லைப்பை படித்ததும் ஒரு கட்சியின் தேர்தல் நேரத்து போஸ்டர் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பில்லை. இது முழுக்க, முழுக்க கோலிவுட்டில் லேட்டஸ்டாக நடந்த மாற்றம், முன்னேற்றம் பற்றிய சங்கதிகள்தான்.

மா.மு.-01

தயாரிப்பாளர்களிடம் தியேட்டர் அதிபர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக மிகப்பெரும் சீனியர் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் உறவினர் செந்தில் மேனேஜிங் டைரக்டராக இருக்கும் "க்யூப்' நிறுவனம், "தியேட்டர் அதிபர்கள் அமைப்பு', பாரதிராஜா தலைமையிலான "தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு இடையே தற்காலிக சுமூக முன்னேற்றம் ஏற்பட்டு, தமிழ் சினிமா வெளியீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

"31-03-2021 வரை விபிஎஃப் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அதன்பின் முத்தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்' என ஒப்பந்தமாகியுள்ளது.

Advertisment

cinema

மா.மு.-02

முத்தரப்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டதால், தயாரிப்பாளர்கள் மத்தி யிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு வரிசையாக தியேட்டர்களில் படங்கள் ரிலீசாக ஆரம்பித்துள் ளது. வருகிற 27-ஆம் தேதி எஸ்.முத்துக்குமரன் டைரக் ஷனில் விமல்-வரலட்சுமி ஜோடி போடும் ‘"கன்னிராசி', டைரக்டர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் தனஞ்செயனும் இணைந்து ரிலீஸ் செய்யும் "காவல்துறை உங்கள் நண்பன்', காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக அறிமுகமாகும் "அல்டி', சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி ஜோடி போட, ஸ்ரீதர் வெங்கடேசன் என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் பண்ணிய ‘"என் பெயர் ஆனந்தன்'’போன்ற படங்கள் ரீலீசாகின்றன.

Advertisment

மா.மு.-03

cinemaமுன்பெல்லாம் "சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வராமல் சொதப்புவது, அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்க மறுத்து டிமிக்கி கொடுப்பது, தனது படங்களின் ப்ரமோவிற்கே உற்சாக டானிக்குடன் வருவது' என சலம்பல் பார்ட்டியாகவே இருந்தார் விமல். ஆனால் அவரின் நடவடிக்கைகளில் இப்போது மாற்றம் ஏற்பட்டதால் சினிமாவில் முன்னேற்றத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். சிங்காரவேலன் தயாரிக்க, விஜய் சேதுபதி கதை-திரைக்கதை-வசனத்தில் விமல் நடிக்கும் "குலசாமி'’படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

மற்ற டைரக்டர்களைவிட "களவாணி'’படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய லிஃப்ட் கொடுத்த சற்குணத்துடன் நன்றாகவே செட்டாகிவிட்டார் விமல். "வாகைசூட வா', ‘"களவாணி-2'’ என விமலை வைத்து மூன்று படங்கள் எடுத்த சற்குணம் இப்போது நான்காவதாக "எங்க பாட்டன் சொத்து'’(சுருக்கமா இ.பி.எஸ்.) படத்தை எடுத்து முடித்துவிட்டார்.

எந்த சேட்டையும் பண்ணாமல் விமல் கொடுத்த ஒத்துழைப்பால் அறுபதே நாட்களில் தஞ்சை ஏரியாவில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் சற்குணம். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள தேசத்தின் அனிகா விக்ரமன் கமிட்டாகி யுள்ளார். முதல்படம் "ஜாஸ்மின்'’என்றாலும் வருடக் கணக்கில் அந்தப் படம் ஜவ்வாக இழுப்பதால், ’"எங்க பாட்டன் சொத்து'வில் நடித்து முடித்துவிட்டார் அனிகா.

மா.மு.-04

அஞ்சலியை முரட்டுத்தனமாக லவ் பண்ணினார் ஜெய். திடீரென அவர்களின் லவ் பிரேக்-அப் ஆனது. அதனால் அப்செட்டான ஜெய், வீக் எண்ட் பார்ட்டி யில் தாறுமாறாக ஏறி, காரை ஓட்டி சென்னை அடை யாறு பாலத்தின் மீது அடிக்கடி மோதுவார், போலீஸ் ஸ்டேஷன் போவார், ஃபைன் கட்டுவார்.

மீண்டும் அஞ்சலியை லவ் பண்ணினார், மீண்டும் பார்ட்டிக்கு, சலம்பல் என மாறிய தால் இந்தமுறை அஞ்சலியே "ஜெய் கோ' எனச் சொல்லிவிட்டார். அப்படியெல்லாம் இருந்த ஜெய்தான், இப்போது டைரக்டர் சுசீந்திரன் சொல்படி கேட்டு நல்லபிள்ளையாக நடந்து இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நாற்பதே நாட்களில் ஜெய்-திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரை வைத்து படத்தை எடுத்து முடித்த சுசீந்திரன், சிம்புவை வைத்து ‘"ஈஸ்வரன்'’ படத்தையும் எடுத்து முடித்துவிட்டார். மீண்டும் ஜெய்-ஆதி ஹீரோக்களாக நடிக்கும் படத் தையும் ஆரம்பித்துவிட்டார்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

_________

மாற்றம் -முன்னேற்றம் -(ஏ)மாற்றம்!

கடந்த 18-ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, விக்னேஷ்-நயன் கல்யாண சேதி வரும் என நாடே எதிர்பார்த்தது. (நாட்ல மத்ததை எதிர்பார்ப்பதைவிட இதை எதிர்பார்ப்பது எவ்வளவோ பெட்டர்). ஆனால் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன் நடிக்கும் ‘"நெற்றிக்கண்'’ படத்தின் டீசர்தான் ரிலீசானது.