ட்விட்டர் நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்குமான முட்டல் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. 1800 பேரின் ட்விட்டர் கணக்குகளை இந்திய அரசு முடக்கச்சொல்கிறது. ட்விட்டரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக மோசமான பதிவுகளை இட்ட சிலரின் கணக்குகளை முடக்க ஒப்புக்கொள்ளும் "ட்விட்டர்', இந்திய அரசு தந்த பட்டியலில் உள்ள பத்திரிகையாளர்கள், போராட்டக்காரர்கள், ஊடகங்களின் "ட்விட்டர்' கணக்குகளை முடக்க முடியாதென தயக்கம் தெரிவித்தது.

go

கணக்கு முடக்கம் குறித்த நடவடிக்கைகளை தங்களது விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலோசித்தே செயல்படுத்த முடியுமென "ட்விட்டர்' தயங்க, ""அரசுடன் இணங்கிப்போகாமல் இருந்தால் இந்தியாவிலுள்ள "ட்விட்டர்' நிறுவனத்தின் உயரதிகாரிகளைக் கைது செய்ய வேண்டியிருக்கும்'' என இந்தியா எச்ச ரிக்கை விடுத் துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில், ஏற்கெனவே கையறு நிலையில் தவிக்கும் இந்திய அரசு, குடியுரிமைப் போராட்டம், சி.ஏ.ஏ. போராட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் கருத்துப் பரிமாற்றமும், போராட்ட வியூகமும், ஆதரவு திரட்டலும் சமூக ஊடகங்களின் வழியாகவே நடைபெறுகிறது எனக் கருதுகிறது. எனவே இந்த சமூக ஊடகங்களுக்கு லகான் போட்டால் அரசுக்கு மலைபோல் வரும் நெருக்கடிகள் பனிபோல் விலகுமென நினைக்கிறது.

Advertisment

அதற்கேற்றாற்போல் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத் தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பாப் பாடகிரியான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க துணை அதிபரின் உறவினர் மீனா ஹாரிஸ் போன்றவர்களின் ட்வீட் சர்ச்சை எழ... இதைவிட்டால் உற்ற தருணமில்லையென களத்தில் இறங்கிவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு.

கிட்டத்தட்ட 1800 ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு, இதன் பின் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவா ளர்கள் இருப்பதாகக் கூறி அந்தக் கணக்குகள் அனைத்தையும் முடக்கவேண்டும். அரசுக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் பரவலான ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பார்வைக்குச் செல்லக்கூடாதென அதிரிபுதிரியான நிபந்தனைகளை விதித்தது.

மேலும் தகவல் தொடர்பு சட்டத்தின் 69ஏ பிரிவை சமூக ஊடகங்கள் பின்பற்றாவிட்டால், இந்தியாவிலுள்ள ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைக் கைதுசெய்யவேண்டியிருக்குமென கண்டிப்பான தொனியில் சொல்லியுள்ளது.

Advertisment

go

ட்விட்டரின் உயர் அதிகாரிகளான மானிக்யு மெக், ஜிம் பேக்கருடன் புதனன்று நடந்த சந்திப்பில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சக செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார். மேலும், "பேச்சு சுதந்திரத்துக்கும் அதன் வெளிப்பாட்டுக்கு மான முறையான நடைமுறைகள் இந்தியாவில் இருக்கிறது. எனினும் பேச்சு மற்றும் வெளிப் பாட்டுச் சுதந்திரம் முழுமையான தல்ல. நியாயமான வரம்புகளுக்கு உட்பட்டது' என தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ஆர்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான ஜாக் டோர்ஸே, “""ட்விட்டர் எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்தியச் சட்டங்களுடனும், ட்விட்டரின் பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துடனும் பொருந்திப்போவதாக கருதவில்லை. சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்கிய போதும், ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகளின் கணக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது அவர்களது அடிப்படை உரிமையான பேச்சுச் சுதந்திரத்தை முடக்குவதாக அமையும்'' ’எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இதேபோன்ற கட்டுப்பாடுகள் முகநூல், மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்தன. முகநூல் மற்றும் யூ டியூப்பில் அரசு எதிர்ப்புத் தெரிவித்த கருத்துக்கள் உடைய பதிவுகள், வீடியோக்கள் உடனடியாக நீக்கப்பட்டிருக்கின்றன.

இந்தி யாவில் கிட்டத் தட்ட ஏழரைக் கோடி ட்விட் டர் பயன்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். சொல்பேச்சுக் கேட்காத ட்விட்டருக்குப் பதிலடியாக மத்திய அமைச்சர்கள் ப்யூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க.வுக்கு முரட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கும் நடிகை கங்கணா உள்ளிட்டோர் ட்விட்டர் போன்ற மற்றொரு சமூக வலைத்தளமான "கூ' (KOO)வுக்கு மாறியுள்ளனர்.

மேலும் அரசுத் துறைகள், ட்விட்டருக்குப் பதில் "கூ' சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தள நிறு வனமான "கூ' இந்திய நிறுவனம் எனச் சொல்லப்பட்டாலும், அதன் பங்குதாரர்களுள் ஒருவரான ஷன்வெய் சீன முதலீட்டாளர் ஆவார். தற்சமயம் இந்தியரான ஆப்ரமேயா, "கூ' நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக இருக்கிறார்.

தற்போதைய ட்விட்டர் பிரச்சனையால், "கூ' பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் கடந்த வாரத்தில் மட்டும் இந்தச் செயலியைத் தரவிறக்கியுள்ளதாகத் தெரிகிறது.

"விவகாரத்தை நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லுதல் அல்லது மத்திய அரசுடன் இணங்கிச் செல்லுதல் என்ற இரண்டு தீர்வுகளே ட்விட்டர் நிறுவனத்தின் முன் இருக்கும் நிலையில், ஏழரைக் கோடி ட்விட்டர் பயன்பாட்டாளர்களை இழக்க விரும்பாத ட்விட்டர், பெரும்பாலும் வெள் ளைக் கொடியை அசைக்கவே முடிவுசெய்யும்' என பலரும் கருதுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க... சமூக ஊடகங்கள், அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கவே பல்வேறு நாடுகளின் அதிபர்களும் விரும்புகின்றனர். இதை கணக்கில்கொண்டு அரசியல் பதிவுகளுக்கான இடத்தைக் குறைத்து கனடா, இந்தோ னோசியாவில் முகநூல் சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறது.