Skip to main content

குடும்பப் பகையால் போட்டுக்கொடுத்த டாக்டர்!

Published on 04/05/2018 | Edited on 05/05/2018
மர்மம் விலகாத ஜெ. மரணத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனிலும் நாளுக்கு நாள் மர்மங்கள் தொடர்கின்றன. ஆஜராகும் ஒவ்வொருவரும் தரும் வாக்குமூலங்களால் மேலும் குழப்பங்களே அதிகரிக்கின்றன. அதில் லேட்டஸ்ட், சசிகலா உறவினரும் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவருமான சிவக்குமார... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சசிகலா தலைமையுடன் திவாகரனின் அ.தி.க இணையும் விழா... தஞ்சையில் இரட்டை இலை கொடி தோரணங்கள் அணிவகுப்பு!

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

Divakaran's A.D.K. joining ceremony with Sasikala leadership.. Double leaf flag postures parade in Tanjore!

 

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் உடைப்பு ஏற்பட்டு சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் கட்சி தொடங்க பரபரப்பு ஏற்பட்டிருந்தது. சிறையிலிருந்து வந்த சசிகலாவுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்று ஒதுக்கப்பட்டார். ஆனால் தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

Divakaran's A.D.K. joining ceremony with Sasikala leadership.. Double leaf flag postures parade in Tanjore!

 

ADMK

 

இதற்கிடையில் ஓபிஎஸ் - இபிஎஸ் உடைத்துக் கொண்டு கட்சியை ஒருவரும் கட்சி அலுவலகத்தை ஒருவருமாக கைப்பற்றி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி சின்னத்தையும் முடக்குவார்கள் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான் சசிகலாவின் தம்பி திவாகரன் தான் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையில் அதிமுக வில் இணைப்பதாக அறிவித்தார். இன்று இணைப்பு விழா ஏற்பாடுகள் தஞ்சை தமிழரசி மண்டபத்தில் நடந்தது. 

 

Next Story

சசியுடன் கைகோர்க்கும் திவாகரன்... தஞ்சையில் இணைப்பு விழா!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

Divakaran joins hands with Sasi.. Connection ceremony in Thanjavur!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் சூடுபிடித்து, மீண்டும் பொதுக்குழு கூடுவதற்கான வழக்கில் நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. மறுபுறம் அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவை மீட்கப் போவதாக அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கும் சசிகலாவுடன் அவரது சகோதரர் திவாகரன் இணை இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஏற்கனவே அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை சசிகலாவின் சகோதரரான திவாகரன் நடத்தி வந்த நிலையில் தஞ்சையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் சசிகலா தலைமையில் தனது கட்சியை இணைக்க இருக்கிறார் திவாகரன். சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திவாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டு 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.