நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியின் உள்ளாட்சித் தேர் தல் 2-ம் கட்டமாக 9-ம் தேதி நடக்க விருந்த நிலையில்... அந்தப் பகுதியின் ஊராட்சிப் பகுதிகளில் பிரச்சாரம் அனல் பறந்தது. ராதாபுரம் தொகுதி யின் ஆவரைக்குளத்தைச் சேர்ந்தவர் தி.மு.க.வின் நெல்லை எம்.பி. ஞான திரவியம். தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் 12-ம் வார்டான ஆவரைக் குளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, எம்.பி.யின் மகனான சேவியர் செல்வ ராஜ் போட்டியிட, அவரை எதிர்த்து பா.ஜ.க.வின் பெண் வேட்பாளரான லிமிதா சுரேஷ் போட்டியிட்டார்.

dmkmp

இதே வார்டில் குடியிருப்பவர் பாஸ்கர். இவரது குடும்பத்திற்கும் எம்.பி.யின் குடும்பத்திற்கும் ஏற்கனவே ஆகாது. கடைசிக்கட்டப் பிரச்சார நாளான அக்டோபர் 07 அன்று, ஆவரைக்குளம் பிரச்சாரத்திலிருந்த பா.ஜ.க.வின் தொண்டர் பாஸ்கர், எம்.பி.யின் வீட்டுக்கு முன்பாகப் பிரச்சாரக் குழுவுடன் திட்டமிட்டு வந்திருக்கிறார். ஞானதிரவியம் பற்றி தனிப்பட்ட வகை யில் தேவையில்லாமல் பேச, இதனால் சூடாகியிருக்கிறார் ஞானதிரவியம்.

பிரச்சாரம் முடிந்த அன்றைய தினம் இரவு, எம்.பி.யின் தரப்பினர் பாஸ்கரைத் தேடியிருக்கிறார்கள். அவர் தன்னுடைய சகா ஒருவருடன் அருகிலுள்ள காவல்கிணறு நகரின் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தெரியவர, ஞான திரவியம் தன்னுடைய காரில் சிலருடன் அங்கு போயிருக்கிறார். அது சமயம் ஞானதிரவி யத்திற்கும் பாஸ்கருக்கும் வாக்குவாதமாகி, பின்பு கைகலப்பாகியிருக்கிறது. இதையடுத்து ஞானதிரவியம் உள்ளிட்ட 4 பேர் தன்னைத் தாக்கியதாகப் பணகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பாஸ்கர்.

Advertisment

நடவடிக்கையில்லாத நிலையில், தகவலறிந்த பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன் அங்கு வந்திருக்கிறார். அன்றைய இரவில் கட்சித் தொண்டர்களுடன் நெல்லை பாரதியார் சிலையின் முன்பு, எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவும் வழக்குப் பதியவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன்பின்னர், இரவில் நெல்லை ஜங்ஷன் காவல் நிலையம் சென்றவர், எம்.பி. மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வற்புறுத்தி அங்கேயே இருந்தார். அங்கேயே தரையில் படுத்து உறங்கியவர், விடிந்த பிறகே கிளம்பிச் சென்றிருக்கிறார்.

தொடர்ந்து, பணகுடி காவல் நிலையத்தில், எம்.பி. ஞானதிரவியம் உட்பட அவரது தரப்பினர் மீது எப்.ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டது. மேலும், ஞானதிரவியம் தரப்பினர் பாஸ்கர் மீது புகார் கொடுத்ததன் அடிப்படையிலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய, ஆக... இரண்டு தரப்பிலுமாக எப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. ஆளும் கட்சியின் எம்.பி. மீது எப்.ஐ.ஆர். ஆனது ஏக அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

Advertisment