கொரோனா, பிணங்களின் எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்தி யிருக்கிறது. ஒரே நாளில் 500 பேர் இறந்து, இந்தியாவிலேயே கொரோனா வால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத சோக மான சாத னையைப் படைத்திருக்கிறது டெல்லி. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மும்பை, 3-ஆவது இடத்தில் சென்னை இருக்கிறது. "சென்னையில் கொரோனா வால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை வெறும் 2.12 சதவிகிதம் பேர்தான்' என தமிழக அரசு சொல்கிறது. கொரோனாவால் இந்தியாவில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 2.25 சதவிகிதம். தேசிய சரா சரியைவிட குறைவாக சென்னையில் கொரோனா இறப்புகள் நடக்கிறது. கடந்த 27ஆம் தேதி 2032 நோயாளிகள் சென் னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 22 பேர்தான் இறந்துபோனார்கள். இதில் திருவொற்றியூரில் 2.25 சதவிகிதம் பேர் இறக்கிறார்கள். சோளிங்கநல்லுரில் 0.62 சதவிகிதம் பேர் இறக்கிறார்கள் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார். ஆனால் "சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 50 பேர் இறக்கிறார்கள்' என அதிர்ச்சித் தகவலை சொல்கிறார்கள் அங்கிருக்கக்கூடிய மருத்துவர்கள்.

c

ஒட்டுமொத்த சென்னையின் இறப்பு சதவிகிதம் என மாநகராட்சி சொல்வதைவிட இரு மடங்காக இருக்கிறது.

அரசு பொது மருத்துவமனை மட்டுமல்ல… வடசென்னையில் அமைந்துள்ள ஸ்டான்லி மருத்துவமனை, மத்திய சென்னையில் அமைந்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை... இதுதவிர சென்னை நகரில் அமைந்துள்ள புறநகர் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளி கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.

Advertisment

மேலும் வீடுகளில் இறப்பவர்களும் இருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் நாளொன்றுக்கு டில்லியை விட அதிகமான பேர் சென்னையில் இறந்துபோகிறார்கள் என அதிர்ச்சித் தகவல்களைச் சொல்கிறார்கள் சென்னையில் உள்ள மருத்துவர்கள்,

டில்லியில் 350 பேர்தான் கொரோனா வால் இறக்கிறார்கள் எனச் சொல்வதே தவ றான புள்ளிவிபரம். டில்லியிலுள்ள மயானங் களில் அடுக்கப்பட்டிருக்கும் பிணங்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் அரசு சொல்லக்கூடிய புள்ளிவிவரம் தவறானது. அது நாளுக்கு நாள் மாறுகிறது.

27-ஆம் தேதி இறப்பு 21 பேர் என இருந்த புள்ளி விவரம் 30-ஆம் தேதி சென்னை மாநகராட்சி வெளி யிட்ட அறிவிப்பில் 113 பேராக உயர்ந்திருக்கிறது. இதில் உண்மை என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் சென்னை நகரில் இருக்கக்கூடிய மயானங்களைச் சுற்றிவந்தோம்.

Advertisment

c

ஓட்டேரி சுடுகாட்டில் நாம் பார்த்த காட்சி, நம்மை அதிரவைத்தது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரது பிணம் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. அவரது காலில் ஒரு தீக்காயம் இருந்தது. அந்தக் காயத்தை ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அந்தப் பிணத்தை மின்மயானத்தில் எரிக்க அங்கிருந்த ஊழியர் கள் தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்கள் எந்தவித மான கொரோனா தடுப்பு உடைகளையும் அணிந் திருக்கவில்லை. காலில் செருப்புக்கூட போடாமல் கொரோனா பிணத்தை அவர்கள் கையாண்ட விதம்… அதிர்ச்சியைத் தந்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலையைச் செய்யும் எஸ்தர், "நாள் ஒன்றுக்கு 15-க்கும் மேல் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் பிணங்கள் வருகின்றன. இந்தப் பிணங்களை எரித்த பிறகுதான் மற்ற பிணங்களை எரிக்கிறோம்'' என்றார்.

அவரிடம் "கொரோனா பிணங்களை எரிப்பதற்கு என பாதுகாப்பு கவச உடைகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?'' என கேட்டோம்.

"அப்படி எதுவும் தரப்படவில்லை'' என்றார்.

"நாள் ஒன்றுக்கு எத்தனை கொரோனா பிணங்கள் வருகிறது என கணக்கு எதாவது உள்ளதா?'' என கேட்டோம்.

"அப்படி எந்தக் கணக்கும் இல்லை'' என்ற அவர் "அதைப் பற்றியெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள்'' என்றார்.

அந்த சுடுகாடு முழுவதும் மக்கள் நிறைந்திருந் தனர். அந்தக் காட்சிகளை புகைப்படம் எடுக்க முயன்றபோது அங்கிருந்தவர்கள் நம்மைத் தடுத்தனர். அதேபோல் சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்குச் சென்றோம். அங்கும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 15 கொரோனா பாதிப்பால் இறந்த பிணங்கள் மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 30 பிணங்கள் என வந்துகொண் டிருக்கிறது. அங்கு எரியூட்டும் வசதி இல்லாததால் அந்தப் பிணங்கள் காசிமேடு பகுதிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது என்கிறார்கள். அண்ணாநகர் வேலங்காடு சுடுகாட்டில் கொரோனா பிணங்களை எரிப்பதற்கு என புதிய சுடுகாடு ஒன்று கட்டுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை பல்லாவரம் மலங்காலந்தாபுரம் சுடுகாட்டில் பிணங்கள் தொடர்ந்து எரிந்துகொண்டேயிருக்கின்றன.

அதற்கு கணக்கிருக்கிறதா என்று கேட்டால், கணக்கு இல்லையென்றே பதில் வந்தது.

சிட்லபாக்கம், தாம்பரம், மயிலாப்பூர், கண்ணம்மாபேட்டை என சென்னையிலுள்ள 688 சுடுகாடுகளில் பிணம் எரிவது நிற்கவேயில்லை. இது தவிர சென்னை மாநகராட்சி, இறந்தவர்கள் யார் என எண்கள் போட்டு முகவரியை வெளியிடுகிறது. அவை அனைத்திலும் நிமோனியா, மூச்சு விடுவதில் தோல்வியடைந்ததால் மரணம் என்பது தவறாமல் குறிப்பிடப்படுகிறது. பாடலில் மானே தேனே போடுவதுபோல அந்த இறப்புச் சான்றிதழின் மூலையில் கொரோனா என மாநகராட்சி குறிப்பிடுகிறது. இதுதான் தமிழக அரசு, கொரோனாவுக்கு கொடுக்கும் மரியாதை என்கிறார்கள் இந்த பட்டியல்களை நமக்கு அனுப்பிவைத்த சமூக ஆர்வலர்கள்.

m

அரசு மருத்துவமனைகளில் இறந்துபோகும் நோயாளிகளில் பலரது குடும்பமும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாது. இறந்துபோனவர்களின் பிணங்களை மாநகராட்சி அதிகாரிகள் கையாள்கிறார்கள். அவர்கள் அந்தப் பிணங்களை எங்கே எரிக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்த விவரமும் குடும்பத்தினருக்குத் தெரிவதில்லை.

தாம்பரத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற இளைஞர் கொரோனா நோயால் இறந்துபோனார். அவரது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொரோனா தாக்கியுள்ளது. "ஹரீஷுக்கு சிட்லப்பாக்கம் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகளைச் செய்ததாக நகராட்சி அதிகாரிகள் அவரது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும் வேறு எதுவும் தெரியாது'' என கண்ணீர் வடிக்கிறார்கள் ஹரீஷின் குடும்பத்தினர்,

இறந்தவர்களின் நிலை இது என்றால் கொரோனா வுடன் போராடிக்கொண்டிருப் பவர்களின் உயிரைக் காப்பாற்ற ரெம்டிசிவர் என்கிற மருந்து தேவை. அந்த மருந்தை மத்திய அரசுதான் மாநில அரசு களுக்குத் தரவேண்டும். கொரோனா தடுப்பூசி ஒன்றரைக் கோடி டோஸ் வேண்டும் என மாநில அரசு வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு உரிய பதிலைத் தர வில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.

அதேபோல ரெம்டிசிவர் மருந்து விவகாரத்திலும் மத்திய அரசு கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு மருத்துவமனைகளில் இருக் கும் மருத்துவத் துறையினரால் பதுக்கப்பட்டு கள்ள மார்க் கெட்டுக்கு சென்றுகொண்டிருக் கிறது, "அரசு மருத்துவமனை யில் 1500 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்து கள்ளமார்க்கெட் டில் 40 ஆயிரம் ரூபாய்வரை விலைபோகிறது. இப்படி கள்ளமார்க்கெட்டில் அதிக விலைக்கு மருந்தை விற்றதாக இம்ரான்கான் உட்பட 7 மருத்துவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மரணத்திலும் உயிர் காக்கும் போராட்டத்திலும் ஏகப்பட்ட பொய்கள் பித்தலாட்டங்கள் தான் கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது'' என வருத்தப்படுகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத்.

-அரவிந்த், அருண்பாண்டியன், சேகுவேரா