கச்சத்தீவு நம் உரிமை!

கடற்பரப்பு உரிமைக்காக உலக நாடுகள் அடித்துக் கொண்டிருக்கிற நிலையில்... இந்தியாவோ நமது தமிழ் நிலப்பரப்பான கச்சத்தீவை இலங்கைக்கு வாரிக்கொடுத்துவிட்டது. உலகநாடுகள் கடற்பரப்பு உரிமைக்கு யுத்தம் செய்யக்கூட தயாராக இருக்கிறது என்பதும், மறைமுக யுத்தத்தை நடத்திவருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால் நாம் இழப்பவை என்னென்ன? என்பதை தனது ‘கச்சத்தீவு’ நூலில் செம்பியன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கே பார்க்கலாம்...

ii

கடலின் அடிப்பரப்பில்...!

1945-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி, உலகெல்லாம் பரவி வளர்ந்துள்ளது. அதன் காரணமாகவே கடலினிடையே இருக்கும் தீவுகள், சிறு தீவுகள், பெரும் பாறைகள் ஆகியவற்றைக் கடற்கரை நாடுகள், கடலில் பூத்த பொன்மலராகக் கருதுகின்றன. கடலின் மேல் உள்ள சின்னஞ்சிறு தீவுகளையும் சுற்றி நீருக்கடியில் பரந்துபட்ட கடற்படுகைகள் (Sea Beds)கடற்குன்றுகள் (Sea Mounds) ஆகியனவற்றையும் வைரச் சுரங்கங்களாகவே அந்தந்த நாடுகள் கருதுகின்றன. கடலின் அடிப்பரப்பு, படுகைகள், குன்றுகள் ஆகியவை இவ்வுலகிற்கு ஆயிரக்கணக்கான நூற்றாண்டு களுக்கு வேண்டிய கனிமவளத்தைத் தரக்கூடியவை. அவற்றைப் பேரளவில் பயன்படுத்த அடுத்த நூற்றாண்டுகளிலேயே இன்றியமையாமை வரும். இதுதான் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் எண்ணம். (Practical Geology and Natural Environment Seas and Oceans Future American Petroleum Institute)

கடல் சட்ட மாநாடு:

இந்த எண்ணத்தின் காரணமாகவே இந்த நாடுகளெல்லாம் தங்களின் கடற்கரைக்கு நேரான கடற்பரப்புகளைத் தாமே அனுபவித்துக்கொள்ள ஒன்றுக்கொன்று முந்திக்கொள்கின்றன. இதனால் ஏற்படப்போகும் பற்பல போர்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் 1958-ஆம் ஆண்டு 86 நாடுகள் ஜெனீவாவில் சட்ட மாநாடு (Conference on the Law of the Sea) என்ற பெயரில் கூடின. கடற்கரையோர நாட்டுரிமைக் கடல் (Territorial Sea) கடல் உயர் பரப்பில் மீனையும், உயிரினங்களை யும் பாதுகாக்கும் பொறுப்பு, கடற்கரையோர மணல்மேட்டு நிலம் ((Continental Shelf) ஆகியவற்றைப் பற்றிப் பொதுவான, இணக்கமான ஒப்பந்தங்களுக்கு இம்மாநாடு வழிகோலியது.

நாட்டுரிமைக் கடல்:

ஆனால் இந்தப் பொது ஒப்பந் தங்கள் உலக நாடுகள் அனைத்தை யும் கட்டுப்படுத்தியதில்லை. ‘வல்லவன் நினைப்பது’ என்கிற தத்துவமே மேலோங்கி வருகின்றது. கடற்கரையோர நாடுகள் தத்தம் நாட்டுரிமைக் கடலுக்கு (Territorial Sea) அப்பாற்பட்ட பகுதிகளி லும் ஆணை செலுத்துவதையே விரும்புகின்றன. சில நாடுகள் தத்தம் நாட்டுரிமைக் கடலுக்கு அப்பால் 50 கடல் மைல்களை (Nautical Miles) தம் ஆணைக்கு உட்படுத்தி வருகின்றன. சிலி, ஈக்வடார், பெரு ஆகிய நாடுகள் சாண்டியாகோ அறிக்கை (Sandiago Declaration) மூலம் 18.8.1952 அன்று கடற்கரைக்கு நேரான கடற்பரப்பில் 200 கடல் மைல்களை தங்களது என அறிவித்தன. தங்களின் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்க்க கடலால் மட்டும்தான் முடியும், எனவே தான் கடலில் உயிர் எல்லை (Biological Boundry)எவ்வளவு தூரம் உண்டோ அவ்வளவு தூரம் எங்களுக்கு என்று வாதாடின.

(The Claims to Soverign Rights upto 200 Miles from the Coast is Based on the Theory that the Biological Boundary is 80# 100 Miles from the Coast the Shore in Summer and 200# 250 in Wintor Enrigue G.Sayan the Position of Peru)

இவ்வாறு அந்த நாடுகள் தங்களின் கடற்பரப்புகளை அகலமாக வைத்துக்கொள்ள முற்பட்டன. இவ்வாறு ஆணையுரிமை இடங்களாக வைத்துக்கொள்ளத் தவறுவோ மானால் கடலின் அடிப்பரப்பை அகழ்ந்து, கனிமவளம் எடுக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று அஞ்சின. எனவேதான் அவை தங்களின் ஆணையுரிமையைக் கடலின் மேல் மேவவிட்டுக் கனிமவள ஆராய்ச்சிகளை விரைந்து நடத்தின.Maritime Mining in Britain Dec#1969) -இப்படி பல உதாரணங்களைத் தந்துள்ளார் செம்பியன். மேலும் அந்த நூலில் அவர் சொல்லியிருப்பதைச் சுருக்கமாகப் பார்த்தால்...

செயற்கைத் தீவுகள்:

கடலின் அடிப்பரப்பில் பல இடங்களில் பெரிய மேடுகள் இருக்கும். அந்த மேடுகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மேலும் உயர்த்தி, செயற்கைத் தீவுகளை உருவாக்குகின்றன. இவ்வண்ணம் உருவாக்கப்பட்டவைதான் Atlantis City Gold's Grand Copri Republic என்ற அமெரிக்க கடற்கரையோரத் தீவுகள். இந்தத் தீவுகளை வைத்தே கடலின் ஆழடியில் கனிமவளச் சுரங்க அமைப்பு வேலைகளை மேற்கொள்கின்றன. கனிமச் சுரங்க வேலைகளுக்கு இப்படியான சிறு சிறு செயற்கைத் தீவுகளையே நம்பியிருக் கின்றன. உலக நாடுகள் இவ்வண்ணம் நாட்டுரிமைக் கடல், அதனை அடுத்துள்ள கடற்பரப்பு, கடற்கரையோர மணல் மேட்டு நிலம் ஆகியவற்றுக்காகப் போராடியும், கண்ணும் கருத்துமாக இருந்தும் வருகின்றன. சின்னஞ்சிறு தீவுகளில் கனிமவள ஆய்வை நடத்துவதற்கான அமைப்பை நிறுவி, தம் மக்களின் வாழ்வை மிகுக்குகின்றன. தீவுகள் போதாது எனக் கருதி, கடலின் உள்ளே மேடுகளையே செயற்கைத் தீவுகளாக்கி வளமார் எதிர்காலம் நோக்கி விரைகின்றன. ஆனால் இந்திய அரசுக்கு இவற்றைப் பற்றிய எண்ணமே இல்லை.

கடல் உயிரின வளப் பாதுகாப் புத் திட்டங்கள் போட்டு தங்கள் கடற்பரப்பை நாடுகள் அக்கறை யோடு பாதுகாக்க... இந்திய அரசோ கச்சத்தீவை இலங்கைக்கு வழகியதால், பாக்.ஜலசந்தி, மன்னார் வளைகுடா முழுவதிலும் தமிழகத்தின் எதிர்காலக் கடல் உயிரின பாதுகாப்புத் திட்டங்கள் நசியப் போகின்றன. கச்சத்தீவை இழந்தது எதிர்கால கடல் உயிரின வள ஆதாரத்தை இழந்ததாகவே பொருள்.

தமிழக கடற்கரையின் பெரும் பேறு!

உலகின் கடல்களில் உள்ள மீன்கள் பிற உயிரினங்கள் அனைத் தும் இன்று தமிழகக் கடற்பகுதியை நோக்கித்தான் வருகின்றன. கடல் களின் நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக இந்தப் பெரும் பயனை தமிழகம் அடைகிறது. உலகிலேயே கடல் உயிரின வளத்தில் தலைசிறந்து நிற்க வேண்டிய வாய்ப்பு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் சிறிமா வுக்கு அன்புப்பரிசாக கசத்தீவை வாரிக் கொடுத்துவிட்டாரே இந்திரா. அதனால் தமிழகம் வஞ்சிக்கப்படப் போகிறது. உலகின் கடற்கரை நாடு கள் தங்களின் கரையோரக் கடற்பரப்பில் தூய்மை கெடாமல் இருக்க தீவிரமாக ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது. பாக்.ஜலசந்தியில் மன்னார் வளைகுடாவில் செல்லும் வெளிநாட்டு கப்பல்களிலிருந்து வழியும் எண்ணெய்யால் ஏற்படும் கெடுதலைத் தடுக்க இந்நாள்வரை எந்த எண்ணமும் இல்லாமல்... மத்திய அரசு அந்நீர் வழிகளில் கப்பல் இலங்கை யின் அனுமதியோடு செல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதை நாளை இந்தியாவோ, குறிப்பாக தமிழகமோ இதை தட்டிக்கேட்க வழியேது?

இந்த அணுயுகத்தில் வளரும் நாடுகளே அணுவெடி ஆய்வுகளைச் செய்கிறது. அதனால் உண்டாகும் கதிரியக்கக் கழிவுகளை கடல்களில் கொட்டிவிடுகின்றன. இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியுள்ளதால் நாளை இலங்கை ஹைட்ரஜன் பாம் ஆய்வுகளின் விளைவுகளைச் சந்திக்கும் நிலைக்கு தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது மத்திய அரசு.

கச்சத்தீவு பறிபோனதால் அதைத் தொடர்ந்து நம் நிலப்பரப்பும், நீர்ப்பரப்பும் போய், நாள்தோறும் நம் தமிழகத்து மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சிறைப்பிடிக்கப்படுகிறார் கள். சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கச்சத்தீவை நம் தமிழகத்திலிருந்து பிரித்துக் கொடுத்தது இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் என்றால்... இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிரைப் பறிகொடுக்க வேண்டும்? இது எத்தனை காலத்துக்கு தொடர வேண்டும்? இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைச் சுடுகிறது. இந்தியக் கடற்படை வேடிக்கை பார்க்கிறது.

கச்சத்தீவைத் தாரைவார்த்தபோது கலைஞர்தான் தமிழ்நாட்டு முதல்வர்.

""நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். இந்திராகாந்தி அவகள் கேட்கவில்லை'' என விளக்கம் சொன்னார் கலைஞர்.

என் உணர்வு எனன்வென்றால்... இனியும் கச்சத்தீவு இலங்கை யின் உரிமைக்குட்பட்ட நிலமாக இருக்க அனுமதிக்கக் கூடாது. அதை மீட்டு தமிழகத்திடம் இந்திய அரசு ஒப்படைக்க வேண்டும். இன்னும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. எதிர்காலச் சமுதாயம் நம் முகத்தில் காரித் துப்பும்.

கச்சத்தீவு நம்முடையதே! அதை மீட்டெடுப்போம் நாளையே!

விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை ஏன்?

Advertisment

அதைப் பற்றிச்... சொல்கிறேன்....