நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி அடுத்துள்ள மூங்கில்குடி கிராமத்தில், கள்ளச்சாராயத்தை ரோட்டி லேயே விற்பனை செய்வதால் குழந்தைகள் பள்ளிக்கூடம் போக முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனப் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி சாராய மூட்டைகளை அடித்து நொறுக்கியதோடு, கள்ளச்சாராய வியாபாரியையும் ஓடஓட விரட்டியடித்தனர். அதேபோல, இறை யான்குடியில் விற்கப்படும் கள்ளச்சாராயம், பாண்டி சரக்கு குறித்து வலிவலம் காவல் நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கையில்லை. இதனால் அப்பகுதி யைச் சேர்ந்த பெண்கள் ஒன்றாகத் திரண்டு வலிவலம் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். அப்போது பெண்களிடம் சிக்கிய காவல் உதவிஆய்வாளர், "நான் இங்குவந்து இரண்டு நாள்தான் ஆகிறது'' எனச் சொல்லி தப்பித்தார்.

ff

இந்நிலையில், வலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கண்ணாம்பூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கொட் டகை போட்டு கள்ளச்சாராயம் விற்று வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர், தனது மனைவி அனிதா தூங்கும்போது அவருக்கு தெரியாமல் தாலியை அறுத்துவந்து முத்துகிருஷ்ண னிடம் அடகு வைத்து சாராயம் குடித் திருக்கிறார். தூக்கம் கலைந்ததும் தாலி காணாமல் போனதைக் கண்டு ஆத்திர மடைந்த அனிதா, கணவரை உலுக்கி யெடுக்க... விவரத்தைக் கக்கியிருக்கிறார். ஆவேசமடைந்த அனிதா, தன் கண வரையும், மகனையும் அழைத்துக்கொண்டு முத்துகிருஷ்ணனைச் சந்தித்துத் தனது தாலியைக் கேட்டுள்ளார். தாலியைத் தர மறுத்ததோடு, அனிதாவையும், அவரது கணவரையும் இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார் முத்துகிருஷ்ணன். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அனிதாவையும், ராமசாமியையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதோடு, சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரோ வழக்கம்போலத் தப்ப விட்டுவிட்டு, சாராய வியாபாரி தப்பிவிட்டான் எனக்கூற, ஆத்தி ரத்தின் உச்சத்திற்கே சென்ற பெண்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டுவந்து கள்ளச்சாராயக்கடையை அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கினர்.

"எங்க பகுதியில் வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பு. நூறு நாள் வேலையை நம்பியே குடும்பம் நடக்குது. அந்தப் பணத்துலதான் பிள்ளைகுட்டிகளைப் படிக்க வைக்கிறோம். இந்த ஆம்பளைங்க, எங்களோட கொஞ்சூண்டு வருமானத் தையும் பிடுங்கிக் குடிச்சி அழிக்கிறாங்க. போலீஸ்ல பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதான் அடிச்சு நொறுக்கிட்டோம்'' என்று ஆத்திரப்படுகிறார்கள் அப்பகுதிப் பெண்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயிலாடு துறை மாவட்டம், சீர்காழி மதுவிலக்குப் பிரிவு போலீசார், சாராய வியாபாரிகளிடம் மாமூல் பெற்றது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இதைக் கவனித்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, சீர்காழி மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையத்தை இழுத்துப் பூட்டியதோடு, இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட சிலரை சஸ்பெண்ட் செய்தார். அதோடு ஒட்டுமொத்த போலீசாரையும் வெளி மாவட்டங் களுக்குத் தூக்கியடிக்கவும் செய்தார். அந்த சூடு தணிவதற்குள், நாகை மதுவிலக்குப் பிரிவு போலீ சார், ஒருநாள் கலெக்ஷனான 75,630 ரூபாயோடு கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினர். இதையடுத்து நாகை மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டோனிக்ஸ் மேரி, எஸ்.ஐ. சேகர், ஏட்டு சரோஜினி ஆகியோர் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாகை வேதாரண் யம் மதுவிலக்குப் பிரிவு போலீஸார், 17 பேர் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து விவரமறிந்த சிலரிடம் விசாரித்தோம். "நாகைக்கும், மயிலாடுதுறைக்கும் இடையே கடல் வழியாகவும் தரை வழியாகவும் சாராயம், போலி மதுபானக் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. மாவட்ட எல்லைப் பகுதியிலுள்ள செக்போஸ்ட் முதல், மதுவிலக்குப் பிரிவு வரை பணம் தண்ணீ ராகப் பாய்கிறது. அதனால் கடத்தலைத் தடுக்க யாரும் முன்வருவதில்லை. உயர் அதிகாரிகள் கெடுபிடி காட்டினால், தரைவழிக்குப் பதிலாக கடல் வழியாகக் கடத்துவதற்கு காவல்துறையினரே ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பார்கள். அப்போது, கடலோர காவல்படை போலீசாரை கவனித்துவிடு வார்கள். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விழிதியூர், காக்காமொழி, அன்னவாசல், நல்லாத்தோர், பூவம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குடிசைகளில் போலி மது உற்பத்தி நடக்கிறது''’என்கிறார்கள் புள்ளிவிவரத்தோடு.

Advertisment

ff

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சட்டவிரோதமாக விற்கப்படும் மது வகைகளை ஒழிக்க முடியாது, இது மிகப்பெரிய நெட்ஒர்க். மதுவிலக்குப் பிரிவு போலீசார் ரெய்டு போகும்போதே சாராய வியாபாரிகளுக்குத் தகவல் போய்விடும். கறுப்பு ஆடுகளை இனங்கண்டு இடமாற்றம் செய்யவேண்டும். அதோடு, யூனிஃபார்ம் போடாத எஸ்.பி.சி.ஐ.டி., கியூ பிராஞ்ச் உள்ளிட்ட போலீஸாரும் கள்ளச்சாராய வியாபாரிகளோடு நட்புறவை கொண்டிருப்பார்கள். மயிலாடுதுறை, திருவிடைமருதூர், குத்தாலம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாகக் கள்ள மது விற்பனை செய்யும் கடலங்குடியைச் சேர்ந்த மொத்த வியாபாரி மீது இதுவரை ஒரு வழக்குகூட போட முடியாதது ஏனென்பதை உயரதிகாரிகள் விசாரித்தால் போதும், மொத்த உண்மையும் வெளிவரும்''’என்கிறார்.

மயிலாடுதுறை, நாகை மாவட்ட எஸ்.பி.க்களிடம் கேட்ட போது, "நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்... விரை வில் முழுமையாக ஒழித்துவிடுவோம்'' ’என்கிறார்கள்.

-க.செல்வகுமார்