.தி.மு.க.வும் இரட்டை இலையும் முதல் வெற்றிபெற்ற அரசியல் திருப்பத்திற்கு காரணமானது திண்டுக்கல். இந்த மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய ஏழு தொகுதிகள் இருக்கின்றன. இதில் ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய நான்கு தொகுதிகள் தி.மு.க. வசமும் மீதமுள்ள மூன்று தொகுதிகள் ஆளும் கட்சியான அ.தி.மு.க. வசமும் உள்ளன.

புத்தாண்டு பிறந்துவிட்டதால் அனைத்துக்கட்சி ஏரியாக்களிலும் எம்.எல்.ஏ. சீட்டுக்காக முட்டி மோதுபவர்களின் வேகமும் அதிகரித்துள்ளது.

dd

திண்டுக்கல்

அ.தி.மு.க. : இப்போதும் கோட்டையாக இருக்கும் இத்தொகுதியின் எம்.பி.யாக நான்கு முறை ஜெயித்த திண்டுக்கல் சீனிவாசன், இப்போது எடப்பாடி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருக்கிறார். தொகுதியின் அனைத்து ஏரியாக்களிலும் 500 கோடி அளவில் நலத்திட்டப் பணிகளை செய்து மக்களை தன் பக்கம் வைத்துள்ளார் சீனி. தனது மகனும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான ராஜ்மோகனையும் கட்சியின் மேற்கு ஒ.செ.வாக இருக்கும் தனது தம்பி மகன் ராஜசேகரையும் தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் அனுப்பி, ர.ர.க்களை தனது அன்புப் பிடிக்குள் வைத்திருக்கும் சீனியின் ஒரே மைனஸ் பாயிண்ட் என்னன்னா, மைக்கைப் பார்த்தால் போதும் ஏதாவது எசகுபிசகாக பேசிவிடுவார். "இயேசுவை கொன்ற கோட்சே' என்பது லேட்டஸ்ட் ஹைலைட். "அண்ணனுக்கு இதுவும் ப்ளஸ் பாயிண்டே' என்கிறார்கள் ர.ர.க்கள். இத்தொகுதியைப் பொறுத்தவரை சீனிக்கே சீட் என்பது நிச்சயமான ஒன்று.

தி.மு.க. : "இத்தொகுதியில் சூரியன் எப்ப உதித்தது' என உ.பி.க்களுக்கே மறந்து போய்விட் டது. இருந்தாலும் "விருப்ப மனு போட்டு பணமும் கட்டி வைப்போம்' என்ற ரேஞ்சில் நகராட்சி சேர்மன்களாக இருந்த பஷீர், நடராஜன், சந்திரசேகர், ஒ.செ. நெடுஞ்செழியன், ந.செ. ராஜப்பா ஆகியோர் இருக்கிறார்கள். "தி.மு.க. கூட்டணியில் சி.பி.எம்.முக்கு தொகுதி நிச்சயம் என்பதால் மாஜி எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் பாண்டி ஆகிய இருவரில் ஒருவ ருக்கு சீட் கன்ஃபார்ம்' என்கிறார்கள் காம்ரேடுகள். மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் இத்தொகுதியை மட்டும்தான் கணக்கில் வைத்திருக்கிறது அ.ம.மு.க. அதனால் கிழக்கு மா.செ. ராமுத்தேவர்தான் ஒரே தேர்வாக இருக்கிறார்.

ஆத்தூர்

அ.தி.மு.க. : மேற்கு ஒ.செ.மணலூர் சின்னசாமி, வடக்கு ஒ.செ. பசும்பொன், கிழக்கு மா.து.செ. விஜய பாலமுருகன், சின்னாளபட்டி டாக்டர் பாபு ஆகியோர் சீட் கேட்கும் முனைப் பில் இருக்கிறார்கள். ஆனாலும் இங்கே நத்தம் விஸ்வநாதனே மண்ணைக் கவ்வியதால், "நம்ம கூட்டணியான பா.ஜ..க.வுக்கோ பா.ம.க.வுக்கோ தாராளமா கொடுக்கலாம்ணே' என எடப்பாடி யிடம் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். . அதனால் பா.ம.க.வின் திலகபாமா, ப்ரியங்கா நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் நிற்கலாம்.

தி.மு.க. : கட்சியின் துணைப் பொதுச்செய லாளராக இருக்கும் ஐ.பெரியசாமி, தொடர்ச்சியாக ஐந்துமுறை எம்.எல்.ஏ.வாகி, வருகிற தேர்தலில் ஆறாவது முறையாக ஜெயித்து டபுள் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார். தொகுதியில் சாதி, மதம், கட்சி பார்க்காமல் அனைத்து தரப்பினருக்கும் சர்வரோக நிவாரணியாக இருக்கும் ரோடு, பாலம், மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, சமுதாயக் கூடம் என தொகுதி மக்களுக்கும் எந்தக் குறையும் வைக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஐ.பி.யே தென்படுவதால் உ.பி.க்களிடையே இப்போது உற்சாகம் கரைபுரள்கிறது.

வேடசந்தூர்

அ.தி.மு.க. :முன்னாள் துணைசபாநாயகர் வி.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் பரமசிவம் தான் இப்போதையஎம்.எல்.ஏ. அமைச்சர்களிடமும், எடப்பாடியிடமும் விஸ்வாசமாக இருக்கும் பரமசிவம், ர.ர.க்களையும், தொகுதி மக்களையும் அனுசரித்து செல்வதால் மீண்டும் சீட் உறுதி என்கின்றனர் கட்சியினர். மாஜி எம்.எல்.ஏ.தென்னம்பட்டி பழனிச்சாமி, வேடசந்தூர் ஒ.செ.சுப்பிரமணி ஆகியோரும் சீட் ரேஸில் உள்ளனர்.

தி.மு.க. : தொகுதி மக்களிடம் இருக்கும் நல்ல மதிப்பும் மரியாதையும் மாஜி துணைசபா காந்திராஜனுக்கு ப்ளஸ்சாக இருக்கிறது. கடந்த முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போயிட்டாரே என்ற கருணைப் பார்வை கட்சி மேலிடத்திலும் இருப்பதால், காந்திராஜன் நம்பிக்கையில் உள்ளார். அதே நேரம் தெற்கு ஒ.செ.சாமிநாதன், வடக்கு ஒ.செ.கவிதா பார்த்திபன் ஆகியோரும் காத்திருக்கிறார்கள்.

Advertisment

dd

நிலக்கோட்டை

Advertisment

அ.தி.மு.க. : இரட்டை இலை அபிமானிகள் நிறைந்திருப்பதால் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவானார் தேன்மொழி. ஆனால் இவரது கணவர் சேகர் தான் எம்.எல்.ஏ.மாதிரி ஆக்டிங்கில் இருப்பதால் தொகுதி மக்களைப் பற்றியோ திட்டங்களைப் பற்றியோ தேன்மொழி பெரிதாக அலட்டிக் கொள்ளாததால் இந்தமுறை கரையேறு வது கஷ்டம்தான் என்கிறார்கள் ர.ர.க்கள். ஆனால் நத்தம் விஸ்வநாதன் இருக்க நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். "சீட்டுக்கு நத்தம் என்றாலும் ஓட்டுக்கு நாங்க தான கேரண்டி' என்ற முண்டா தட்டும் ர.ர.க்கள் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் பொன்னுதுரையை தயார்படுத்தி வருகிறார்கள். நாங்கமட்டும் சும்மா இருப்பமாக்கும் என்கிறார்கள் மாஜி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகனும் சுப்புரத்தினமும்.

தி.மு.க. : மா.து.செ. நாகராஜன், வக்கீல் அன்பழகன், இடைத்தேர்தலில் தோற்ற அன்பழகன் ஆகியோருக்கு ஆசை இருந்தாலும் நிலக்கோட்டை ஒன்றிய உ.பி.க்களிடையே தீராமல் இருக்கும் உட்கட்சிப் பூசல் ரொம்பவே பயமுறுத்துகிறது. நிலக்கோட்டை என்றால் பொன்னம்மா, பொன்னம்மா என்றால் நிலக்கோட்டை எனும் அளவுக்கு காங்கிரசின் எம்.எல்.ஏ.வாக ஆறுமுறை வென்ற பொன்னம்மாவின் பேத்தியும் மகிளா காங்கிரசின் மாஜி தலைவியுமான ஜான்சிராணிக்கு கே.எஸ்.அழகிரியின் ஆசி இருப்பதால், கூட்டணி தர்மப்படி இத்தொகுதி தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் கதர்ச்சட்டையினர்.

ஒட்டன்சத்திரம்

அ.தி.மு.க. : கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மெஜாரிட்டியாக இத்தொகுதியில் என்னைத் தவிர வேறு யாருக்கும் சீட் கேட்கும் தகுதி இல்லை என ஓப்பனாகவே பேச ஆரம்பித்து விட்டார் அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவரும் கிழக்கு ஒ.செ.வுமான நடராஜன். ஆனால் அதே ஊராட்சியின் தலைவியாக இருந்த ஈஸ்வரியின் திருக்காரியங்களால் கடுப்பாக இருக்கும் மேற்கு ஒ.செ.கிட்டுசாமி மற்றும் உதயம் ராமசாமி, பாலசுப்பிரமணி போன்றோர் நடராஜனின் ஆசைக்கு ஆப்பு வைக்க ரெடியாகிவிட்டார்கள். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வின் மேற்கு மா.செ. பாலசுப்பிரமணியனோ கேப்டனின் துணைவியாரை யும் புதல்வர் விஜயபிரபாகரனையும் நம்பியிருக்கிறார்.

தி.மு.க. : ஆத்தூரில் ஐ.பெரியசாமி எப்படியோ, அதுபோலவே இங்கேயும் ஐந்தாவது முறையாக வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் சட்டமன்ற தி.மு.க. கொறடாவான சக்கரபாணி. இவரது வெற்றிக்கொடி தொடர்ந்து பறப்பதற்கு முக்கிய காரணமே தொகுதி முழுக்க தாகம் தீர்த்த காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தான். தொகுதிக்குள் இருந்தால், இவரை எந்த நேரத் திலும் சந்திக்கும் எளிமைக்குச் சொந்தக்காரர் என்ப தால், ஒட்டுமொத்த உ.பி.க்களின் ஆதரவும் து.பொ.செ. ஐ.பி.யின் ஆசியும் சக்கரபாணிக்கே இருக்கிறது.

பழனி

அ.தி.மு.க. : ஆன்மிக ஸ்தல மான இத்தொகுதிக்குள் சுற்றுலாத் தலமான கொடைக்கானலும் வருகிறது. மாஜி எம்.எல்.ஏ வேணுகோபால், மாஜி எம்.பி.குமாரசாமி, ந.செ.முருகானந் தம், தொகுதி செயலாளர் மகுடீஸ் வரன் ஆகியோர் முருகபெரு மானின் அருளுடன், முதல்வர் பழனிச்சாமியின் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இவர்களின் நம்பிக்கைக்கு நத்தம் விச்சுவும் சப்போர்ட்டாக உள்ளார்.

"முதல்வர் வேட்பாளரையே நாங்கதான் முடிவு பண்ணு வோம்' என்ற முடிவில் இருக்கும்போது, தொகுதி வேட்பாளரா நாங்க நின்னா என்னா என்ற முடிவுக்கே வந்துவிட்ட கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வோ, பூத்கமிட்டியை தயார் நிலையில் வைத்திருக்கிறது. இங்கிருக்கும் இந்து அமைப்புகள் சப்போர்ட் இருப்பதால், பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் கனகராஜ், கனகச்சிதமாக காய் நகர்த்தி வருவதைப் பார்த்து அ.தி.மு.க. சீனியர்களே ஜெர்க்காகி ஜென் மனநிலைக்குப் போய்விட்டனர்.

தி.மு.க. : ஐ.பி.யின் புதல்வர் செந்தில்குமார் கடந்த முறை முதல்முறையாக எம்.எல்.ஏவானார். சுறுசுறுப்பான இளைஞரான இவருக்கு கட்சியினர் மத்தியில் நல்ல பேர் இருக்கிறது. அதே போல் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கீழ்கொண்டார் குடிநீர்த்திட்டத்தை சட்டமன்றத்தில் பேசி செயல்பட வைத்து இரண்டு வருடங்களாக விறுவிறுப்பாக வேலையும் நடக்கிறது. போலீஸ் மற்றும் நகராட்சியின் இம்சைக்கு ஆளான பழனிமலை அடிவார சிறுவியாபாரிகளுக்கு அடையாள அட்டை வாங்கிக் கொடுத்து அவர்கள் நிம்மதியாக "வியாபாரம் செய்வதற்கு வழி வகை செய்துள்ளதாலும் ஐ.பி.யின் மகன் என்பதாலும் செந்திலுக்கே வெற்றிவேல்' என்கிறார்கள் உ.பி.க்கள்.

நத்தம்

அ.தி.மு.க. : மேலிடத்துக்குச் சேரவேண்டியதை பதுக்கியதாலும் கணக்கு வழக்கில் தில்லுமுல்லு திருகுஜாலம் காட்டியதாலும் ஜெ.வின் அக்கினிப் பார்வைக்கு ஆளாகி ஆத்தூரில் நிறுத்தப்பட்டு, ஐ.பெரியசாமியிடம் மண்ணைக் கவ்வினார் இந்த மண்ணின் மைந்தரான நத்தம் விஸ்வநாதன். இப்போது எடப்பாடியையும் பன்னீரையும் சமாளிப்பது பெரிய விஷயம் இல்லை என்பதால் மீண்டும் இங்கே விச்சு விஸ்வரூபம் எடுக்கிறார். மச்சான் விச்சுவிற்காக நத்தம் யூனியன் சேர்மனாக இருக்கும் மச்சினன் கண்ணனின் மேற்பார்வையில் இப்போதே கரன்சி ஆறு ஓட ஆரம்பித்துவிட்டது.

தி.மு.க. : "முதன்முதலில் இத்தொகுதியைக் கைப்பற்றி ஆண்டிஅம்பலத்தை எம்.எல்.ஏ.வாக்கி னோம். ஆனா அவருக்கோ அதை தக்கவைக்கத் தெரியல. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.ன்னாலும் தொகுதிக்கு ஏதாவது செஞ்சாதானே மக்கள் ஓட்டுப் போடுவார்கள்' என்கிறார்கள் உ.பி.க்கள்.

இந்த கேப்பில் கேம் ஆடத் தயாராகிவிட்டார்கள் மாநில செயற்குழு உறுப்பினர் சாணார்பட்டி விஜயன், நத்தம் ஒ.செ.ரத்தினகுமார் ஆகியோர்.

-சக்தி