பதவிக்காக நடந்த கொலை?
ராஜீவ்காந்தி கொலைக்கும், நரசிம்மராவ் பிரதமரானதற்கும், ராஜீவ்காந்தியால் சரிந்திருந்திருந்த சந்திராசாமியின் சாம்ராஜ்யம் மீண்டும் நிலை நாட்டப்பட்டதற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை பற்றிய ஆய்வை மறு புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதை ஏன் நான் வலியுறுத்துகிறேன்?
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் முன்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ்காரருமான ஆரிஃப் முகமதுகான் பதிவு செய்த வாக்குமூலத்தை இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்...
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, அவரைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று சந்திராசாமி விரும்பினார். அதற்கு ஏதுவாக போஃபார்ஸ் பீரங்கி பேர ஊழல் ஆவணங்களை லண்டனிலிருந்து வாங்கி வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்கள். சந்திராசாமி சொன்னதற்காக நான் லண்டன் செல்லவில்லை. நரசிம்மராவ் சொன்னார் என்பதற்காகத்தான் லண்டனுக்குச் செல்ல ஒப்புக்கொண்டேன்.
போஃபார்ஸ் ஆவணங்களை வைத்து ராஜீவ்காந்தியை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவது; ராஜீவ்காந்தி அதற்கு இணங்க மறுத்தால், குடியரசுத் தலைவர் மூலம், குடியரசுத் தலைவருக்கு உரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ராஜீவ்காந்தியை நீக்கிவிட்டு, நரசிம்மராவை பிரதமராக்குவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிற்கும், ராஜீவ்காந்திக்கும் நல்லுறவு இல்லாமல் இருந்தது.
(பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜனாதிபதி ஜெயில்சிங்கை பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் மரபுக்காகவாவது ஜனாதிபதிக்கு மரியாதைகொடுத்து, அவரைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதிக்கு உரிய மரியாதையை ராஜீவ்காந்தி தரவில்லை. சந் திப்பதையும் தவிர்த்தே வந்தார். அந்த உண்மையை அந்தச் சமயத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களே ஙஹ் டழ்ங்ள்ண்க்ங்ய்ற்ண்ஹப் வங்ஹழ்ள் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)
போஃபார்ஸ் ஆவணங்களை வாங்கி வந்து அதை வைத்து, ராஜீவ்காந்தியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி ஜெயில்சிங்கிற்கு 40 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார்கள். ராஜீவ்காந்தி விலகிக் கொண்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அடுத்த ஒருமணி நேரத்தில் நரசிம்மராவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது என்று முடிவானது.
அதுமட்டுமில்லை... ராஜீவ் காந்தியை கொலை செய்ய இஸ்ரேல் மொசாத் படைக்கும், ஜெயில்சிங்கிற்கு கொடுக்க பேசியதுபோன்ற தொகையை தருவதாகவும் பேரம் பேசியிருக் கிறார்கள்!’’
இப்படி அடுக்கடுக்காக ஆரிஃப் முகமதுகான் சொல்லிக்கொண்டு போக... சந்திராசாமியின் வழக்கறிஞர் மாமாஜீ என்ற அசோக் அரோரா வேகமாகக் குறுக்கிட்டு, “இஸ்ரேல் மொசாத் படைக்கு பணம் எதுவும் தரவில்லை’’என்றார். தரவில்லை என்றாலும், தருவதாகப் பேரம் பேசி யிருந்தால் அதுவே குற்றம்தானே’என்று இடைமறித்துக் கூறினார் ஜெயின்.
உலக அளவில் பிரபலமான கூலிப்படையான இஸ்ரேல் மொசாத் படையிடம் ராஜீவ்காந்தி கொலைக்கு பேரம் பேசியதாக ஆரிஃப் முகமதுகான் சொன்னவுடன் அதிர்ச்சிக்குள்ளாகி ஓடினார்... சந்திராசாமியின் நண்பரான சுப்பிரமணியசாமி. இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்துப் பார்க்கும்போது சந்தேகத்திற்கே இடமில்லாமல், ராஜீவ் கொலைச் சதிகாரர்கள் சந்திராசாமியும், சுப்பிரமணியசாமியும்தான் என்பதைத் திட்டவட்டமாக நாம் தெரிந்துகொள்ள முடியும். சந்திராசாமியின் அந்தரங்க நண்பர் நரசிம்மராவை பிரதமராக்க சந்திராசாமியும், சுப்பிரமணியசாமியும் எவ்வளவு பெரிய அருந்தொண்டு புரிந்திருக் கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ராஜீவ் கொல்லப்பட்ட அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து, நரசிம்மராவ் பிரதமரானது இரு சாமிகளின் சதியால்தான்.
நரசிம்மராவ் ஆட்சி முழுமையான பலத்தோடு நடைபெறவில்லை. சோரம் போவதில் சாதனை படைத்த சிபு சோரன்... ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் தலைவர், ஜார்கண்ட் மாநிலம் உதயமானதும் அதன் முதன் முதலமைச்சராக இருந்தவர். அந்த சிபுசோரன்தான் அன்று கையூட்டு வாங்கிக்கொண்டு தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நல்ல விலைக்கு விற்றார். அரசியல் பேரத்தில் நல்ல அனுபவம் உள்ளவர் சிபு சோரன்.
அந்த ஜனநாயக காவலர்(?) சிபு சோரனின் ஆதரவை விலைகொடுத்து வாங்க தரகு வேலை பார்த்தவர் யார்?
சுப்பிரமணிய சாமிதான்.
சந்திராசாமி யின் ஆசியோடு அரியணை ஏறிய நரசிம்மராவ் ஆட்சி கவிழாமல் இருக்க, சிபுசோரனுக்கு பணம் வாங்கிக் கொடுத்து தரகு வேலை செய்தார் சுப்பிரமணியசாமி.
ராஜீவ்காந்தி கொலை நடக்கப் போவது எனக்குத் தெரியாது. நான் தூரத்தில் வரிசையில் நின்றிருந்தேன்’’என உண்மையைச் சொன்ன நளினி இன்னமும் உள்ளே இருக்கிறார். சதிகாரர்கள் வெளியில் திரிகிறார்கள்.
17 ஆண்டு களாக தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்தில் வேலூர் சிறையில் தன்னைச் சந்தித்த பிரியங்கா காந்தியிடம் “உங்கள் தந்தையார் கொலையில் நான் குற்றவாளி இல்லை’ என நளினி சொன்னார்.
தண்டனையிலிருந்து தப்பிக்க பொய் சொல்லலாம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக கடும் சிறை வாசத்தைச் சந்தித்துவரும் நளினி ஏன் பொய் சொல்ல வேண்டும்?
ஆனால் நளினியை பிரியங்கா காந்தி சந்தித்தது சுப்பிரமணியசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் “நான் உச்சநீதி மன்றம் செல்வேன்’என்று கொதித்தார்.
நளினி நிரபராதி என் பதை உலகம் தெரிந்துகொண் டால்... உண்மைக் குற்றவாளி யார் என்பதை உலகம் புரிந்து கொண்டால்... என்ன ஆவது? என்கிற கலக்கம்தான் சுப்பிர மணியசாமிக்கு.
அவ்வளவு கனம் அவரின் மடியில் இருக்கிறது.
வெள்ளையர் ஆட்சியால் உண்டான நிம்மதியற்ற போக்கைச்....
(சொல்கிறேன்)
_______________________
கோழியுமிங்கே.. சேவலுமிங்கே!
சத்யா மூவீஸ் தயாரித்த ரஜினி- ஸ்ரீதேவி நடித்த "ராணுவ வீரன்' படத்திற்காக நான் எழுதிய "வாருங்கள்' பாடலைச் சொன்னேன். இன்னொரு பாடலை இங்கே சொல்கிறேன். நாயகன் தன் தங்கையின் திருமணம் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்க... நாயகியோ... "நம்ம கல்யாணத்தப்பத்தி நினைப்பில்லையா' என பொய்க் கோபம் காட்டுகிறாள். இந்தச் சூழலுக்கு எம்.எஸ்.வி. இசையில் எஸ்.பி.பி- எஸ்.பி.ஷைலஜா பாடிய பாடல் இது...
பல்லவி-ஆண்:
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
சரணம்-1
பெண்: மான்விழி தங்கை மணமகளாக
மாப்பிள்ளை பார்த்தாயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தையில் மறந்தாயே!!
ஆண்: பூமழை வான் மேகம் பூமியை மறக்காது
காலங்கள் கனிந்தாலே...
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ
பல்லவி- பெண்:
கண்ணா... உன்னை தெரியும்
உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்பு
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு
சரணம்-2
பெண்: கோழியுமிங்கே சேவலுமிங்கே
குடும்பத்தை பாரிங்கே
ஜோடிகளின்றி பறவைகள் கூட
வாழ்வது தான் எங்கே?
ஆண்: பறவையின் நிலை வேறு
மனிதனின் கதை வேறு
மனிதர்களினம் போலே
பறவைகள் கடமையை அறியாது....
சரணம்-3
ஆண்: நதியினில் வெள்ளம் வருகிற போது
நாணலை நீ பாரு
நாணலை போலே வாழவும் தெரிந்தால்
வாழ்க்கையில் துயரேது...
பெண்: நாணலும் நானில்லை
நானொரு பெண்பிள்ளை
வாலிபம் போனாலே...
வாழ்க்கையில் வசந்தமும் வாராது...
(பாட்டுக் கச்சேரி தொடரும்)