தீயணைப்புத் துறைக்கு தலைவராக இருப்பவர் மக்களிடம் பெயர் பெற்றுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திரபாபு. தமிழக தீயணைப்புத்துறையின் இணை இயக்குநராக இருப்பவர் பிரியா ரவிச்சந்திரன். பெண்கள் விழிப்புணர்விற்காகப் பேசுவதில் பிரபலமானவர்.

இந்த பிரியா, அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையை வைத்து ஆட்டம் போட்ட அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவர். "இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பொன்மகள் கல்யாண மண்டபம் என்கிற திருமண மண்டபத்தை பல கோடி ரூபாயில் கட்டியிருக்கிறார்' என தீயணைப்புத்துறையிலிருந்து புகார் எழுந்தது.

sa

சைலேந்திரபாபுவுக்கு ஒருமுறை தீயணைப்புத்துறை தலைவர் பதவியில் டிரான்ஸ்பர் வர, அதை வேலுமணி மூலம் சரிசெய்து கொடுத்தார் பிரியா.

Advertisment

இதுபற்றி பிரியா ரவிச்சந்திரனிடம் கேட்டோம். "நான் வேலுமணியின் சமூகத்தைச் சேர்ந்தவள். ஆனால் அவரது உறவினர் கிடையாது. ராசிபுரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்படும் திருமண மண்டபத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என மறுத்தார்.

புகார்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. தீயணைப்புத்துறை பற்றி யார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டாலும், முறையான பதில் கிடைப்பதில்லை. புயல் காலங்களில் விழும் மரங்களை அறுப்பதற்கான கருவிகள் வாங்கப்பட்டன. சாதாரணமாக மோட்டார் எந்திரத்தால் மரம் அறுக்கப் பயன்படும் ல்ர்ஜ்ங்ழ் ள்ஹஜ் எனப்படும் எந்திரங்கள் 300-க்கும் மேற்பட்டவை தீயணைப்புத் துறையால் வாங்கப்பட்டன. 4,000 ரூபாய் மதிப்புள்ள அவை, 8,000 ரூபாய் கொடுத்து வாங்கியும் ஒன்றுகூட தற்பொழுது செயல்பாட்டில் இல்லை.

பொலிரோ ஜீப்புகளின் விலை எட்டரை லட்ச ரூபாய். ஆனால் அவற்றை 17 லட்ச ரூபாய் விலைக்கு எட்டு வண்டிகளை தீயணைப்புத்துறை வாங்கியுள்ளது. உயரத்தில் எரியும் தீயை அணைக்க ஸ்கை லிப்ட் என்கிற கருவி உள்ளது. ஏணியைப்போல் உயர்ந்து தீயை அணைக்கும் 54 அடி வரை உயரும் கருவி முப்பது கோடி ரூபாய் என விலை கொடுத்துள்ளது தீயணைப்புத்துறை. அதேபோல் 104 அடி உயர்ந்து தீயை அணைக்கும் ஸ்கை லிப்ட் கருவியை 36 கோடி ரூபாய்க்கு தீயணைப்புத்துறை வாங்கியுள்ளது. இந்த இரண்டு பர்ச்சேஸ்களிலும் மொத்தம் நான்கு ஸ்கை லிப்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் எங்கும் ஊழல் நடைபெற்றிருக்கிறது.

Advertisment

தீயிலிருந்து தீயணைப்பு வீரர்களைக் காப்பாற்ற கவச உடைகள் 18,000 வாங்கப்பட்டுள்ளது. இதிலும் பெரும் கொள்ளை நடந்திருக்கிறது.

priya

பிரியா ரவிச்சந்திரன் நேரடியாக தீயணைப்புத்துறைக்கு வந்த அதிகாரி. இங்கு அவர் வைத்ததுதான் சட்டம். யாராவது அவரை எதிர்த்துப் பேசினால், அவர்களுக்குப் பணிநீக்கம் ஏற்படும் அளவிற்கு பழைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மெமோ கொடுப்பார். அவரால் பழிவாங்கப்பட்டவர்கள் ஏராளம். அவரால் பழிவாங்கப்பட்டு பல வருடங்கள் கோர்ட் படிகளில் ஏறிஇறங்கி பணி பெற்றவர்கள் ஏராளம். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ள தீயணைப்புத்துறையில்... பிரியாவின் பெயரையும் சைலேந்திரபாபுவின் பெயரையும் தாங்கிய கல்வெட்டுகள் ஒவ்வொரு தீயணைப்புத்துறை நிலையத்திலும் அமைக்கப்பட வேண்டும் என ஒரு சட்டத்தையே போட்டிருக்கிறார் என்கிறார்கள், தீயணைப்புத்துறை ஊழியர்கள்.

இதுபற்றி பிரியாவிடம் கேட்டபோது, "தீயணைப்புத்துறையில் வாங்கும் பொருட்களை ஒரு கமிட்டிதான் தீர்மானிக்கிறது. நான் அந்தக் கமிட்டியில் உறுப்பினர். நான் யாரையும் பழிவாங்கவில்லை. என் பெயர் இடம்பெறும் கல்வெட்டுகளை நான் வைக்கச் சொல்லவில்லை'' என்றார்.

நம்மிடம் பேசிய சைலேந்திரபாபு, "தன்மீது தனிப்பட்ட முறையில் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார். தீயணைப்புத்துறையில் வாங்கும் பொருட்களை ஈதஊஉ என்கிற அரசு அமைப்பு மூலமாகத்தான் வாங்குகிறோம். அதில் ஊழல் இல்லை. பிரியா, சிலர்மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும்தான் எடுத்தார்'' என்கிறார்.

தீ அணைக்கும் இடத்தில் தீ பரவிக்கொண்டிருக்கிறது. சைலேந்திரபாபு அதை அணைத்துவிடுவார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.