Skip to main content

வாரியம் போய் ஆணையம் வந்தது! தண்ணீர் வருமா?

Published on 19/05/2018 | Edited on 20/05/2018
50 ஆண்டுகளுக்கும் மேலான காவிரி சர்ச்சையை மே 18 அன்று "ஒருவழியாக' முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த பிப்ரவரி மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பதினைந்து வருட காலத்திற்கு யாரும் வழக்குப் போட முடியாது என்கிற எச்சர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்...

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

cauvery issue

 

 



மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைத்துள்ளது.  மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர் செயலராக மத்திய நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஏ.எஸ்.கோயல், உறுப்பினர்களாக மத்திய அரசு மற்றும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கர்நாடக அரசு ஆணையத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

 

இந்த சூழ்நிலையில் இந்த கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகா சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், கேரளாவின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

 

 

 

முதல் கூட்டம் என்பதால் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது, நிரந்தர அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்குவது போன்ற அடிப்படை விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.