"மாஸ்டர்',’"ஈஸ்வரன்'’ தியேட்டர் யாருக்கு?'’என்ற தலைப்பில் கடந்த ஜன.16-19 நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் மாஸ்டரின் தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பின் தயக்கத்தால், "ஈஸ்வரன்' படத்தை வாங்கிய 7ஜி சிவா, தமிழகம் முழு cinemaவதும் தியேட்டர்களை புக் பண்ணி, 14-ஆம் தேதி படம் ரிலீஸ் என 11-ஆம் தேதியே அதை விளம்பரப்படுத்தியதையும் எழுதி யிருந்தோம். 13-ஆம் தேதி இரவு வரை சிம்புவும் 7 ஜி சிவாவும் பெரும்பாடுபட்ட கதையைப் படிப்பதற்கு முன்பு, விஜய்யின் "மாஸ்டர்' நிலவரத்தைப் படிச்சிருவோம்.

எடப்பாடியின் சீக்ரெட் சிக்னல்!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக தியேட்டர்களில் 100% இருக்கை களுக்கு அனுமதி வழங்கி, அதன்பின் மத்திய அரசின் அழுத்தத்தால் 50%தான் என பல்டியடித்தது எடப்பாடி அரசு. முதலில் 100% என அறிவிப்பு வந்ததும் கோலிவுட்டே குஷியாகி முதல்வர் எடப்பாடிக்கு நன்றி மழையைப் பொழிந்தனர். மாஸ்டர் படக்குழுவின் சார்பிலோ எடப்பாடிக்கும் அமைச்சர் தங்கமணிக்கும் நன்றியைக் காணிக்கையாக்குறோம் என தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து குஷிப்படுத்தினர். ஆனால் 50% அறிவிப்பு வெளியான தும் அனைவருமே கப்சிப்பாகினார்கள்.

மறுபடியும் மொதல்ல இருந்தா என மண்டைக் குழப்பத்தில் இருந்தார்கள் லலித்தும் விஜய் யும். நிதி- போஸ் டர் என ஆன பிறகு இப்படி ஆனால் எப்படி என அரசுத் தரப்பில் யோசித்திருப்பார்கள் போல. ""நாங்க 50 சதவிகிதம்னுதான் ஆர்டர் போடுவோம். 13-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை ஸ்பெஷல் ஷோ போட் டுக்கங்க. 150 சதவிகிதம் கூட தியேட்டர்ல ஏத்திக்கங்க, மெகா சிட்டிகளில் சிலரின் அக்கப்போரால் அதிகாரிகள் 5 ஆயிரம் ஃபைன் போடுவார்கள். டேக் இட் ஈஸி, பி ஹேப்பி''’என ஆளும் தரப்பிலிருந்து சீக்ரெட் சிக்னல் போடப்பட்டது.

Advertisment

சொன்னதை செய்த விஜய்!

vijay

இதனால் வெரிஹேப்பி யான விஜய்யும் லலித்தும் "மாஸ் டர்' ரிலீசான 600 தியேட்டர்களுக்கும் க்ரீன் சிக்னல் போட்டனர். 13-ஆம் தேதி அதிகாலை 5 மணி காட்சிக்கும் விஜய்யின் ரசிகர்களால் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் நிரம்பி வழிந்தது. (ரசிகர் மன்ற ஷோவுக்கு டிக்கெட் கட்டணம் 2,500, 3,000 என்பது தனிக்கதை) முதல் காட்சி முடிந்து வெளியே வந்துமே தளபதிக்கு 100% வெற்றி என உற்சாகக் கூச்சலிட்டனர் விஜய் ரசிகர் கள். தமிழகத்தில் மட்டும் முதல் நாளிலேயே 26 கோடியே 78 லட்சத்தை அள்ளினார் ‘மாஸ்டர்’. ஏற்கனவே சிக்னல் போட்டபடி சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் உள்ள சில தியேட்டர்களுக்கு 5 ஆயிரம் ஃபைன் போட்டு சின்சியராக கடமையாற்றினார்கள் அதிகாரிகள்.

Advertisment

என்ன ஆனாலும் சரி, வெயிட்பண்ணி தியேட்டரில்தான் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்வோம். ஓடிடி வேண்டவே வேண்டாம் என் பதில் உறுதியாக இருந்த விஜய், சொன்னபடியே தியேட்டரில் ரிலீஸ் செய்ததால், தியேட் டர் அதிபர்கள் தரப்பிலும் இனி அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப் போகும் மினிமம் பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்துவிட்டது. விஜய்க்கு சினிமா இன்டஸ்ட்ரியில் நல்ல பெயர்.

மாளவிகா மகிழ்ச்சி, ஆண்ட்ரியா அப்செட்!

malvika

மாஸ்டர்’சூப்பர் ஹிட்டானதால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார், படத்தின் ஹீரோயினான மாளவிகா மோகனன். அடுத்ததாக சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் டைரக்ஷனில் தனுசுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ள படத்தின் ஷூட்டிங் கிற்காவும் மீண்டும் விஜய்யுடன் ஜோடி போடுவதற்காகவும் காத்திருக்கிறார் மாளவிகா. அதே நேரம் அதே "மாஸ்டர்' படத்தில் இரண்டே இரண்டு சீன்களில் மட்டும் தன்னைக் காட்டியதால் செம அப்செட்டில் இருக்கிறார் ஆண்ட்ரியா. சரி மாஸ்டர் போனா போகட்டும் மிஷ்கினின் "பிசாசு-2' இருக்குல்ல என தனக்குத் தானே ஆசுவாசம் ஏற்றிக் கொண்டுள்ளார் ஆண்ட்ரியா.

ஈஸ்வரனுக்கு வந்த சோதனை!

mm

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றாலும் டி.ஆர். மீது கடுகடுப்பில் இருந்தார் சங்கத்தின் புதிய தலைவரான முரளி. அவர் மட்டுமல்ல, சங்க நிர் வாகிகள் அனைவருமே டி.ஆர். மீது காட்டத்தில் இருந்ததால், 2020 டிச.13-ஆம் தேதி கூடிய சங்கத்தின் முதல் செயற்குழுவிலேயே, சிம்பு மீது தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் கொடுத்திருந்த பஞ்சாயத்து மனு கிண்டிக் கிளறப்பட்டது. அதன்பின்தான் எடப்பாடி ஆசியுடன் சிம்புவின் ஈஸ்வரனுக்கு எதிராக சீற ஆரம்பித்தார் மைக்கேல் ராயப்பன். ஜன.12-ஆம் தேதி மீண்டும் பஞ்சாயத்து திரியைக் கொளுத்திப் போட்டு, சிம்புவுக்கு எதிராக மீடியாக்களிடமும் ஆவேசமானார் ராயப்பன். இதனால் ரொம்பவே சோதனைக்குள்ளானது ஜன.14-ஆம் தேதி ரிலீசாக வேண்டிய ‘ஈஸ்வரன்’.

tr

கவுன்சிலில் இருக்கும் பழைய வம்படி பஞ்சாயத்து, கோர்ட்டில் நடக்கும் வழக்கு, மீண்டும் கவுன்சிலின் நெருக்கடி இவற்றால் நொந்து நொம்பல மானார்கள் ஈஸ்வரனின் ஹீரோ சிம்புவும் படத்தை வாங்கிய சிவாவும். புக் பண்ணப்பட்ட தியேட்டர்களும் பின்வாங்கியதால் ரொம்பவே திணறினார்கள் ஈஸ்வரன் படக்குழுவினர். இந்த தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் உற்றுக் கவனித்த தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்தின் இறுதிக்கட்ட முயற்சிகளால் சுமூக நிலை ஏற்பட்டது. அதாவது இனிமேல் சிம்பு நடிக்கும் மூன்று படங்களின் சம்பளத்திலிருந்து தலா இரண்டரைக் கோடியை மைக்கேல் ராயப்பனுக்கு தந்துவிட வேண்டும் என முடிவானது.

சரண்டரானாரா சிம்பு?

தனது படம் ரிலீஸ் ஆவதற்கு இப்படி பாடாய்ப்படுவதைப் பார்த்த சிம்பு, 13-ஆம் தேதி பின்னிரவு 1 மணிக்கு கவுன்சிலின் தலைவர் முரளியிடம் சரண்டராகியுள்ளார். அதன்பின்தான் முரளியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்து, 14-ஆம் தேதி பொங்கலன்று அதிகாலைக் காட்சியுடன் தமிழகம் முழுவதும் 350 தியேட்டர்களில் ரிலீசானது "ஈஸ்வரன்'. முதல் நாளே 3 கோடியே 58 லட்சம் வசூலானது.

simbu

சிம்புவின் சரண்டர் குறித்து, அவரது தந்தை டி.ஆரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, ""இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்றதுக்கில்ல'' என்றார் விரக்தியாக. ஆனால் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலனோ, ""யாரிடமும் சிம்பு சரண்டராகவில்லை, கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. வருகிற 20-ஆம் தேதிக்கு மேல் திருப்பூர் சுப்பிரமணியம், கோவை ராஜமன்னார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும். அதில் மைக்கேல் ராயப்பனின் தில்லுமுல்லு கணக்குகளும் அம்பலத்திற்கு வரும்'' என்றார்.

அடேங்கப்பா பாலாஜி கப்பா

""இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம்'' என கடந்த 15-ஆம் தேதி தயாரிப்பாளர்கள் கவுன்சில் முடிவு செய் துள்ளது. இதனால் ஈஸ்வரன் படத்தை நல்ல விலைக்கு விற்று தப்பித்த தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்த பாலாஜி கப்பா, ""என்னோட படம் தப்பிச்சிருச்சு. இனிமேல் சிம்புவின் மீது கவுன்சில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்'' எனச் சொல்லி அடேங்கப்பா என அசர வைத்தார் பாலாஜி கப்பா.

-ஈ.பா.பரமேஷ்வரன்

___________________

வெளிநாடுகளிலும் மாஸ்டர்!

கொரோனா பீதியால் ஒருவருடமாக எந்த தமிழ்ப்படமும் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகவில்லை. "மாஸ்டர்'தான் அங்கேயும் புத்துணர்ச்சியூட்டியுள்ளார். அமெரிக்காவில் (30% சீட் தான்) கலிபோர்னியாவைத் தவிர மற்ற மாநிலங்களிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (50%) படம் ரிலீஸ் ஆகி மெகா ஹிட்டாகியுள்ளதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அங்கே வினி யோக உரிமை வாங்கியுள்ள விவேக் ரவிச்சந்திரன். விஜய்யின் மனைவி சங்கீதாவின் லண்டனில் "மாஸ்டர்' ரிலீசாகவில்லை.