Skip to main content

ACTION REPORT சாமி கும்பிடும் நேரத்தில் தாலி கட்டும் வினோதம்!

Published on 16/05/2018 | Edited on 17/05/2018
-குழந்தை திருமணத்தை தடுத்த நக்கீரன்! ""யாருடா நீ?! எங்கடா இருக்க? தைரியம் இருந்தா வாடா... இல்லனா… அட்ரஸ் சொல்லுடா நாங்க நேர்ல வர்றோம்''…-நமது சீக்ரெட் செல்போன் நம்பருக்கு தொடர்ந்து இயக்குநர் ஹரி -சூர்யா படங்களில் ""ஆய்… ஊய்'' என ரத்தம் கொப்பளிக்கப் பேசுவதுபோல்… மிரட்டல்கள் நம் காதுக்கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி.. அரசுப் பள்ளி மாணவியின் வீட்டை தேடிச் சென்ற அரசு அதிகாரிகள்!.

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Echo of Nakkeeran internet news .. Government officials who went in search of the house of a government school student

 

ஒரு கிராமத்தின் கட்டமைப்பு, நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், ஏழை கிராம மக்கள் எளிமையாக பயனடைவது என்பது குறித்து கிராமத்தின் புள்ளிவிவரத்தை ஆய்வுசெய்து அதை மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் என அதிகாரம் படைத்த அனைவருக்கும் அனுப்பிவிட்டு காத்திருந்த மாணவியின் குரல் அரசுகளை எட்டவில்லை. அதனால் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார் அந்த அரசுப் பள்ளி மாணவி கவுரி.

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா உள்ளடங்கிய கலியரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகள் கவுரி பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார். மாணவி கவுரி, தான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது தயாரித்த ஆய்வறிக்கையைப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கடந்த வெள்ளிக்கிழமை "அரசுகளுக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பள்ளி மாணவி" என்ற தலைப்பில் மாணவியின் முதல் பேட்டியை நக்கீரன் இணையத்தில் விரிவான முழு வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.

 

இந்நிலையில்தான், திங்கள்கிழமை காலை மாணவியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சியரக அலுவலர், “தங்கள் ஆய்வறிக்கையை தலைமைச் செயலகத்தில் கேட்கிறார்கள். எங்கள் அதிகாரி வருவார் கொடுத்தனுப்புங்கள்” என்று கூறியுள்ளார். அதன்படி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர் கலியரான்விடுதிக்குச் சென்று மாணவியின் ஆய்வறிக்கை புத்தகத்தை வாங்கியுள்ளார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு கூட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபற்றி பேச வந்த எங்க அப்பாவிடம் வேறு அலுவகம் போகச் சொன்னாங்களாமே. இப்ப தேடி வந்து வாங்குறீங்களே” என்று மாணவி கவுரி புத்தகம் வாங்க வந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

 

அதற்கு அவர், “மேல் அதிகாரிகள் சொன்னாங்க, வாங்க வந்தேன்” என்று சொல்லி புறப்பட்டுள்ளார். 3 வருடங்களாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிய ஆய்வுப் புத்தகம், நக்கீரன் செய்தியால் அதிகாரிகளே தேடிவந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ளது. மாணவியின் ‘கிராம ஆட்சியர் திட்டம்’ பற்றி அதிகாரிகள் ஆய்வுசெய்து நடைமுறைப்படுத்தட்டும்.

 

 

Next Story

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; நாகச்சேரி குளத்தில் பிளாஷ்டிக் கழிவுகள் அகற்றம்

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் நாச்சேரிகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார்குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளது. இந்த குளங்களில் கோடை வெய்யிலின் தாக்கத்தால் தண்ணீர் வற்றி காய்ந்து  உள்ளது. இதில் நாகச்சேரி குளம் பெரிய குளமாகும். இந்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளது.

p

பிளாஸ்டிக் கழிவுகளால் குளத்தில் நிற்கும் தண்ணீர் பூமிக்கு அடியில் செல்லாது. குளம் வற்றியுள்ள இந்த நேரத்தில் பிளாஷ்டிக் கழிவுகளை எடுக்க அரசு முயற்சி எடுப்பது இப்போது நடக்காது. எனவே  தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் முன் வரவேண்டும் என்று கடந்த 17-ந்தேதி இரவு நக்கீரன் இணயதளம் படத்துடன் செய்தியை பதிவு செய்தது. 

 

p

 

இந்த செய்தியை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனைதொடர்ந்து சனிக்கிழமையென்று சிதம்பரம் நகரத்தில் உள்ள டைமிங் கெல்ப் என்ற அமைப்பின் தலைவர் வினோத் தலைமையில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து நாகச்சேரி குளத்தில் இருந்த 200 கிலோவுக்கு மேலுள்ள  பிளாஷ்டிக் கழிவுகளை அப்புறபடுத்தினர். ஞாயிற்று கிழமையும் இந்த பணிகள் தொடரும் என்று கூறியுள்ளனர். இவர்களின் செயலை பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.