வழக்கமாக அரசியல்வாதிகள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கும். ஆனால் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அப்படியல்ல,… சொன்னால் சொன்னபடி செய்பவர். ஆனால் அவர் சொல்பவைதான் பல சமயங்களில் வில்லங்கமாக, மக்கள்விரோதமாக, ஜனநாயகத் தன்மையற்றதாக இருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/utharkhand1.jpg)
கொரோனா இரண்டாவது அலை இந்தியா வில் கோரத் தாண்டவமாடும் நிலையில், முதல்வர் கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். இந்த திடீர் அலைக்கு சற்றும் ஆயத்தமாக மத்திய- மாநில அரசுகள் இல்லாத நிலையில், படையெடுக்கும் கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவைக் குப் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத சூழ-ல், பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பலியாயினர். பார்த்தார்… யோகி, "உ.பி.யில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறான தகவலைப் பரப்பினால், அவரின் சொத்து பறிமுதல் செய்யப்படும். அவர்மீது தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்படும்' என அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்தார். அதைத்தான் அவர் செய்துகாட்டியிருக்கிறார்.
உ.பி.யைச் சேர்ந்த ஷஷாங்க் யாதவின் தாத்தா, உடல் நலக்குறைவு காரணமாக துர்காபூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆக்ஸிஜன் தேவையென ட்விட்டரில் எஸ்.ஓ.எஸ். எனப்படும் உயிர்காக்க உதவிகோரும் செய்தியொன்றை பதிவிட்டு, அதில் நடிகர் சோனுசூட்டை டேக் செய்திருந்தார். யாதவின் நண்பர் அங்கித் என்பவர் இதே ட்வீட்டை வயர் பத்திரிகையின் செய்தியாளர் அர்ஃபா கானும் ஷெர்வானி என்பவருக்கு அனுப்ப, அவர் மத்திய அமைச்சரும் அமேதியின் எம்.பி.யுமான ஸ்மிர்தி இரானியின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.
யாதவை, ஸ்மிர்தி இரானி சில முறை தொடர்புகொண்டுவிட்டு, அவர் போனையே எடுக்கவில்லை எனத் தெரிவித்ததோடு மாவட்ட நீதிபதிக்கும் அமேதி போலீஸுக்கும் யாதவைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைச் செய்யச் சொல்லியிருப்பதாக உடனடியாக ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையில் யாதவின் தாத்தா மாரடைப்பால் மரணமடைந்திருந்தார். ஆனால் அவரது மரணத்துக்குப் பின்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. அமைச்சரின் உத்தரவு காரணமாக யாதவைத் தொடர்புகொண்ட போலீஸ், அவரது தாத்தா மரணமடைந்ததைத் தெரிந்துகொண்ட தோடு, அவருக்கு கொரோனா இல்லையென்ப தையும் கண்டறிந்தது.
ராம்கஞ்ச் காவல் நிலையத்தில் யாதவின் மீது எஃப்.ஐ.ஆர். ஒன்று பதியப்பட்டுள்ளது. அதில், ட்விட் டரில் தவறான தகவலைப் பதிவிட்டதாகவும், இதன்காரணமாக அரசாங்கத்தின்மீது பலரும் குற் றம்சாட்டக் காரணமானதாகவும் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் யாதவ் பதிவிட்ட ட்வீட்டில், தனது தாத்தாவுக்கு கொரோனா என குறிப்பிடவே யில்லை. உடனடியாக தனது தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் தேவை என்பதுதான் அவர் ட்வீட். கொரோனாவுக்கு மட்டுமல்ல… வேறு பல சிகிச்சை களுக்கும் ஆக்ஸிஜன் தேவை. ஒருவேளை இது காவல்துறையினருக்குத் தெரியாமல் இருக்கலாம், தெரிந்தும் இருக்கலாம். ஆனால் சமூக ஊடகங் களில், பொதுவெளியில் அரசை குற்றம்சொல்ல மற்றவர்களுக்கு துணிச்சல் வரக்கூடாது என்பதற் காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இது ஒருபுறமென்றால், உ.பி. சிறையில் கைதுசெய்து அடைக்கப்பட்டுள்ள கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு கொரோனா சிகிச்சையளிக்க, உச்சநீதிமன்றக் கதவைத் தட்டுமளவுக்கு பத்திரிகையாளர்களை நடத்துகிறது உத்தரபிரதேச அரசு.
கடந்த வருடம் ஹாத்ராவில் தலித் பெண் ணொருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப் பட்டிருந்தார். இந்த விஷயம் உ.பி.யையே உலுக்கி யது. விஷயம் வேகமெடுக்காமல் தடுக்க, அந்தக் கிராமத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கா மல் தடைசெய்திருந்தது மாநில அரசு. அதை மீறி செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பனை உ.பி. அரசு கைதுசெய்து சிறையி லடைத்தது. ஒரு வருட மாகியும் அவர் விடு தலையான பாடில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/utharkhand2.jpg)
இந்நிலையில் சிறையில் சித்திக்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் வேறு உண்டு. மதுரா ஜெயில் மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அவரை விலங்கைப்போல் படுக்கையோடு சங்கிலியிட்டு பிணைத்து வைத்திருப்பதாகவும், உணவருந்தவும், டாய்லெட் போகவும்கூட மிகவும் சிரமப்படுவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார் அவரது மனைவி. கேரள பத்திரிகையாளர் சங்கம் ஒன்றும் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, உ.பி.யின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் கருத்தைக் கேட்டது. மதுரா மருத்துவமனையி லேயே நல்ல மருத்துவம் வழங்கப்படுவதாகவும், அவரை வெளியில் அனுப்பி சிகிச்சையளிக்க துஷார் வலியுறுத்த, டெல்லியின் எய்ம்ஸ், ராம்மனோகர் லோகியா மருத்துவமனை போன்ற அரசு மருத்துவ மனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது ரமணா தலைமையிலான அமர்வு.
மனித உரிமை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும்போலிருக்கிறது உத்தரப்பிரதேச அரசு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/utharkhand-t.jpg)