கொரோனா தொற்றால் தாய்-தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகள், அப்படி தாய் அல்லது தந்தை மட்டும் உள்ளவர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், அந்த குழந்தைகளை அரசு டெம்ப்ரவரி கேர் மூலமாகப் பாதுகாத்து வருகின்றனர். மேலும், இப்படி ஆதரவற்றவர்களாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குழந்தைகளின் விவரங்களைச் சேகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல்கள் கிடைத்தால், காவல்துறை அல்லது மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், 1098 என்ற கட்டணமில்லா ‘சைல்டுலைன்’ எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
மருத்துவமனை வட்டாரம், சைல்டுலைன் அமைப்பு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தாய்- தந்தையரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து, மருத் துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக் குழுமம் உள்ளிட்ட ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆதரவற்ற குழந்தைகளைக் கண்டறிந்து பேணிக் காத்து வருகின்றனர்.
இந்திய முழுவதும் இதுபோல் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள தாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெற்றோரும், உறவினர்களும் இல்லாத இரண்டு குழந்தைகள் தற்போது கண்டறியப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை அரசு மருத்துவனையில் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மஞ்சுளா தம்பதியினர் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தனர். இந்நிலை யில் அவர்களது மகளான 13 வயது மோனிகா என்ற குழந்தையை, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சென்னை யுள்ள காப்பகத்தில் பாதுகாத்து வருகின்றார். இதுபோன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 1,113 காப்பகங்கள் இயங்குகின்றன. இவற்றில் சென்னையில் மட்டுமே 74 காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் ஒன்றில்தான் இக்குழந்தையைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகத்தின் மாநில அமைப் பாளர் பேராசிரியர் ஆன்ட்ரூ சேசுராஜ் கூறுகையில், "இவர்கள் காட்டும் கணக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். இவர்களின் வீடுகளுக்கு அரசு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் குழுக்கள் இருக்கிறது. அதற்கான தலைவராக பஞ்சாயத்துத் தலைவர், ஒருங் கிணைப்பாளராக வி.ஏ.ஓ, அப்பகுதி மருத்துவர், சுய உதவிக்குழு எனப் 15 பேர் கொண்ட குழு இருக்கிறது. ஆனால் இந்த குழுவை நடை முறைப்படுத்துவதே இல்லை. இந்தக் குழு இயங் கினாலே உரிய தீர்வைக் கொடுக்க முடியும்.
பெற்றோரின் ஆதரவிழந்த குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்கிறது என்றாலும் கூட, ஆந்திரா அரசு, ஒரு குழந் தைக்கு 10 லட்சம் ரூபாயை அக்குழந்தையின் வங்கிக்கணக்கில் போடுகின்றது.
அதேபோல தமிழக அரசும் செய்யலாம். இல்லையென்றால், தந்தையை இழந்ததால் பொருளாதாரத்தை, வருமானத்தை இழந்த குழந்தைகளின் குடும்பத்தைக் கண்டறிந்து, அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "குழந்தை களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு காப்பகங்கள்தான் சரியானவையாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கான பணமும், பாதுகாப்பும் கிடைக்க அரசு வழிவகை செய்தபோதும், அக்குழந்தைகளுக்கு பெற்றோ ரிடமிருந்து கிடைக்கும் அன்பும், அரவ ணைப்பும் இழப்பாகவே இருக்கும்.
எனவே அத்தகைய ஏக்கமே குழந்தை களுக்கு வராதபடி காப்பகங்கள், அன்போடும், அரவணைப்போடும் அந்த குழந்தைகளிடத்தில் நடந்துகொண்டு, அக்குழந்தைகளை உற்சாகப் படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை தன்னம் பிக்கையுடன் எதிர் கொள்ளும்படி செய்ய வேண்டும்'' என்றார்.
இது தொடர் பாகப் பேசிய சமூகப் பாதுகாப்புத்துறை இயக்குனர் லால்வினா கூறுகையில், "தாய்- தந்தையை இழந்த குழந் தைகளுக்கு அரசு அமைத்துள்ள 7 துறை களடங்கிய குழு மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் விசாரித்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, தான் தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று யாராவது தெரிவித்தால், அவர்களிடம் குழந்தையை ஒப்படைப்பது குற்றமாகும். அதனால் அரசிடம் ஆதரவற்ற குழந்தைகள் குறித்த தகவலைக் கொடுத்தால் போதும். அவர்களை அரசு பாதுகாக்கும்'' என்றார்.
இந்த கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரைப் பறிகொடுத்ததோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள் குறித்த விவரங் களைத் தேடி, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை வழங்கி, அவர்களின் எதிர் காலத்தை உறுதிப் படுத்துவதில் தமிழக அரசு கருணையுள்ளத்தோடு விரைந்து செயல்பட வேண்டும்.