பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், ஹெரோன் பால், பாபு மூவரிடமும் சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது. அந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது முக்கியமான அந்த கார்.
சி.பி.ஐ. போலீசாரில் ஒருவர், ""பச-02 ஆந.0222. இந்த எண் உள்ள ஆடம்பரக் காரில்தான் அருளானந்தம் டீம் சுற்றி இருக்கிறது. அருளானந்தம் எங்களிடம் அது பற்றிச் சொன்னார். அந்தக் காரில்தான் நாங்கள் பெண்களை ஏமாற்றி ஏற்றுவோம். சீரழிப்போம். அதில் திருநாவுக்கரசு கில்லாடி. சொகுசான அந்தக் காரைப் பார்த்து விட்டு நிறைய பெண்கள் மயங்கிவிடுவார்கள்.
சில பெண்களை சதீஸ் கடையான ஜோக்கர் துணிக் கடையில் இருந்து ஆசை வார்த்தை கூறி தூக்கிக்கொண்டு பாலக்காடு ரோட்டில் கொண்டுபோய் ஒதுக்குப் புறமாக இருக்கும் காட்டிற்குள் போய்விடுவோம். சட்டென எங்களில் ஒருவன் முத்தம் கொடுப்பதை எதிர்பார்க்காத பெண்களை அப்படியே படம் எடுத்துவிடுவோம். அதற்குப் பிறகு மாறி... மாறி உறவு கொள்வோம்.
அந்தப் போட்டோக்களை காட்டி மிரட்டி, பெரிய பெரிய ஆட்களிடம் கூட அனுப்புவோம். அந்தப் பெண்களுக்காக 50 ஆயிரம் கூட பேரம் பேசுவோம். வெறும் 5000 பணத்தை பெண்களிடம் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம். சரக்கு அடித்து விட்டு செம ஜாலியாக சுற்றுவோம்.
பொள்ளாச்சி நகராட்சித் தலைவராக இருந்த கிருஷ்ணகுமார், பாலக்காடு ரோட்டில் இருக்கும் அந்த மஹாலுக்குத்தான் வருவார். பெண்களுடன் இருந்துவிட்டு சரக்கடித்துவிட்டு கிளம்பி விடுவார். பெல்ட்டால் அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு கொள்வதில் ஹெரோன்பால், ரிஸ்வந்த்துக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒருமுறை திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்கு ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டிக்கொண்டு வந்தான். அவன் அந்தப் பெண்ணுடன் இருக்கும்போது நாங்கள் ஒளிந்துகொண்டு வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தோம். பின்னர் நாங்கள் 20 பேர் உள்ளே போய் அனுபவிக்கும்போது அந்தப் பெண் பைத்தியம் போல ஆகிவிட்டாள்'' என்ற அருளானந்தம், "அந்தப் பெண் குடுத்த புகாரிலா எங்களை கைது செய்து இருக்கிறீர்கள்?' என்று எங்களிடமே கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.
பெண் மனச்சிதைவு அடையக்கூடிய அளவுக்கு கொடூரத்தில் ஈடுபட்ட அந்த 20 பேரும் யார், யார் என்று கேட்டதற்கு மட்டும் அருளானந்தம் வாய் திறக்கவில்லை.
""பொம்பள புள்ளைகளை தின்னு இருக்கறானுக... விடவே மாட்டோம். கூடிய சீக்கிரம் வாய் திறக்க வைப்போம்...'' என்கிறார் கோபமாய்.
அந்தக் கார் யார் பெயரில் இருக்கிறது? என நாம் கண்டறிந்தோம். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான ஜேம்ஸ்ராஜாவின் பெயரில்தான் இருக்கிறது. அவருக்கும் இந்த பாலியல் வழக்கில் உள்ள தொடர்பு குறித்து நக்கீரன் ஏற்கனவே சொல்லி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் ராஜாவை நாம் தொடர்புகொண்டு... ""அந்தக் கார் உங்கள் பெயரில்தான் இருக்கிறது. அந்தக் காரில்தான் நீங்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து இருப்பீர்களாமே?'' எனக் கேட்டோம்.
பதறிய அவர்... ""சார்... நான் கூட்டத்துல இருக்கிறேன். நான் உங்களை பின்னால கூப்புடறேன்...'' என்றவர் கூப்பிடவேயில்லை.
சி.பி.ஐ அந்தக் காரை பறிமுதல் செய்து வந்திருக்கிறது. ""அந்தக் காரில் ஏறியவர்கள்தான் இன்னமும் பிடிபடாமல் இருக்கிறார்கள்... எப்படியும் பிடிபடுவார்கள் என்கிறது'' சி.பி.ஐ.
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் தொடர்புள்ள ஆளுங்கட்சிக்குத் தொடர்புள்ளவர்களை நக்கீரனும் தொடர்ந்து தனது புலனாய்வின் வழியாகப் பிடித்துக்கொண்டே இருக்கிறது.