234 தொகுதிகளுக்கும் தொகுதிக்கு மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளது தி.மு.க.வின் ஐபேக் டீம். ஆனால் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை யிலோ, அழகிரியின் சங்காத்தம் அதிகம் இருப்பதால், கூடுதல் கவனத்துடன் செலக்ஷன் லிஸ்ட்டை ரெடி பண்ணுமாறு ஐபேக்கிற்கு உத்தரவிட்டுள்ளதாம் தி.மு.க. தலைமை. அதனால் லிஸ்ட்டில் தங்கள் பெயரை முதல் இடத்திலேயே வைத்திருக்குமாறு ஐபேக் டீமை வட்டமிட்டுக்கொண்டி ருக்கிறார்கள் மதுரை மாவட்டத்திற்குள் வரும் 10 தொகுதிகளின் தி.மு.க. வி.ஐ.பி.கள். எதிர்க்கட்சியான தி.மு.க.வில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் என்றால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.விலோ ஒரு வருடத்திற்கு முன்புவரை திமுகவுக்கு வேலை பார்த்த சுனில் என்பவரின் தலைமையிலான ஐ.டி. விங்தான் செலக்ஷன் லிஸ்ட்டை ரெடிபண்ணி வருகிறது.

மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் என மொத்தம் 10 தொகுதிகள் மதுரை மாவட்டத்திற்குள் வருகின்றன.

madurai

Advertisment

மதுரை கிழக்கு

அ.தி.மு.க.: மாஜி எம்.பி.யான கோபால கிருஷ்ணனுக்கு 2021-ல் எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மட்டுமே நம்பியிருக்கிறார். அனேகமா இது பா.ஜ.கவுக்குத்தான் போகும் என ர.ர.க்களே நினைப்பதால் தாமரை சின்னத்தில் நிற்க தயாராக இருக்கிறார் சீனிவாசன்.

தி.மு.க.: கட்சியின் மா.செ. வும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான பி.மூர்த்தியே பெரும் கீர்த்தி யுடன் வலம் வருகிறார்.

Advertisment

மதுரை மேற்கு

அ.தி.மு.க.: சாலைமுத்துவின் மருமகன் வெற்றி வேல் உட்பட சிலர் காத்திருக்கிறார்கள்.

தி.மு.க.: நகர் மா.செ. கோ.தளபதி இப்ப இந்த தொகுதிய எனக்கும், நடக்கப் போகும் மாநகராட்சித் தேர்தலில் மேயராக எனது மகளுக்கும் சீட் தாங்க என ரிசர்வ் பண்ணும் முயற்சியில் இறங்கினார். ஆனால் கட்சித் தலைமையோ ஏதாவது ஒண்ணுதான் என கண்டிப்புடன் சொல்லிவிட்டதால், சரி மேற்கு இருக்கட்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் தளபதி. ஆனால் ஸ்டாலினின் தீவிர விசுவாசியும் இளைஞர்கள் படையை வைத்திருக்கும் ஜெயராமனுக்கும் சான்ஸ் உள்ளது. முக்குலத்தோரில் அகமுடையார் அதிகமுள்ள இத்தொகுதியில், கனிமொழி ஆதரவில் சீட் ரேஸில் விரைகிறார் திராவிடச் சிந்தனை கொண்ட இளைஞர் பாலமுருகன்.

தினகரனின் அ.ம.மு.க.வில் (இப்போதைக்கு) வெற்றிபாண்டியன்தான் சீனில் இருக்கிறார்.

மதுரை மத்தி

அ.தி.மு.க.: "இப்பவரைக்கும் இந்தக் கூட்டணியிலதான் இருக்கோம்' என சொல்லிவருகிறார் பிரேமலதா விஜயகாந்த். அதேநேரம் "சசிகலா பெண் என்பதால் அவரின் அரசியலை எதிர்பார்க் கிறேன்'’’எனச் சொல்லி பழனிச்சாமியையும் பன்னீரையும் ’மைக்’டைசன் ஜெயக்குமாரையும் டென்ஷனாக்கியுள்ளார். நமக்கு கிடைக்கப்போகும் 40-ல் மதுரை மத்தியில் கேப்டன் விஜய காந்தையோ, சின்ன கேப்டன் (தே.மு.தி.க.வினர் இப்படித்தாங்க போஸ்டர் அடிக்கிறாக) விஜயபிரபாகரனையோ களம் இறக்கும் கனவில் இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மதுரை கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஜாபரும் ரேஸில் முன்னிலையில் உள்ளார்.

தி.மு.க.: மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெட்ஒர்க்கில் ஸ்ட்ராங்காக இருக்கும் சிட்டிங் பி.டி.ஆர்.பி.தியாகராஜனே முன்னணியிலிம் முதலிடத்திலும் இருக்கிறார்.

madurai

மதுரை தெற்கு

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வான சரவணன் மட்டுமே ஒரே சாய்ஸாக இருந்தாலும் அவரின் அபார வளர்ச்சியும் அந்தர்பல்டி களும் ர.ரக்களிடையே கடுப்பைக் கிளப்பி பயமுறுத்துகிறது. கூட்டணி ஹெட்மாஸ்டரான பா.ஜ.க.வின் ஸ்ட்ராங் லிஸ்டில் இத்தொகுதி வருவ தாலும் சௌராஷ்டிரா சமூக மக்கள் மெஜாரிட்டியாக இருப்பதாலும் பா.ஜ.க.வின் மகளிரணி வி.ஐ.பி.யான மகாலட்சுமியின் கட்சிப் பணியும் சேவையும் மேலிடம் வரைக்கும் தெரிந்திருப்பதால், அவர்தான் என்கிறார் கள் தாமரைத் தொண்டர்கள். தனது விசுசாசியான கே.எஸ்.ராஜேந்திர னுக்கு ரெகமெண்ட் பண்ணும் ஐடியாவில் இருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்.

தி.மு.க.: கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் லிஸ்ட்டில் இத்தொகுதி இருப்பதாக காம்ரேடுகள் நம்பியிருப்பதால் வாசுகி களம் இறங்கலாம்.

மதுரை வடக்கு

அ.தி.மு.க.: தனது ஏரியாவான செல்லூர் இத்தொகுதிக்குள் வருவதால் "விஞ்ஞான அமைச்சர்' செல்லூர் ராஜு குறிவைத்துவிட்டார். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா கடுப்பாகி, எக்கேடும் கெட்டுப் போங்க நான் திருப்பரங்குன்றத்துக்குப் போறேன் எனச் சொல்லி இப்போதே அங்கே வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும் தனது மகன் சத்யனை விஞ்ஞானத் தோடு வீரியமாக விளையாட வைக்க தயார்படுத்தி வருகிறார்.

தி.மு.க.: ஆளும் கட்சியின் பவரையெல்லாம் சமாளித்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வானவர் டாக்டர் சரவணன். இருந்தாலும் தனது சரவணா மருத்துவமனையும் வீடும் இத்தொகுதிக்குள் வருவதாலும் சின்ன தொகுதி என்பதாலும் இத்தொகுதியை கேட்டுப் பார்ப்போம் என்ற நினைப்பில் இருக்கிறார் டாக்டர் சரவணன். அதே நேரம் மாவட்ட பொறுப்பாளரான பொன்.முத்துராமலிங்கத்தின் மகன் பொன்.சேதுவும் வெயிட்டிங்கில் இருக்கிறார்.

madurai

மேலூர்

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.பெரிய புள்ளான் தான் சமூக ரீதியாகவும் கரன்சி ரீதியாகவும் வெயிட்டாக தெரிவதால், கட்சி மேலிடத் திலும் இவரே பிரைட்டாகத் தெரிகிறார்.

தி.மு.க.: மாநகருக்குள் தரலேன்னா பரவாயில்லை, இந்த தொகுதியாவது வேண்டும் என்ற அப்ளி கேஷனைப் போட்டுள்ளது கூட்டணிப் பங்காளியான காங்கிரஸ். ஆனால் போனமுறை சொற்ப வாக்குவித்தியாசத்தில் தோற்ற தி.மு.க.வின் ரகுபதிக்கு நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.

திருப்பரங்குன்றம்

அ.தி.மு.க.: மதுரை வடக்கின் ராஜன் செல்லப்பா வேலையைத் தொடங்கிவிட்டாலும், அதெல்லாம் இப்போதைக் குத் தான் என்கிறார்கள் ர.ர.க்கள். அதனால் மறைந்த மாஜி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸின் மகனும் பன்னீரையே ரொம்ப காலமாக சுற்றிவரும் மாஜி எம்.எல்.ஏ.முத்துராமலிங்கமும் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

தி.மு.க.: டாக்டர் சரவணன் மதுரை வடக்கிற்குப் போனால் இங்கே மா.செ.மணிமாறன் முதலிடத்திலும் எஸ்.ஆர்.கோபி இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். மணிமாறன் அறிவாலயத்தையும் எஸ்.ஆர்.கோபி அன்பகத்தை யும் நம்பியிருக்கிறார்கள்.

திருமங்கலம்

அ.தி.மு.க.: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நிற்பதற்கு பல வேலைகளைப் பார்த்திருந்தார் அமைச்சர் உதயகுமார். ஆனால் ஜெயலலிதாவுக்கு கோவிலெல்லாம் கட்டிட்டு திருமங்கலத்தைவிட்டுப் போக அவருக்கு மனமில்லை. உதயகுமாரின் பண வெள்ளத்தை சமாளிக்க வேறு யாராலும் முடியாது’’ என ஓப்பனாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள் ர.ர.க்கள்

தி.மு.க.: திருப்பரங்குன்றம் இல்லையென்றால் திருமங்கலம் கன்ஃபார்ம் என பெரிதும் நம்புகிறார் மா.செ. மணிமாறன். இவருக்கு அடுத்த இடத்தில் மு.சி.சி.முருகன், லதா அதியமான், மேகலா ஆகியோர் உள்ளனர்.

கூட்டணியில் உள்ள பங்காளியான ம.தி.மு.க.வுக்கு இத்தொகுதி கிடைக்கும் வாய்ப்பு ரொம்பவே இருக் கிறது. அந்த வாய்ப்பு அமைந்தால் வைகோவை பொடாவில் தள்ளிய திருமங்கலம் பொதுக்கூட்டத்தை நடத்தி, தானும் பொடாவில் சென்ற பூமிநாதனுக்கு சீட்.

சோழவந்தான் (தனி)

அ.தி.மு.க.: சத்தமே இல்லாமல் சைலண்டாக வருமானம் பார்த்து வெயிட்டாக இருக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ.மாணிக்கம் மட்டும்தான் இங்கு ஒரே சாய்ஸ்.

தி.மு.க.: மாஜி அமைச்சர் தமிழரசிக்கு ஆசை இருந்தாலும் நீங்க மானாமதுரை யிலேயே மறுபடியும் நில்லுங்க என்கிற தாம் தலைமை. அதனால் வெங்கடேசன் என்பவர் எதிர்பார்ப்பில் உள்ளார்.

உசிலம்பட்டி

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ. நீதிபதிக்கு இந்த முறை சீட் கிடைக்காது, கிடைக்கக்கூடாது என்ற பேராவலில் இருக்கிறார்கள் ர.ர.க்கள். அதனால் முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், திருவாடானையிலிருந்து இங்கு ஜம்பாகலாம். என்ன ஒண்ணு சசிகலாவை கட்டாயம் சந்திப்பேன், அவரால் தான் இந்த வாழ்வு என்றெல்லாம் வாயைக் கொடுத்து, அ.தி.மு.க.வின் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறார்.

தி.மு.க.: கூட்டணிப் பங்காளியான ஃபார்வார்டு பிளாக் கதிரவனுக்கே ஜெயம்.

அமமுகவில் தினகரனின் தீவிர விசுவாசியான மகேந்திரன் தான் வெயிட் பார்ட்டி. ஆனால் பின்வரும் நாட்களில் அரசியல் சடுகுடு ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து தினகரனே களம் இறங்கினாலும் ஆச்சர்யமில்லை.