சிறிய நாடான மியான்மரில் 6கோடி மக்கள். அதற்குள் 135 தேசிய இனங்கள். 1937 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்த பர்மா என்கிற மியான்மரில் பர்மியன்கள் என்கிற இனமக்கள் 60 சதவிதம் வசிக்கின்றனர். மீதியுள்ள 40 சதவித மக்களில் ஷான், கரேன், ராகீன், ஆரக்கனியர்கள், கச்சியன், கயா, சீன், மோக் இன மக்களாவர். பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டுக்கிடந்த மியான்மரை, ஆங் சாங் தலைமையில் 30 முக்கிய தோழர்கள் மக்களை திரட்டி விடுதலை போராட்டம் நடத்தினர். 1948 ஜனவரி 4 ஆம் தேதி பர்மாவுக்கு முழு சுதந்திரத்தை பிரட்டிஷ் அரசு தந்தபோது, அதனை பெற இடைக்கால பிரதமராக இருந்த ஆங் சாங் உயிருடன் இல்லை. உள்நாட்டு கலவரத்தில் அரசியல் போட்டியில் பிரதமர் அலுவல கத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஊ நூ பிரதமராக்கப்பட்டார். தொடர் பிரச்சினைகளால் ஆங் சாங் உருவாக்கிய ஏ.எப்.பி.எ ப்.எல் கட்சி இரண்டாக உடைந்தது.

myanmar

தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். ஜனநாயகம் தள்ளாடியது. 1962 முதல் 2015 வரை சுமார் 55 ஆண்டுகள் இராணுவ ஆட்சிதான். அடக்குமுறையும் கோமாளித்தனமும்தான் மியான்மரின் நிர்வாகம். போதை கடத்தல், பெண்களை விற்பது போன்றவற்றில் இராணுவ அதிகாரிகளே ஈடுபட்டனர். இந்நிலையில், ஆங் சாங் மகள் சூகி வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தபோது, உயிருக்கு போராடிக்கொண்டுயிருந்த தனது தாயை காண தாய்நாடு வந்தார். நாட்டின் நிலைமையை பார்த்து அதிர்ச்சியாகி தேசிய ஜனநாயக லீக் என்கிற கட்சியை தொடங்கிப் போராடியதால், ராணுவ ஆட்சியாளர்கள் அவரை சிறையில் வைத்தனர். 21 ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தபடி போராடினார் சூகி. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, ஆதரவைப் பெற்றார். உலக நாடுகளின் நெருக்கடியால் சூகியின் விடுதலைக்கும், தேர்தல் ஜனநாயகத்திற்கும் மியான்மர் ஒப்புக்கொண்டது. ஆனால் நாடாளுமன்றத்தின் மேலவை, கீழவை இரண்டும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருக்கும்படியானது.

2015 நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி எனப்படும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனால், வெளிநாட்டு பிரஜையை மணந்தார் என்கிற காரணத்தால் சூ கி க்கு அதிபராகும் தகுதியை இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கிய சட்டம் அனுமதிக்கவில்லை. இதனால் நாட்டின் அதிபராக சூகியின் முன்னால் கார் டிரைவரான ஹதின் கியாவ் தேர்வு செய்யப்பட்டார். அரசின் ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர் என்கிற பதவியை உருவாக்கி அதில் சூகி அமர்ந்து ஆட்சி செய்தார். ஆனாலும் ராணுவத்தின் தலையீடு குறையவில்லை. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது மியான்மர் நடத்திய கொடூரத் தாக்குதல் உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சூ கி கட்சியே வென்றது. ஆனால், போலி வாக்காளர்கள் என தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சட்டியது ராணுவம். நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பக்கம் நின்றது. வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தயாரான நிலையில், இந்த பிப்ரவரி 1 அன்று சூகி மற்றும் நாட்டின் அதிபர் யூவின் மென்ட்டையும் வீட்டுச்சிறையில் வைத்துவிட்டது இராணுவம். புதிய எம்.பிக்கள் வீட்டில் இருந்து வெளியே வராதபடி கைது செய்தது.

மியான்மர் இராணுவத்தின் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங், ""நாட்டில் ஓராண்டுக்கு இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட் டுள்ளது. ஓராண்டுக்கு பின் சரியான முறையில் தேர்தல் நடத்தப் பட்டு ஆட்சி ஒப்படைக்கப்படும்'' என அறிக்கை வெளியிட்டார். நாட்டில் தொலைபேசி, இணைய இணைப்பு என அனைத்தும் முடக்கப்பட்டது. ஆட்சியாளர்கள், ஜனநாயகவாதிகள், நாட்டின் உயர்அதிகாரிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

dd

Advertisment

இராணுவத்தின் இந்த செயல்குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரோஸ், அமெரிக்கா அதிபர் பைடன், ஆஸ்த்ரேலியா, பிரிட்டன் போன்றவை கண்டித் துள்ளன. பக்கத்து நாடான இந்தியா அவசரப்படாமல் உன்னிப்பாக கவனிக்கிறது.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவந்தார் சூகி. அதன்படி ராணுவத்தினரை நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் நியமன உறுப் பினர்களாக்கும் எண்ணிக்கை யைப் படிப்படியாகக் குறைத் திட சட்ட திருத்தம் கொண்டு வந்தார். இந்த மசோதாவை இராணுவத்தின் நியமன எம்.பிக் கள், ஆதரவு கட்சி எம்.பிக்கள் இணைந்து தோற்கடித்தனர். 2020 தேர்தலில் இந்த வாக் குறுதியை நாட்டு மக்களிடம் கூறியிருந்தார் சூ கி. கடந்த தேர்தலைவிட 50 இடங்களுக்கு மேல் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது சூகி கட்சி. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அந்த மசோதா நிறைவேற்றினால் அதிகாரம் தங்கள் கையை விட்டு போய்விடும் என்பதாலே தேர்தலில் மோசடி எனக்கூறி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது இராணுவம்.

அதிகார வெறியால், மக்கள் சுதந்திரமாக வாழ மீண்டும் தடை செய்துள்ளது இராணுவம்.