சேலம் ஆவினில், பால் விற்பனைக்கு புதிதாக விநியோகஸ்தர்களை நியமிக்கும் நடவடிக்கையால், காலங்காலமாக பால் விற்பனையில் ஈடுபட்டுவரும் முகவர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன.

avin

சேலத்தை அடுத்த சித்தனூரில் ஆவின் பால் பண்ணை இயங்கிவருகிறது. இங்கு முகவர்களுக்கு லிட்டருக்கு 5 சதவீதம் கமிஷனும், அரை சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. காலங்காலமாக முகவர்கள் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக விநியோகஸ்தர்களை நியமிக்கும் வேலைகளில் இறங்கி யுள்ளது சேலம் ஆவின்.

இவ்வாறு நியமிக்கப்படும் விநியோகஸ்தர்களுக்கு லிட்டருக்கு 8.5 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. விநியோகஸ்தர் நியமனமும், அவர்களுக்கான கூடுதல் கமிஷனும்தான் இப்போது சேலம் ஆவினில் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணாசுந்தர், பொதுச்செயலாளர் ஜவஹர், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் நம்மிடம்...

Advertisment

''உள்ளூர்ச் சந்தையில் பால் விற்பனையை அதிகரிப்பதற்காக சேலம் ஆவின் கூட்டுறவு நிறுவனம், புதிதாக விநியோகஸ்தர்களை வேகமாக நியமித்துவரு கிறது. இதுவரை ஆவின் பால் செல்லாத இடங்களிலும், தனியார் பால் விற்பனை அதிகமாக உள்ள இடங்களிலும்தான் ஆவின் பாலை புரமோட் செய்வதற்காக விநியோகஸ்தர்களை நியமிக்க வேண்டும். ஆனால், ஆவின் நிர் வாகமோ ஏற்கனவே முகவர்கள் பால் விற்பனை செய்துவரும் இடத்திலேயே விநியோகஸ்தர்களை நியமித்துவருகிறது. சேலம் ஆவினின் முன்னாள் பொது மேலாளர் விஜய்பாபு, இப்போ துள்ள பொதுமேலாளர் நர்மதா தேவி ஆகியோர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் காசு வசூலித்துக்கொண்டு விநியோகஸ் தர் உரிமம் வழங்கியுள்ளனர்.

avin

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விநியோகஸ்தர்கள், ஏற்கனவே அங்கு உள்ள ஆவின் முகவர்களின் வாடிக்கையாளர்களிடமே பாலை விற்கின்றனர். ஒரு முகவர், ஒரு நாளைக்கு 2000 லிட்டர் பால் விற்பனை செய்ய வேண்டுமெனில் அவருக்கு 30 வருட அனுபவம் தேவைப்படுகிறது. ஆனால் குறுக்குவழியில் விநியோகஸ்தர் உரிமம் பெற்றவர்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடமே பாலை விற்கின்றனர். இப்படிச் செய்வதால் ஏற்கனவே உள்ள முகவர்களுக்கு தொழில் வாய்ப்பு பறிபோகிறது.

Advertisment

புதிய விநியோகஸ்தர்கள், ஏற்கனவே உள்ள முகவர்களை அணுகி இனிமேல் அன்றாடத் தேவைக்கான பாலை தங்களிடம் தான் கொள்முதல் செய்யவேண் டும் என வற்புறுத்துகிறார்கள்.

விநியோகஸ்தர்களுக்கு 8.5 சதவீதம் கமிஷன் வழங்கப்படுவதால், அவர்கள் எம்.ஆர்.பி. விலையைக் காட்டிலும் நுகர்வோருக்கு விலை குறைத்து விற்பனை செய் கின்றனர். இதனால் ஏற்கனவே உள்ள 600 ஆவின் பால் முகவர்களின் விற்பனை பாதித்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவின் - விநியோகஸ்தர்கள் - நுகர்வோர் என்ற நிலையை உருவாக்க நிர்வாகம் முயன்றுவருகிறது. இந்நிலை தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர்கள் வைப்பதுதான் சட்டம் என்ற நிலை ஏற்படுவதோடு, ஆவின் நிறுவனத்தையே முடக்கும் அபாயமும் உள்ளது.

அதேநேரம், ஆவின் பால் விற்பனை சென்று சேராத இடங்களில் விநியோகஸ்தர்களை நியமிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அவர்களுக்கு வழங்குவதுபோல முகவர்களுக்கும் 8.5 சதவீதம் கமிஷன் வழங்கவேண்டும். முகவர்களுக்கும் விநியோகஸ்தர் உரிமை வழங்கவேண்டும். இல்லாவிட்டால், விநியோகஸ்தர் நடை முறையை உடனடியாக கைவிடவேண்டும்,'' என்கிறார்கள் ஆவின் முகவர்கள்.

avinஇன்னும் சில முகவர் களோ, ''விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்களுக்கு கடன் அடிப்படையிலும், விலை குறைவாகவும் பாலை விற்கமுடியும். அப்படி நடந்தால், ஆவின் பிஸினஸ் அடுத்த 10 ஆண்டுகளில் மொத்தமாகப் படுத்துவிடும். சென்னையில் ஏற்கனவே இப்படியான திட்டம் நடைமுறையில் இருக்கு. அதையே எல்லா இடங்களிலும் அமல்படுத்த பார்க்கிறார்கள். விநியோகஸ்தர்கள் நியமனம் என்பது லஞ்சம் ஊழலுக்குதான் வழிவகுக்கும்'' என்றனர்.

பால் முகவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து சேலம் ஆவின் பொது மேலாளர் நர்மதா தேவியிடம் கேட்டபோது, ''இப்போது ஆவினில் விநியோகஸ்தர் உரிமம் பெற்றவர்கள் அனைவருமே நான் இங்கு பொது மேலாளராக வருவதற்கு முன்பே நியமிக் கப்பட்டவர்கள்தான். வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கில் விநியோகஸ்தர்களை நியமிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆவின் நிர்வாக இயக்குநரின் வழிகாட்டுதல்படியே விநியோதஸ்தர் நியமனங்கள் நடக்கிறது. புதிதாக விநியோகஸ்தர்களை நியமிக்கும்போது, ஏற்கனவே உள்ள முகவர்களுக்கு ஏதேனும் பாதிப்புள்ளதா என அவர்களிடமும் கருத்து கேட்ட பிறகு நியமிக்கப்படுவர். இது தொடர்பாக முகவர்களிடமும் பேசிவிட்டோம்,'' என்றார்.

சேலம் ஆவின் நிறு வனத்தின் முன்னாள் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் கேட்டபோது, ''நான் சேலம் ஆவினிலிருந்து மாறுதலாகி 10 மாதங்கள் ஆகின்றன. இப்போது என் பெயரைப் பயன்படுத்து வதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிகிறது. நான் அங்கு பொது மேலாளராக இருந்தபோது, அதுவரை நட்டத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்துக்கு 21 கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டுதான் வந்தி ருக்கிறேன். விநியோகஸ்தர் நியமனத்திற்காக பணம் பெற்றதாகச் சொல்வதில் உண்மை இல்லை,'' என்றார்.