அவதார புருஷன், கடவுளின் அவதாரம், கடவுளின் நேரடி நியமனம்' என்று கூறி பணம் பறிப்பதும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் புதிதல்ல. அய்யா கோவில் கட்டி, அவரது பெயரைச் சொல்லி இளம் பெண் பக்தர்களிடம் பாலியல் அத்துமீறல்களை நடத்தும் சாமியார் ஜெகன் இதுவரை 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சூறையாடி யிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குமரி மாவட்டம், மணக்கரை அருகே ஐந்து புளிமூட்டு கிராமத்தில் அய்யா கோவில் கட்டி அங்கு பக்தர்களுக்கு கணக்கு (குறி) சொல்லிவரும் இளைஞரான ஜெகன் என்ற ராஜன், சிறுவயதில் இருந்தே ஊர் கோவிலில் பூஜைகள் செய்துவந்த நிலையில்... அங்குவரும் பெண் பக்தர்களிடம் சகஜமாக பழகிவருவாராம். நாளடைவில் பெண் பக்தர்களுக்கு மட்டும் கணக்குச் சொல்லி அவர்களின் குடும்பத்திலுள்ள கஷ்டங்களையும் அவர்களுக்குண்டான தோஷங்களையும் கூறும் சாமியாராக பிரபலமானார்.
இதனால் வாரம்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பெண் பக்தர்கள் கணக்கு கேட்பதற்காக வருவார்கள். அப்படி அங்கு வரும் பெண்களை பாலியல்ரீதியாக தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்தி வருவதாக ஜெகனின் முன்னாள் பக்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் அங்கு வரும் பெண்களிடம் ஜெகன் காட்டும் பாலியல் அக்கிரமங்களையும் அதில் பாதிக்கப்பட்ட பெண்களையும் குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியை சேர்ந்த பெண்கள்... ’ஊர் கோவிலில் பூசாரியாக ஜெகன் இருந்தபோது பெண்களை தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததால் கோவிலில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு அய்யா கோவிலை கட்டி வெளியூர்களில் இருந்து பக்தர்களை கணக்குச் சொல்வதாக கூறி வரவழைக்கிறார். ஆனால் இந்த ஊரிலிருந்து ஒருவர்கூட அந்த கோவிலுக்கு போகமாட்டார்கள்.
எல்லா அய்யாவழி கோவி லும் சாமிதோப்பு தலை மை (பதி) கோவி லுடன் பதிவு கொண் டவை. ஆனால் ஜெகன் கோவில் அங்கு பதிவு செய்யவில்லை. அய்யாவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி கோவிலிலும், பெண்கள் வீட்டுக்கும் போய் அசிங்கமாக நடந்துவருகிறார்.
அவரைப் பற்றி முமுமை யாக தெரியாத... கோவிலுக்கு வரும் பெண்களிடம், "என் உடம்பில் அய்யா வைகுண்டர் வந்து கால் நூற்றாண்டாகிவிட் டது. உங்களுக்குள்ள மன கஷ்டங்களை தீர்க்க எனக்கு நீங்கள் பணிவிடைகள் செய் தால், உங்கள் வீட்டுக்கே அய்யாவுடன் வருவேன்' என மூளைச்சலவை செய்து அவர் களை நம்ப வைத்துவிடுவார்.
திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் உனக்கு இரண்டாம் தாரம்தான் வாழ்க்கை. அந்த தோஷம் மாறவேண்டுமென்றால் முதல் தாரமாக என்னை நினைத்து ஒரு நாள் மட்டும் கணவருக்கு செய்யக்கூடிய பணிவிடையை எனக்கு செய்யவேண்டும் எனச் சொல்லி மசியவைத்தார். இதேபோல் இரணியல் கோணத்தை சேர்ந்த நர்ஸுக்கு குழந்தை பாக்கியம் தருவதாகச் சொல்லி அத்துமீறினார்.
ஏராளமான பெண்கள் இவரின் பாலியல் தொல்லை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயசுப் பெண்ணை யும் வேறு சில பெண்களையும் பாலியல் தொந்தரவு செய்தது... "அய்யாவிடம் கேட்டே செய்தேன்' என்று அவர் பேசிய ஆடியோவே உள்ளது''” என் கின்றனர்.
"ஜெகனின் பாலியல் தொந்தரவு குறித்து சுமார் 5 மாதங்களுக்கு முன் அந்தக் கோவிலுக்கு வந்த பெண்கள் சிலர், குளச்சல் ஏ.எஸ்.பி. மற்றும் மகளிர் காவல் நிலை யத்துக்கு புகார் அனுப்பியுள்ள னர். அந்தப் புகார் சம்பந்தமாக மகளிர் இன்ஸ்பெக்டரும் இங்கு வந்து விசாரித்தார். எங்களிடமும் விசாரித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெகன் பல அரசியல் கட்சியினரையும் அதிகாரிகளையும் கையில் வைத்திருப்பதால் அவர்மீது எந்த பாலியல் புகார் வந்தாலும் தப்பித்துவிடுகிறார்''’என்றார் இப்பகுதியைச் சேர்ந்த இந்திரா.
சம்பந்தப்பட்ட ஜெக னிடமே இதுகுறித்து நாம் கேட்டோம். "ஏற்கனவே என் மீது புகார் கொடுத்தாங்க. அதை விசாரித்த போலீஸ் பொய் புகார்னு முடிச்சாங்க. என் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் சிலர் ஊரில் இருக்கிறாங்க. ஊர் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் போகாததால் அந்த கோபத்தில் என்கிட்டேயும் இங்கு வரும் பக்தர்களிடமும் அடிதடியெல் லாம் செய்தாங்க. அவங்களுக்கு வெளியூர் பக்தர்கள் என் கோவிலுக்கு வர்றதைத் தடுக்கணும். நான் யார்கிட்டயும் காணிக்கை பணம் வசூலிக்கமாட்டேன். அவங்க கொண்டு வர்ற பொருட்களை வச்சி பூஜை, அன்னதானத்தை அவங்களே செய்யுறாங்க. இதெல்லாம் ஊர்க்காரங்களுக்குப் புடிக்கல. அதனால என் மீது தொடர்ந்து பொய்யான பாலியல் புகாரை கொடுத்திட்டே வர்றாங்க'' என்றார்.