விஜய் ஆகிய இருவர் மட்டும் தனியாக 15 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே அமைச்சர் வேலுமணியும் அங்கு வந்து சேர்ந்திருக்கிறார். தேர்தல் நிதி 10 கொடுத்திருங்க என ஆரம்பித்து 5-ல் ஓகே ஆனதால், ஹேப்பியாக வெளியே வந்திருக்கிறார் மாஸ்டர். ஆனால் 29-ஆம் தேதி வெளியான லாக் டவுன் தளர்வுகள் பட்டியலில் தியேட்டர்களுக்கு 100% அனுமதி இல்லாததைப் பார்த்து ஜெர்க்காகிவிட்டார் விஜய்.

Advertisment

டாஸ்மாக் பாரில் 100%, தியேட்டர்களுக்கு 50% சதவிகிதமா?’என பா.ஜ.க. ஸ்டார் குஷ்புவும் குமுறினார். ஆனாலும் விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் "மாஸ்டர்' விஜய்.

simbu

பொங்கலுக்கு சிம்புவின் "ஈஸ்வரன்' படமும் ரிலீஸ் ஆவதாக ஜன.02-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு தரப்பு. இதைப் பார்த்ததும் பஞ்சாயத்திற்கு பிரச்சனை சுழி போட்டார் 2017-ல் சிம்புவை வைத்து ‘"அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளராரும் அதிமுக புள்ளியுமான மைக்கேல் ராயப்பன்.

cinema

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலின் போது எடப்பாடியையும் மோடியையும் சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளினார் டி.ஆர். அதை இப்போது கரெக்டாக எடப்பாடியிடம் கோர்த்துவிட்ட மைக்கேல் ராயப்பன், "ஈஸ்வரன்' படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களிடமும் பிட்டைப் போட்டுள்ளார். அட ஈஸ்வரா இதென்ன புதுப் பிரச்சனை என வினியோகஸ்தர்களுக்கு கண்ணைக் கட்டியது.

""மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவிற்குமிடையிலான பணப் பிரச்சனை கோர்ட்டில் இருக்கும் போது, இப்போது ஈஸ்வரன் படத்திற்குப் பிரச்சனை பண்ணுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை''’ என்கிறார் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் என்.சுபாஷ் சந்திரபோஸ்.

""17 கோடியில் படத்தை தயாரித்து 28 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தார் மைக்கேல் ராயப்பன். ஆனால் தனது சம்பளம் 8 கோடியில் மூன்றரை கோடியை விட்டுக் கொடுத்தார் சிம்பு. இப்போதோ வினியோகஸ் தர்கள் சங்கத்தை உடைத்து, தனிசங்கத்தின் தலைவராகியிருக்கும் அருள்பதி-மைக்கேல் ராயப்பன் கூட்டணி ‘ஈஸ்வரனுக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள்''’என ரொம்பவே கொதித்தார் த.தி.த.சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன்.

வைகைப்புயல் பாணியில் "என்ன கையப்பிடிச்சு இழுத்தியா'ங்கிற கதையா இருக்கு தமிழ் சினிமாவின் நிலைமை.

-ஈ.பா.பரமேஷ்வரன்