ராஜீவ் கல்லறைமீது நரசிம்மராவ் நாற்காலி!

ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சம்பந்தம் உள்ளவரென்றால்... ராஜீவ் கொலையான அடுத்த ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் ஈழத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஒருவேளை போகிற வழியில் மாட்டிக்கொண்டி ருந்தால் சயனைட் குப்பி கடித்து செத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.

narashmarao

ராஜீவ்காந்தியை கொலை செய்யும் சதித்திட்டத்தை வகுத்துத் தந்த சிவராசனின் புகைப்படத்தை இலங்கை அரசுதான் இந்திய அரசின் மத்திய புலனாய்வுத் துறைக்குத் தந்திருக்கிறது. ஆனால்... சிவராசன் இலங்கை அரசில் பணியாற்றிய அரசு ஊழியர் என்கிற விபரத்தைச் சொல்லாமல் இந்திய அரசிடம் மறைத்து விட்டது.

Advertisment

மறைக்க வேண்டிய அவ சியம் என்ன வந்தது?

இலங்கை அரசில் பணி செய்தவன் சிவராசன் எனத் தெரிந்தால், ‘ராஜீவ்காந்தி கொலையாளி சிவராசன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவன் அல்ல’ என்கிற உண்மை வெளிப்பட்டுவிடுமே.

ராஜீவ் கொலை நடந்த விதம், அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரம் உள்ளிட்ட எல்லாமே ‘இந்தக் கொலையில் புலிகளுக்கு தொடர்பில்லை’ என்பதையே உணர்த்தியது. சிவராசனுக்கு ‘"டெலோ'’என்ற அமைப்புடன் தொடர்பு இருந்திருக்கிறது. தணுவையும், சிவராசனையும் இந்தக் கொலையில் ஈடு படுத்தியது இந்தியாவில் இருக்கும் சதிகாரர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் இருப்பவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக கூலிப்படையாக ஒருபோதும் செயல்பட விடுதலைப்புலிகள் இயக்கம் சம்மதித்திருக்காது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் கூலிப்படையல்ல... கொள்கைப்படை.

Advertisment

"தமிழீழ விடுதலை'’ என்கிற லட்சியத்திற்கு, ராஜீவ்காந்தியை கொலை செய்வது எவ்விதத் திலும் உதவாது, சொல்லப்போனால் அந்த லட்சியத்துக்கு இடையூறுதான் ஏற்படும் என்பதுதான் உண்மை. எனவேதான் நான் தீர்க்கமாகவும், திட்டவட்டமாகவும் “‘"ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலி களுக்கு அணு அளவும் தொடர்பு இல்லை... இல்லை... இல்லவே இல்லை' ’என்று சொல் கிறேன்.

இந்த கொலைச் சதியை நன்கு ஆராய்ந்தால்... இது உள்நாட்டு சதிதான். ராஜீவ்காந்தி மீண் டும் பிரதமரானால், சாமியார் வேஷத்தில் ஆயுத வியாபாரம் செய்து வந்த சந்திராசாமியின் வியாபாரம் பாதிப்பிற்கு ஆளாகும் என்பதால் ‘ராஜீவ் பிரதமராவதை தடுக்க வேண்டும்; தனது அந்தரங்க நண்பரான அரசியல் மர்மயோகி நரசிம்மராவைத் பிரதமராக்க வேண்டும்; அதன்மூலம் தன் ஆயுத வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும்’ என்பதுதான் கொலைக்கான நோக்கங்கள்.

nn

இரண்டு சதிகாரச் சாமிகளின் கூட்டணிதான் கொலைக்குக் காரணம். ஒரு கள்ள நாணயத்தின் இரண்டு பக்கங்கள் சந்திராசாமியும், சுப்பிரமணியசாமியும்.

எனக்கு சந்திராசாமியையும் தெரியாது; சுப்பிரமணியசாமியோடு பழக்கம் இல்லை. எனக்கு இவர்கள் மீது எந்தப் பகையும் இல்லை. சராசரியான.. சாமானியமான மனிதன் நான். என் தமிழகத்தில் மீது அளப்பரிய பற்றுகொண்டவன். அதைக் காட்டிலும், நியாயத்துக்காக எப்போதும் போராடும் குணம் கொண்டவன். ராஜீவ்காந்தி மீது எனக்கு வெறுப்பும் இருந்ததில்லை; விருப்பும் இருந்த தில்லை.

அவர் கொலை செய்யப்பட்டதை நானும் ‘துன்பியல்’ சம்பவம் என்றுதான் மனமாரக் கருதுகிறேன். அவரது கொலைக்கான கார ணங்களும், காரண கர்த்தாக்களும் உண்மை யாகவே கண்டறியப்பட வேண்டும். நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் தப் பித்துக்கொள்வதும் ஒரு நல்ல சமுதாயத்தில் நடக்கக்கூடாதவை. உண்மையை கண்டறி யாமல் விடுவது இந்திய தேசத்திற்கு இழுக்கு.

நரசிம்மராவ் பிரதமர் ஆனதும் சந்திராசாமியின் சாம்ராஜ்யம் பழையபடி கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.

நரசிம்மராவின் அமைச்சரவையிலிருந்த 28 அமைச்சர்களும் நாடாளுமன்றத்தி லுள்ள தங்களின் அலுவலகத்திற்கு போகும்போது சந்திராசாமியைத் தரி சித்துவிட்டு, சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றுவிட்டுத்தான் போயிருக் கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நரசிம்மராவின் அமைச்சரவை சகாக்களில் ஒருவரான ராஜேஷ் பைலட், சந்திரசாமியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டார்.

ஆனால் நரசிம்மராவ் அனுமதிக்கவில்லை. ராஜேஷ் பைலட்டின் வசமிருந்த துறையை பறித்துவிட்டு, வேறு ஒரு துறைக்கு அவரை மந்திரியாக்கினார்.

கொஞ்சகாலம் கழித்து... கார் விபத்து ஒன்றில் கோரமான முறையில் ராஜேஷ் பைலட் மரணமடைந்தார். இது இயற்கையான விபத்தா? அல்லது இதில்கூட சந்திராசாமியின் பங்கு இருக்கிறதா? என்பதுதான் என் சந்தேகம்.

சந்திராசாமிக்கு எந்தளவுக்கு நர சிம்மராவ் வேண்டியவராக இருந்திருக்கிறார் என்பதையும், நரசிம்மராவ் எந்தளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் விளங்கும். ராஜீவ்காந்தியின் கல்லறையின் மீது நரசிம்மராவிற்கு நாற்காலி போட்டுத் தருவது என்பதென்ன சாதாரண காரியமா?

1. ராஜீவ்காந்தி கொலை

2. நரசிம்மராவ் பிரதமரானார்

3. சந்திராசாமியின் சாம்ராஜ்யம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

இந்த மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்பானவை. இந்த அடிப்படையில்தான் ராஜீவ்காந்தி கொலை பற்றிய ஆய்வை மறு புலன்விசாரணை செய்யவேண்டும்.

ராஜீவ்காந்திக்கு எதிரான அரசியல் சூது... ராஜீவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்கிற்கு நாற்பதுகோடி ரூபாய் பேரம்... சுப்பிரமணியசாமியை அதிரவிட்ட முன்னாள் அமைச்சரின் வாக்கு மூலம்.... இப்படி பல அதிரடியான விஷயங்களைச்....

(சொல்கிறேன்)

________________

மே 21, 1991 நடந்தது என்ன?

ff

க்கீரனில் அண்ணன் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிவரும் "நாயகன்' தொடரின் 56-வது அத்தியாயத்தில் "ராஜீவ் கொலை மர்மங்கள்' என்ற தலைப்பிலான கட்டுரையில், ‘""மேடைக்குச் செல்லும் தலைவ ருடன் (ராஜீவ்காந்தி) தமிழகத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் செல்லவில்லை... குறிப்பாக, வாழப்பாடி ராமமூர்த்தி. தேசிய தலைவருடன் -மாநில தலைவர் இருந்திருக்க வேண்டாமா? அவர் ஏன் ராஜீவின் அருகில் நிற்கவில்லை? ராஜீவ் கொல்லப்பட்டவுடன் அவரின் உடலை தேடுவதை விட்டுவிட்டு தேர்தலுக்காக ராஜீவ் காந்தி கொண்டு வந்திருந்த பணத்தை மட்டும் தேடி, ஓடிப்போய் எடுத்துக்கொண்டாரே வாழப்பாடி ராமுமூர்த்தி'' என்று குறிப்பிடு கிறார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவன் என்கிற முறையில் சில விளக்கங்களைச் சொல்வது என் கடமை.

""தலைவர் வாழப்பாடி வேறு எங்கும் செல்லவில்லை. மேடையில் ஏறி "ராஜீவ்காந்தி வாழ்க' எனச் சொன்னார். அங்கேயேதான் இருந்தார். நிர்வாகிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். ராஜீவ்காந்தியை வரவேற்க இந்திராகாந்தி சிலை அருகே தலைவர் மூப்பனாருடன் நானும் நின்றுகொண் டிருந்தேன். ராஜீவ் காந்தி வருகிறார் என தெரிந்ததும் மேடை யை விட்டு தலைவர் வாழப்பாடி இறங்கி வருகிறார். சம்பவம் நடந்த பிறகு தலைவர் மூப்பனாரை கட்டிப்பிடித்து கதறினார் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

சம்பவம் நடந்த இடத்தில் ராஜீவ்காந்தியின் மிகச்சின்னதான ஒரு கைப்பையும் (டர்ன்ஸ்ரீட்) பேனாவும் மட்டுமே கிடைத்தன. இதைத்தவிர, வேறு எதுவும் இல்லை.

தேர்தல் காலங்களில் தேசியத் தலைவர்கள் யாரும் தேர்தல் செலவுக்கான பணத்தை தங்க ளுடன் எடுத்து வருவதில்லை. அந்தந்த மண்டலங்களுக்கான, கட்சியால் நியமிக்கப்பட்ட பார்வை யாளர்களிடம் (ஞக்ஷள்ங்ழ்ஸ்ங்ழ்ள்) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகைகளை கட்சித் தலைமை கொடுத்துவிடும். அவர்கள்தான் பணத்தைப் பகிர்ந்தளிப்பார்கள். தேர்தல் பணிகளில் இருக்கும் அனைவருக்குமே இது தெரியும். அந்த வகையில், அன்றைக்கு ராஜீவ்காந்தியுடன் எந்தப் பணப்பெட்டியும் வரவில்லை என்பது தான் உண்மை. மேலும் சென்னை மண்டலத்துக்குட்பட்ட பார்வையாள ரான (ஞக்ஷள்ங்ழ்ஸ்ங்ழ்ள்) சர்மா என்பவரிடம்தான் பணம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர் ரஞஞஉகஆசஉந ஐஞபஊக-ல் தங்கியிருந்தார். அதை பாதுகாத்து வைத்திருந்தவர் அவர் தான். தலைவர் மூப்பனாரின் உத்தர வின் பேரில், மறுநாள் சர்மாவை என் காரில் ஏர்போர்ட்டுக்கு அழைத் துச் சென்று அனுப்பி வைத்தேன். அந்தப் பணம்கூட டெல்லிக்கே திரும்பச் சென்றுவிட்டது.

பொதுவாக, தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, கட்சிக்காரர்களுக்கு கொடுத்துதான் பழக்கமே தவிர பணத்துக்கு ஆசைப்பட்டவர் கிடை யாது. அப்படித்தான் தனது அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டார் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

எனது இந்த விளக்கத்தைப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு,

கராத்தே தியாகராஜன்

_________________

எப்போதும் அன்பு வழி!

ra

சத்யா மூவீஸார் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் "ராணுவ வீரன்.' தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட... அப்பாவிகளை மனரீதியாக வீரர்களாக்க ராணுவ வீரன் பாடுவதாக அமைந்த பாடலை எழுதினேன். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் பாடியிருந்தார்.

பல்லவி:

வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்

வீரம் விளையாட வெற்றி நடைபோட

காலம் நமதென்று சொல்லுங்கள்

சொல்லுங்கள்....

அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத

ஆண்மை இனமென்று துள்ளுங்கள்

சரணம்-1:

ஒரு சேவலைப் போல கூவுகின்றேன்

உங்கள் வாழ்க்கை விடிவதற்கு

ஒரு சேவகன் போல மாறுகிறேன்

உங்கள் சேவை புரிவதற்கு

கூடுங்கள் கோடை இடி போல குரல்கள் கர்ஜிக்கும்

கொள்கை சிங்கங்கள் கூடுங்கள்

ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற

கேணி தவளைகள் ஓடுங்கள்

சரணம்-2:

இந்த ராணுவ வீரன் காவலிலே

எந்த வீடும் பிழைத்திருக்கும்

ஒரு தீவிரவாதி கோபத்திலே

பெரும் தீமை விளைந்திருக்கும்

எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும் மார்க்கம்

எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள்

எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல்

புதிய வரலாற்றை எழுதுங்கள்

(பாட்டுக் கச்சேரி தொடரும்)