யக்குனர் பாலாவின் "பரதேசி'’சினிமாவில் கங்காணிகளால் சொர்க்கலோக ஆசை காட்டப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி, மரணமே விடுதலை’என்று சாவுக்காக காத்திருக்கும் கொடுமைகளை கேரளாவில் தமிழ் மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர்.

தேனி போடிமெட்டு மலைப்பகுதியை ஒட்டியுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடுமன்சோலை உள்ளிட்டவை, முதல்வர் காமராஜர் காலத்தில் கன்னியாகுமரிக்குப் பதிலாக கேரளாவுக்கு ‘’வாக்கப்பட்ட’’ மலையக பூமி. ‘’ஜீரோ டிகிரி குளிர்.’’ வெள்ளையர் காலத்தில் இருந்தே தமிழர்கள் உடல் உழைப்பால் வளமான மண்.

ss

அட்டைப் பூச்சிகள், காட்டு மிருகங்களுக்கு இரையானதுபோக மீந்த தமிழர்களின் ரத்த வியர்வைத்துளிகள்’’தேயிலை எஸ்டேட்கள், மிளகு, ஏலக்காய் தோட்ட வடிவில் இப்போதும் பசுமையுடன் தழைத்திருக்கின்றன.

Advertisment

கேரள பூமி என்றாலும் பூர்வீகக்குடிகள் தமிழர்களே. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி பெறும் மழைநீரை அணைகட்டி சேமித்து மின்சாரம் தயாரித்து தேவைபோக மீறும் உபரி மின்சக்தியை அண்டை மாநிலங்களுக்கு விற்று பலனடைந்த கேரள முதல்வர்கள், தமிழர் உழைப்புத் திறனை மதித்து பட்டா கொடுத்தனர்.

அரசன் மட்டும் நல்லவனாய் இருந்தால் போதுமா?

மண்வளத்தைக் குறிவைக்கும் கார்ப்பரேட் முதலாளித்துவ சதிவலை வலுவாகப் பின்னப்பட்டது. உயரதி காரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கால்நக்கிகளாக. தேன்ஒழுக பேசிக் கடன்கொடுத்து, பணத்தை பலமடங்கு திருப்பிக் கொடுத்தாலும் நிலத்தைக் கிரையம் செய்து கொடுக்கச்சொல்லி மிரட்ட... கை. கால்களை உடைக்க, கொலை செய்ய, அரசு ஆவணங்களை மாற்ற கார்ப்ப ரேட்டுகளால் உருவாக்கப்பட்ட மலையாள ரவுடிக் கும்பல் கேங் காகவே செயல்படுகின்றனர்.

Advertisment

‘’கேங்குக்கு தோட்டத் தமிழர்கள் கப்பம் கட்டவேண்டும். கேட்டவுடன் பணம் தரவில்லையா? தோட்டங்களுக்கு செல்லும் கூலிகள் தடுக்கப்படுவர். வேலை ஆளின்றி மதிப்பு வாய்ந்த பயிர்கள் கருகும். நிலங்களை ‘’கேங்’’ ஆக்கிரமிக்கும். பட்டா மாற்றப்பட்டு நல்ல விலைக்கு கை மாற்றப்படும்.

தமிழ்க்குடி நிலத்தை மீட்க ’போலீஸ், வருவாய்த்துறை போனால் மலையாள அதிகாரிகளின் ஆதிக்கம் நியாயமான உரிமைகளை வழங்குவதில்லை. பல தமிழ்க் குடும்பங்கள் ஊரைக் காலிசெய்து தேனியில் கூலிகளாக, நடைபாதை வாசிகளாக...

‘’கேங்கால் நிலம் பறிக்கப் பட்டவர்கள் 26 பேர் கேரள உயர் நீதிமன்றம், எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் வரை போனதால் கமிஷன் தாக்கல்படி உயர்நீதிமன்றம் எண்: ரட(ஈ) சர்.26003/01 2013 (ஆ) உற் 29-10-2013-ன்படி, "பறிக்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பை அப்புறப் படுத்தி நிலச் சொந்தக்காரர்களிடமே ஒப்படைக்க வேண்டும்'’என்று வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டும் இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஏசையா என்பவரின் நிலம் அவருக்கே தெரியாமல் ஆட்டையானது. துண்டல்காந்தி கிராமத்தை சேர்ந்த திராவிட மணி சொல்கிறார், ""மாரிமுத்துவின் மாற்றுத் திறனாளி மகன் எம்.ஏ., பி.எட். முடித்து வேலைக்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக் காததால் வேலைக்குப் போக முடியாமல் அகதிபோல் உள்ளார்.’’

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த முத்துப்பாண்டியின் கை, கால்கள் உடைக்கப்பட்டன. அவர் சகோதரி ரத்தினத்தின் நிலங்களும் பறிக்கப்பட்டது'' என்றார்.

மூணார் நகரின் சமூக ஆர்வலர் முல்லை முருகன் நம்மிடம், ’""பட்டம் தாணுப்பிள்ளை, இ.கே.நாயனார், அச்சுதானந்தன், இன்று பினராய் விஜயன் வரை எங்கள் மக்களுக்கு நிறைய நலத் திட்டங்களைச் செய்றாங்க. அச்சுதானந்தன், தேவி குளம் குட்டியார்வேலி பகுதியில் இரண்டாயிரம் பேருக்கு இடமும் வீடும் கொடுத்தார். முதல்வர் பினராயி விஜயனும் ஆயிரம் தமிழருக்கு மேல் உதவியிருக்கார். அரசு நல்லது செய்ய நினைத்தாலும் ‘’எங்களுக்கு தமிழ் நாட்லயும் இடம் இருக்குனு தவறான தகவலை’கேங்’’ஆட்கள் அரசுக்கு சொல்லி தடுக்குறாங்க.

மூனாறு நிலச்சரிவுல 74 தமிழ் மக்கள் சமாதியானார்கள். வி.சி.க. எம்.பி. தொல். திருமாவளவன் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னார். நக்கீரன் ஆசிரியர் தன் இரங்கலைத் தெரிவித்ததோடு, துரித நிவாரணத்துக்காக நக்கீரன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்'' என்றார்.

இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசனை தொடர்பு கொண்டு நம்மை அறிமுகம் செய்து இது குறித்துப் பேச முற்பட்டபோது, ""இன்பத்தமிழ் கேட்டவுடன் இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து முயற்சித்தும் அழைப்பை அவர் ஏற்கவில்லை. மலையாளத்தில் பேசினால்தான் போன் கால்களை அட்டெண்ட் செய்வது வழக்கமாம். "தமிழோசை' கேட்கும் போனை எடுக்கமாட்டாராம்.’’

பாஸிசக் கொடுமையுடன் நிர்க்கதியாய் நாடோடி வாழ்க்கையில் தமிழர்கள். தமிழக அரசுக்கு அவர்களின் அழுகுரல்கள் எட்ட வேண்டும். எட்டுமா?

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இலங்கைத்தமிழர் நினைவு நெஞ்சில் நெருடுகிறது.