ரு பாதிரியாரின் பணி என்பது தேவகுமாரரான இயேசுவின் தியாக வரலாற்றை எடுத்துரைத்து, வேதாகமமான பைபிள் தரும் போதனைகளை மக்களிடம் பரப்புவதுதான். ஆனால், அந்த பாதிரியாரோ வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்.

father

பாரத மாதா, பூமாதேவி, இந்துக் கடவுளர்கள், மோடி, அமித்ஷா என தனக்கு சம்பந்தமில்லாததையும், மாற்று மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி, எங்களுக்குள்ள சாபம் உங்களை அழிக்கும் என ஆவேசம் காட்டிய பாதிரியாரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த 18-ம் தேதி குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கங்கள் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை தலைவரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாதான் இப்படிப் பேசியவர். அவரது பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பாதிரியார்மீது பல காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டன. அதே கூட்டத்தில் அவர் தி.மு.க.வையும் விட்டு வைக்கவில்லை. சேகர்பாபு, மனோதங்கராஜ் எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காம சாமி கும்பிட்டாலும், குடமுழுக்கு நடத்தினா லும் (அவங்களுக்கு) ஓருத்தன் ஓட்டுப் போடமாட்டான். நீங்க ஜெயிச்சது கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் உங்களுக்கு போட்ட பிச்சை. உங்க தலைமையை வச்சி நீங்க ஓட்டு வாங்கல'' என விளாசினார் பாதிரியார்.

Advertisment

father

இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத், இந்து மகாசபை உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டங்களை அறிவிக்க அருமனை காவல் நிலையத்தில் ஜார்ஜ் பொன்னையா மீது 143, 153ஏ, 295ஏ, 505(2), 506(1), 269, (1) என்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் "ஜார்ஜ் பொன்னையா பேசிய கருத்துக்கள் குழித்துறை மறைமாவட்டத்தை பிரதிபலிக்கும் கருத்துக்கள் அல்ல என்பதையும் அவர் சார்ந்திருக்கும் இயக்கத்துக் கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை'யென்று குழித்துறை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அறிக்கை விட்டார்.

இதையடுத்து தக்கலை அருகே பனவிளையில் உள்ள வீட்டில் இருந்து தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் 24-ம் தேதி மதுரை கள்ளிக்குடியில் வைத்து கைது செய்ததோடு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Advertisment

father

இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் அந்த ஆவேச பேச்சின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கிறிஸ்தவ அமைப்பினர் சிலர்.... "ஜார்ஜ் பொன்னையா கனிம வள கொள்ளை மற்றும் மீனவர்களைப் பாதிக்கும் துறைமுகத்துக்கு எதிராகவும் போராடிவருபவர். இந்த நிலையில்தான் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடத்துவதையும் பழைய ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இந்து அமைப்புகள் வந்து தடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இது தி.மு.க ஆட்சி வந்தால் தடுக்கப்படும் என்று நினைத்திருந்த நிலையில் மாத்தூர் பகுதியில் 62 ஆண்டுகளுக்கு முன் உள்ள மலங்கரை கத்தோலிக்க குருசடி ஓன்றை புதுப்பித்து அங்கு பாதிரியார் தங்குவதற்கு ஓரு அலுவலகம் கட்டும்போது, பா.ஜ.க.வினர் வந்து பிரச்சினை செய்தனர். உடனே போலீசாரும் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அதை தடுத்து தற்போது போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதேபோல் பனங்கரை பகுதியில் பெந்தேகொஸ்த் சபை நடத்தி வந்த ஒருவர் இறந்து போனதால்... அதைத்தொடர்ந்து அவருடைய சகோதரர் நடத்த முயன்றபோது அங்கும் பா.ஜ.க. வினர் பிரச்சினை செய்து, தற்போது அந்த சபை சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்படி பல ஆலயங்களில் ஆராதனைகளை தடுத்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டித்துதான் அருமனையில் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு போலீசிடம் அனுமதி கேட்டபோது, அனுமதி தரவில்லை. ஆனால் அதேநாளில் அருமனையில் இன்னொரு இடத்தில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

father

பின்னர்தான் போலீசின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் நடந்தது. அதில் தான் அவர், தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். அதிலும் அவருடைய பேச்சை எடிட்டிங் செய்து திரித்து சமூக ஊடகங்களில் பரவவிட்டதாகவும் ஜார்ஜ் பொன்னையா கூறியிருப்பதோடு, அப்படி அந்தப் பேச்சுக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்த நிலையில்... இந்த கைது நடவடிக்கை என்பது அவசியமற்றது என்றனர்.

இது குறித்து விஸ்வஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன் கூறும் போது.... "ஜார்ஜ் பொன்னையா பேசிய வார்த்தைகள் எல்லாம் அவசியமற்றது. போப் ஆண்டவர் கூட இந்தியா வந்தபோது இந்த பாரத பூமியை முட்டியிட்டு முத்தம் கொடுத்து வணங்கிட்டுத்தான் வந்தார். அந்த பாரததேவியையும் நாட்டையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியது வம்புக்கு இழுப்பதுபோல் உள்ளது.

தமிழ்நாடு கிறிஸ்தவ கவுன்சிலைச் சேர்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஜே.ஸெபா, “"திருவாரூர் மாவட்டம் குடவாசல், சேலம் போன்ற இடங்களில் கிறிஸ்தவ வழி பாட்டு நிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆர்.எஸ். எஸ். மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நிலையில் செயல்படுகின்றனர்'' என் கிறார். "இந்த நடவடிக்கை சமூக அமைதியை குலைக்கும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். மீது எடுக்க முடியுமா?' என்றும் கேட்கிறார்.

ஜார்ஜ் பொன்னையா சொன்னதுபோல் தற்போது அவர்களின் ஓட்டை வாங்கிய சாதகமான ஆட்சி நடக் கிறது என்பதால் என்ன வேணும்னாலும் நாம் பேசலாம், இவர்களைச் சீண்டி விட்டுட்டே இருக்கலாம் என்ற நோக்கமேதான். பனங்கரை சர்ச் பிரச்சினை என்பது அவர் களுக்குள் யார் நடத்துவது என்ற கோஷ்டி பிரச்சினை என்பதால் கோர்ட் சீல் வைத்துள்ளது. அதை ஒரு பிரிவின ருக்கு ஆதரவாக ஜார்ஜ் பொன்னையா செயல்பட்டு அருமனையில் இருந்து கிறிஸ்தவர்களை திரட்டி ஊர்வல மாக சென்று அந்த சர்ச் முன் ஜெபம் நடத்த திட்டமிட்டி ருந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதை தடுக்கும்விதமாக பூட்டிக்கிடக் கும் சர்ச்சை திறந்தால் தக்கலை மணலியில் பூட்டி கிடக்கும் பிள்ளையார் கோவிலையும் திறப்போம் என நாங்களும் ஊர்வலத் துக்கு அனுமதி கேட்டோம். மற்றபடி அவர்களுடைய எந்த சர்ச்சுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை. காவல் துறைதான் அவர்களை தடுத்திருக்கிறது.

கோவிலுக்குள் சட்டை போடாமல் சென்ற அமைச்சரை எவ்வளவு அசிங்கமாக "துணியில்லாமல் போனார்' என இந்துக்கள் புண்படும் விதமாக பேசியிருக்கிறார். இதெல் லாம் கண்டிக்கத்தக்கது'' என்றார்.

தேர்தல் நேரத்தில் தி.மு.க.வை "இந்து விரோத கட்சி' என சித்த ரிப்பதற்கு பா.ஜ.க.வும் அதனுடன் கூட்டணி சேர்ந்திருந்த அ.தி.மு.க.வும் பெரும் முயற்சி எடுத்தன. சிறு பான்மை சமுதாயத்தவரான முஸ்லிம் கள், கிறிஸ்தவர்களை தி.மு.க. ஆதரித்ததும், அவர்களின் நிகழ்வுகளில் பங்கேற்றதும் அரசியல்ரீதியாக எதிரணி யால் கையாளப்பட்டது. ராஜேந்திர பாலாஜி போன்ற அ.தி.மு.கவின் அமைச்சர் கள், தி.மு.க. எதிர்ப்பு என்ற பெயரில் சிறு பான்மையினருக்கு எதிராக செயல்பட்ட னர். பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை போன்றவை நடத்தப்பட்டன. கந்த சஷ்டி கவசம் சர்ச்சையில் தி.மு.க.வை வேண்டு மென்றே இழுத்தனர். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு தி.மு.க. தனது தேர்தல் பயணத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெ. ஆட்சிக் காலத் திலும், அதன்பிறகும் இந்துத்வா மன நிலை வெகுவாக வளர்ந்துள்ளது. ஜெ. இல் லாத நிலையில், அ.திமு.க.வை கரைத்து, பா.ஜ.க. தனது அரசியலை செய்ய நினைக் கிறது. எதிர்காலத்தில் தி.மு.க.-பா.ஜ.க. என்ற அரசியல் சூழல் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என பா.ஜ.க.வின் மேலிடம் போடும் கணக்குக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் மற்றவர்களும் வியூகம் வகுத்து, தி.மு.க. அரசுக்கு நெருக் கடியை உண்டாக்கத் தயாராகி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையை உணரா மல், "பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியிருப்பதும் அவரைப் போல கைதாகியுள்ள அருமனை கண்டனக் கூட்டத்தில் அவதூறாகப் பேசிய ஸ்டீபன் போன்றவர்களும் வெள்ளை அங்கியில் நேரடியாகவோ மறைமுக மாகவோ பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்களாக மாறக்கூடாது' என்கிறார்கள் அரசியல் சூழல் அறிந்த கிறிஸ்தவ இயக்கத்தினர்.